இந்தியாவில் இருக்கக்கூடிய டெல்லியில், தூய்மையற்ற காற்றினை சுவாசிப்பதன் காரணமாக மனிதனின் சராசரி ஆயுட்காலம் 6.3 ஆண்டுகள் குறைந்து விட்டதாக கூறுகிறது ஆய்வறிக்கை. உலகின் பல நாடுகளும் இதுபோன்ற பிரச்சனையை எதிர்கொண்டிருக்கக்கூடிய சூழலில் காற்றில் இருக்கும் துகள்களை கவர்ந்து இழுத்து காற்றினை சுத்தப்படுத்தும் டவர் (Smog Free Tower) அமைப்பினை கண்டறிந்து இருக்கிறார் டான் ரோஸ்கார்டி எனும் கண்டுபிடிப்பாளர்.
இந்த கருவி எப்படி செயல்படுகிறது?
எதிர்கால உலகிற்கு எப்படி இது அவசியமான கருவியாக மாறபோகிறது?
என்பதனை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
Daan Roosegaarde’s Smog Free Tower இதற்கான தேவை என்ன?
காற்றில் ஏற்படும் மாசின் காரணமாக மிகப்பெரிய மக்கள் மிகப்பெரிய ஆரோக்கிய சவாலில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து இருக்கிறது. சுவாசக்கோளாறு காரணமாக மட்டும் ஆண்டுக்கு 7 முதல் 10 மில்லியன் அளவிற்கு இறப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவனிக்கப்பட வேண்டியது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காற்று மாசின் காரணமாக ஆண்டுக்கு 53000 பேர் இறப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
——————————————————————————————
Advertisement :
——————————————————————————————
சீனாவின் பெய்ஜிங் தான் உலக அளவில் காற்று மாசில் முன்னனியில் இருக்கிறது. இங்கு உலக சுகாதார நிறுவனம் அறிவித்த அளவினை விட 17 மடங்கு அதிகமாக காற்று மாசு அளவிடப்பட்டிருக்கிறது. இந்தியாவின் டெல்லி பகுதி, காற்று மாசு பிரச்சனையை அடிக்கடி சந்தித்து வருகிறது. இந்தியாவின் பல முக்கிய நகரங்களிலும் காற்று மாசு தீவிரமாக இருந்து வருகிறது.
காற்று மாசுவிற்கு மிக முக்கிய காரணியாக இருப்பது தொழிற்சாலைகளும், வாகனங்களும் தான். அதற்காக அனைத்தையும் மூடிவிட முடியுமா? அனைத்து வாகனங்களையும் நிறுத்திவிட முடியுமா? இவற்றில் எதனை செய்வதும் கடினமான ஒன்று தான். ஆகவே தான் இதற்கு மாற்று தீர்வினை கண்டறிந்து இருக்கிறார் டான் ரோஸ்கார்டி எனும் கண்டுபிடிப்பாளர்.
காற்றை சுத்தப்படுத்தும் கருவி எப்படி செயல்படும்?
2.5 மைக்ரோ மீட்டர் விட்டம் கொண்ட துகள்கள் மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகிற துகள்கள். இந்த அளவினை விட பெரிய துகள்கள் தரையிலேயே தங்கி விடுகின்றன. ஆனால் கண்களுக்கு எளிதாக புலப்படாத 2.5 மைக்ரோ மீட்டர் விட்டம் கொண்ட துகள்கள் காற்றில் மிதந்து திரிகின்றன. நாம் சுவாசிக்கும் காற்றில் மிதந்து வருகின்ற மாசு துகள்களை சுவாசிக்கும் போது அவை நுரையீரலில் தங்கி பிரச்சனைக்கு வித்திடுகின்றன. நுரையீரல் திசுக்களில் ஊடுருவி செல்லும் இவை ரத்தத்திலும் கலந்துவிடுகின்றன.
டான் ரோஸ்கார்டி எனும் கண்டுபிடிப்பாளர் , ENS டெக்னாலஜி மற்றும் டெல்ப்ட் பல்கலைக்கழகம் இவை இணைந்து டவர் வடிவிலான காற்றினை சுத்தப்படுத்தும் கருவியை உருவாக்கி இருக்கிறார்கள். நாம் இந்த டவரை சுத்தமான காற்று தேவைப்படுகிற இடத்தில் வைக்க வேண்டும். இந்த கருவியினை ON செய்தவுடன், சுற்றுப்புறத்தில் இருக்கின்ற காற்றினை உறிஞ்சும். அப்படி உள்ளே நுழையும் போது காற்றில் இருக்கக்கூடிய துகள்கள் மின்தன்மை அடைகின்றன. உள்ளே இருக்கும் மின்தன்மை கொண்ட பொருள்களை உறிஞ்சும் அமைப்பின் மூலமாக மின்தன்மை கொண்ட துகள்கள் ஏற்கப்படுகின்றன.
பின்னர் சுத்தமான காற்று மீண்டும் அதே பகுதியில் விடப்படும். ஒருமணிநேரத்திற்கு 30,000 cubic meter அளவிலான காற்றினை சுத்தப்படுத்திட முடியும். இதற்கு ஆகிற மின்சார தேவை 1,400 Watts தான். அளவில் மிகப்பெரிய டவர்களை அமைப்பதன் மூலமாக இன்னும் அதிக அளவிலான காற்றினை சுத்தப்படுத்திட முடியும் என்கிறார்கள் இதனை கண்டறிந்தவர்கள்.
எப்படி தண்ணீரை சுத்தப்படுத்தி குடிக்க சுத்திகரிப்பான் கருவிகளை வாங்கி வைத்திருக்கிறோமோ அதனை போலவே நாளடைவில் சுத்தமான காற்றினை சுவாசிக்க இந்த அமைப்பினை வாங்கி வைக்க வேண்டிய சூழல் கண்டிப்பாக ஏற்படும்.
எதிர்காலத்தில் மிகப்பெரிய துறையாக மாறப்போகிற இதில் நம்முடைய மாணவர்களும் தங்களுடைய கண்டுபிடிப்பை நிகழ்த்தலாம். வெற்றியம் பெறலாம்.
TECH TAMILAN
இதையும் படிங்க,
[easy-notify id=1639]