Saturday, November 23, 2024
HomeGmailகூகுள் அட்சென்ஸ் இல் விளம்பரம் தோன்றவில்லை | Blank ads issue in Google adsense

கூகுள் அட்சென்ஸ் இல் விளம்பரம் தோன்றவில்லை | Blank ads issue in Google adsense

blank ad issue in Adsense

Blank Ad Issue

காரணமே இல்லாமல் லட்சக்கணக்கான adsense மூலமாக இணையதளங்களில் விளம்பரங்கள் காண்பிக்கப்படுவதில் பிரச்சனை எழுந்திருக்கிறது. இதனால் பல மில்லியன் கணக்கான இழப்புகளை கூகுள் மற்றும் இணையதளங்கள் சந்தித்து இருக்க்கின்றன.

மில்லியன் கணக்கான பப்ளிசர்களை கொண்டிருக்கக்கூடிய Google Adsense இல் மிகப்பெரிய பிரச்சனை எழுந்திருக்கிறது. இணையதளங்களில் குறிப்பிட்ட Layout களில் விளம்பரங்கள் தோன்றாமல் காலியாகவோ (Showing Blank) அல்லது தன்னிச்சையான விளம்பரங்களோ (Default Ad) மட்டுமே தான் தோன்றுகின்றன. இதற்கான காரணம் என்னவென்று கூட கூகுள் நிறுவனத்தின் சார்பாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருப்பதாக இணையதள நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

இணையதளத்திற்கு வந்தவர்களின் எண்ணிக்கை (Page View) நூறு எனில் Impressions எண்ணிக்கை என்னவோ 3 அல்லது 4 ஆகத்தான் காட்டப்படுகிறது. ஒட்டுமொத்தமாக பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது என்பதனை அறிந்திடாமல் பலர் Ad Code ஐ சரி செய்வது உள்ளிட்ட பல முயற்சிகளை மேற்கொண்டனர்.

ஒவ்வொருவரும் தங்களது இணையதளத்தில் ஏற்பட்ட பிரச்சனை குறித்த தகவல்களை இந்த Google Forum லிங்கில் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் இதுவரை எந்த ஒரு தீர்வும் கிட்டப்படவில்லை.

blank ad issue in Adsense

நமது இணையதளத்திலும் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பொதுவாக Blank Ad அல்லது Default Ad எப்போது இணையதளத்தில் வருமெனில், உங்களது அக்கவுண்ட்டை தற்காலிகமாக Adsense பிளாக் செய்திருந்தாலோ அல்லது குறிப்பிட்ட அந்த பக்கத்தில் ஏதேனும் Policy Violation போன்றவை நடைபெற்று இருந்தாலோ அல்லது PIN எண்ணை பதிவிடாமல் இருந்தாலோ தான் இப்படிபட்ட பிரச்சனை ஏற்படும். ஆனால் இதில் எதுவுமே இல்லாமல் இணையதளத்தில் விளம்பரங்கள் தோன்றுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

எப்போதும் மாற்றங்களை செய்தால் அல்லது நமது அக்கவுண்டில் பிரச்சனை எழுந்தால் நோட்டிபிகேஷன் மூலமாக நமக்கு தெரியப்படுத்துவார்கள். ஆனால் இந்த பிரச்சனைக்கு அப்படி எதுவுமே இன்னும் செய்யப்படவில்லை. இப்படி ஒரு பிரச்சனை எழுந்திருக்கிறது என பல்லாயிரக்கணக்கானோர் புகார் அளித்தும் கூட கூகுள் நிறுவனத்தின் சார்பாக பிரச்சனையை சரிசெய்ய நடவெடிக்கை எடுக்கப்படவில்லை. குறிப்பாக யாரை தொடர்வுகொள்ளவேண்டும் என்பது கூட தெரியவில்லை. Adwords க்கு தனியாக நேரடி சப்போர்ட் டீமை வைத்திருக்கும் கூகுள் Adsense க்கு அப்படி ஒரு டீமை வைத்திருக்காதது வருத்தமளிக்கிறது.

இப்படி ஒரு பிரச்சனை ஒட்டுமொத்த சில இணையதளங்களுக்கு மட்டும் ஏற்படவில்லை என்பதும் பல இணையத்தளங்கள் இதனால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தகுந்த விசயம். இதனால் விரைவில் Blank ads issue தீர்க்கப்படுமென்று எதிர்பார்க்கிறோம்.

Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular