Sunday, November 10, 2024
HomeAppsகோடிக்கணக்கான பேரின் பாஸ்வேர்டு 123456 | ஆய்வில் அதிர்ச்சி | Avoid using worst Password

கோடிக்கணக்கான பேரின் பாஸ்வேர்டு 123456 | ஆய்வில் அதிர்ச்சி | Avoid using worst Password

Avoid using worst Password

அண்மையில் இணைய அச்சுறுத்தலுக்கு உள்ளான கணக்குகளை ஆய்வு செய்ததில் 23.2 மில்லியன் கணக்குகளின் பாஸ்வேர்டு 123456 தானாம்

Read this also :

உங்களது பாஸ்வேர்டுகளை பாதுகாத்துக்கொள்வது எப்படி?

Click Here 

உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? எப்படி தெரிந்துகொள்வது?

Click Here 

நீங்கள் இறந்த பின்னர் கூகுள் கணக்கு என்னாகும்?

Click Here

Report from NCSC

tiktok ban

தொழில்நுடப் உலகில் பெரும்பாலான தகவல் மற்றும் பண பரிமாற்றங்கள் அனைத்தும் இணையத்தில் வாயிலாகவே மேற்கொள்ளப்படுகிறது. குறைந்தபட்சம் ஜிமெயில் கணக்கையாவது இன்று ஒருவர் வைத்திருப்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. NCSC எனப்படும் பிரிட்டன் சைபர் பாதுகாப்பு மையம் நடத்திய ஆய்வில் இன்றளவும் 123456 என்பது போன்ற எளிமையான பாஸ்வேர்டுகளை கோடிக்கணக்கான பேர் பயன்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர். 

அண்மையில் இணைய அச்சுறுத்தலுக்கு உள்ளான கணக்குகளை ஆய்வு செய்ததில் 23.2 மில்லியன் கணக்குகளின் பாஸ்வேர்டு 123456 தானாம். 

இதுதவிர எளிமையாக கண்டறிக்கக்கூடிய அதே சமயம் அதிகம்பேரால் பயன்படுத்தக்கூடிய 10 பாஸ்வேர்டுகளை வெளியிட்டுள்ளது NCSC,

  • 123456
  • 123456789
  • qwerty
  • password
  • 111111
  • 12345678
  • abc123
  • 1234567
  • password1
  • 12345

நாம் திரைப்படங்களில் பார்ப்பதை போல ஒரு கணக்கின் பாஸ்வேர்டு என்ன என்பதனை கண்டறிய பல குறுக்கு வழிகள் பயன்படுத்தப்படும். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்டுகளை பயன்படுத்தி தான் முதலில் முயற்சி செய்வார்கள். நீங்களும் எளிமையான பாஸ்வேர்டுகளை பயன்படுத்தி இருந்தால் உங்களது கணக்கினை எளிமையாக ஹேக் செய்துவிடுவார்கள். 

பாஸ்வேர்டு வைத்திடும் போது வெறுமனே Upper case , Lower  Case எழுத்துக்களை பயன்படுத்துவதனை காட்டிலும் இரண்டு மூன்று வார்த்தைகளை இணைத்து பாஸ்வேர்டுகளை உருவாக்கலாம் என ஆலோசனை அளிக்கிறார்கள் நிபுணர்கள். அதேபோல பாஸ்வேர்டுகளில் உங்களது பிறந்த தேதி , ஆண்டு , பெயர் முதலியவற்றை பயன்படுத்துவதனை தவிர்க்கலாம் எனவும் ஆலோசனை கூறுகிறார்கள். 

உங்களது அக்கவுண்ட் பண பரிவர்த்தனை உள்ளிட்ட முக்கிய தகவல்களுக்காக பயன்படுத்தப்படாமல் இருக்கலாம், ஆனால் பிறரால் தவறான செயல்களுக்கு பயன்படுத்தப்பட வாய்ப்பு ஏராளமாக இருக்கிறது. ஆகவே பொறுப்புணர்வுடன் பாஸ்வேர்டுகளை வைத்திருப்பது அவசியமான ஒன்று. 

நம்மை இந்த பிரச்சனையில் இருந்து காப்பாற்றிடவே Google நிறுவனம், Chrome பிரவுசரில் இயங்கக்கூடிய “Password Checkup” என்ற Add – On  ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

 

Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

2 COMMENTS

  1. […] ஹேக்கிங் என்றாலே யாருடைய தகவலையோ திருடுவது என்று தான் பலரும் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் அது மட்டுமே ஹேக்கிங் அல்ல.  Ethical hacking என்ற ஒரு பாடப்பிரிவே தற்போது இருக்கிறது. இவர்களின் பணி என்னவென்றால் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தயாரிக்கின்ற மென்பொருள்களில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கின்றனவா என்பதனை கண்டறிந்து கூறுவது தான்.  […]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular