தற்போதைய நிலவரப்படி அதிமுக்கியத்துவம் வாய்ந்த விருதாக இருப்பது நோபல் பரிசு. ஆல்ஃபிரட் நோபல் (Alfred Nobel) என்பவரது உருவம் பொறிக்கப்பட்டிருக்கும் பதக்கமும் வெகுமதியும் நோபல் பரிசு வெல்பவர்களுக்கு கொடுக்கப்படும் .
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதார அறிவியல் ஆகிய பிரிவுகளில் வியத்தகு சாதனைகளை செய்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
நோபல் பரிசு பற்றி நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால் இங்கே அது பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் பல இருக்கின்றன. இவை உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என நம்புகிறேன். [Nobel Prize Official Website]
நோபல் பரிசு உருவான வரலாறு
ஆல்ஃபிரட் நோபல் (Alfred Nobel) என்பவர் டயனமைட் என்ற வெடிபொருளை கண்டுபிடித்தவர் . அதன் மூலமாக அவருக்கு ஏராளமான வருமானம் கிடைத்தது. அதனை தவிர்த்து அவர் சிந்தடிக் ரப்பர் , ஆர்டிபிசியல் சில்க் , சிந்தடிக் லெதர் போன்றவற்றை கண்டுபிடிப்பதிலும் பங்காற்றியிருக்கிறார்.
கிட்டதட்ட 350 க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை பெற்றிருக்கிறார். ஆனாலும் அவர் பெரும்பாலானவர்களால் அறியப்பட்டது டையனமைட் கண்டுபிடிப்பால் தான்.
அவர் இறக்கும் போது தன்னிடமிருந்த 9 மில்லியன் பணத்தினை வைத்து மனிதர்களுக்கு பயன்படக்கூடிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்போருக்கும் அமைதிக்காக பாடுபடுபவர்களுக்கும் விருதினை அளிக்கவேண்டும் என முடிவு செய்தார் . அவரது விருப்பப்படி 5 நோபல் விருதுகள் ஏற்படுத்தப்பட்டன . அதன்படி இலக்கியம் , வேதியியல் , இயற்பியல் , அமைதி , மருத்துவம் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்படுவோருக்கு விருதும் பண முடிப்பும் பரிசாக வழங்கப்படுகிறது.
நோபல் பரிசு என்ன?
நோபல் பரிசு வெல்கிறவர்களுக்கு ஒரு பதக்கமும் பண பரிசும் வழங்கப்படுகிறது.
நோபல் பதக்கம் : தங்கமுலாம் பூசப்பட்ட நோபல் பதக்கம் 18 கேரட்டினால் செய்யபட்ட பதக்கம் நோபல் பரிசு வெல்வோருக்கு வழங்கப்படும்.
பண பரிசு : பரிசாக 9 லட்சம் SEK Swedish Krona வழங்கப்படும். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 71 லட்சம் ஆகும்.
நோபல் பரிசு தேர்வு எப்படி நடைபெறும்?
நோபல் பரிசு பெறுகிறவர்களை தேர்வு செய்வதற்கான தகுதி வாய்ந்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி உலகம் முழுமைக்கும் இருந்து பெறப்படும் பரிந்துரைகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் பரிசுக்கு தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்வார்கள். இந்தக் கமிட்டி சுவீடன் நாட்டில் இருந்து தான் செயல்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நாட்டில் வழங்கப்படுகிறது.
ஒரு துறையில் ஒருவருக்கோ அல்லது இவருக்கோ அல்லது மூவருக்கோ அதிகபட்சமாக விருது வழங்கப்படும் . இருவருக்கு வழங்கப்படும்போது விருதுக்கான பணத்தினை சமமாக பகிர்ந்துகொள்ளலாம் . மூவருக்கு வழங்கப்படும்போது சரிபாதி ஒருவருக்கும் , மற்றொரு பாதியை பகிர்ந்து மற்ற இருவரும் எடுத்துக்கொள்ள வேண்டும் .
ஆரம்பத்திலே ஐந்து துறைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுவந்த இவ்விருதானது Sweden’s central bank Sveriges Riksbank இன் பங்களிப்பினால் பொருளாதார அறிவியலுக்கும் 1968 க்கு பிறகு வழங்கப்பட்டு வருகின்றது.
நோபல் பரிசும் விவாதங்களும்
அமைதிக்காக போராடுகிறவர்களுக்கும் நோபல் விருது கொடுக்கப்படுகின்றது . டயனமைட் வெடிபொருளை கண்டறிந்தவர் அமைதிக்கான விருதினை ஏற்படுத்தி கொடுத்தது பெரும்பாலானவர்களால் ஆச்சரியமாக பார்க்கப்படுகின்றது . ஆனால் அவர் உளமார ஆக்கபூர்வத்திற்க்காகவே உருவாக்கியதாக கூறுகிறார்கள் , அவரை அறிந்தவர்கள் .
பல துறைகளில் மனித வாழ்விற்கு உபயோகமான எண்ணற்ற கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டாலும் குறிப்பிட்ட துறைகளுக்கு மட்டுமே வழங்கப்படுவதனால் அத்தகையோர் அங்கீகாரம் பெறாமலே போய்விடுகின்றனர். உதாரணத்திற்கு நில நடுக்கத்தை முன்கூட்டியே கண்டுபிடிப்பது எப்படி என்பதனை கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை .
மனிதர்களுக்கு பயன்படும் விதத்திலான கண்டுபிடிப்பாக இருக்கவேண்டும் என்ற நோபல் அவர்களின் அடிப்படை கூற்றை இக்கண்டுபிடிப்பு நிறைவேற்றி இருந்தாலும் Earth Science துறைக்கு நோபல் விருது வழங்கப்படுவதில்லை என்ற காரணத்திற்காக விஞ்ஞானிகள் விருதினை பெற இயலவில்லை .
ஒரே கண்டுபிடிப்பு முயற்சியில் பலர் ஈடுபட்டு இருக்கும்போது யாருக்கு விருது கொடுப்பது என்கிற குழப்பம் நேர்ந்தாலோ அல்லது அதிகபட்சமாக மூன்று நபருக்குத்தான் வழங்கப்பட முடியும் என்கிற கட்டுப்பாட்டினாலும் பல கண்டுபிடிப்பாளர்கள் விருதினை வாங்க முடிவது இல்லை . உதாரணத்திற்கு அனஸ்தியா என்கிற மயக்க மருந்தினை கண்டுபிடித்ததற்கு விருது இன்னும் கிடைக்காமலே இருக்கின்றது .
இந்தியாவில் இருந்து நோபல் பரிசு வாங்கியவர்கள் யார்?
ஆண்டுவாரியாகவும் துறை வாரியாகவும் இந்தியாவில் இருந்து நோபல் பரிசு வாங்கியவர்கள் பெயர் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது.
ரவீந்திரநாத் தாகூர் (இலக்கியம், 1913)
சி.வி. ராமன் (இயற்பியல், 1930)
ஹர் கோபிந்த் கொரானா (உடலியல் அல்லது மருத்துவம், 1968)
சுப்ரமணியன் சந்திரசேகர் (இயற்பியல், 1983)
அமர்த்தியா சென் (பொருளாதார அறிவியல், 1998)
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (வேதியியல், 2009)
கைலாஷ் சத்யார்த்தி (அமைதி, 2014)
TECH TAMILAN