லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்கின்ற கும்பமேளா நிகழ்வில் பங்கேற்பவர்கள் நதியில் புனித நீராடுவது வழக்கமான ஒன்று. இதற்காக பல கட்டமைப்புகள் செய்யப்பட்டு இருந்தாலும் அதிகப்படியான மக்கள் பங்கேற்பதனால் சரியான வசதி, பாதுகாப்பு போன்றவை அனைவருக்கும் கிடைப்பது இல்லை. குறிப்பாக கும்பமேளாவில் பங்கேற்கும் பெண்களுக்கு தான் மிகப்பெரிய சங்கடம். பெண்கள் திறந்த வெளியில் நதியில் புனித நீராடும் போது அவர்களுடைய ஆடை விலகுவது, உடலோடு ஒட்டியிருப்பது போன்றவை நடப்பது இயல்பான ஒன்று.
அதனை பயன்படுத்திக்கொள்ளும் ஆண்களில் சிலர் அதனை வீடியோ எடுத்து இணையத்தில் பரப்பி விடுகின்றனர். அவ்வளவு பெரிய கும்பலில் இதனை யார் செய்கிறார்கள் என்பதனை கண்டறிந்து தடுப்பதும் போலீசாருக்கு சவாலானதாக இருந்து வந்தது. ஏற்கனவே #GoSafeOutside என்ற முன்னெடுப்பை எடுத்து வருகிற ஹமாம் நிறுவனம் பல கழிப்பறைகளை கட்டிக்கொடுத்துள்ளது. தற்போது இன்னொருபடி மேலே போய்
பங்கேற்கும் பெண்களுக்கு “வாட்டர் புரூப் சேலைகள்” [Water Proof Sarees] வழங்கி வருகிறது.
சேலையின் மேற்புறத்தில் செய்யப்பட்டிருக்கும் மேற்பூச்சின் காரணமாக தண்ணீர் சேலையில் ஒட்டுவது இல்லை. ஆகையால் பெண்கள் புனித நீராடும் போது அவர்களின் உடலோடு சேலை ஒட்டாமல் இருக்கும். இதனால் பெண்கள் பாதுகாப்பாக, சற்று நிம்மதியோடு புனித நீராட முடியும் என ஹமாம் நம்புகிறது.
——————————————————————————————
Advertisement :
——————————————————————————————
மேலும் இதுகுறித்து ஹமாம் அதிகாரி ஒருவர் கூறும்போது “எங்களின் இந்த முயற்சி முழுமையான வெற்றி என கூறுவதற்கு இல்லை. மேலும் வெறும் உடலோடு மட்டுமே சம்பந்தப்பட்டது அல்ல இந்த பிரச்சனை என நாங்கள் அறிவோம். எங்களுடைய #GoSafeOutside திட்டத்தின்படி மக்கள் பாதுகாப்பாக வெளியில் சென்று வர தேவையான விழிப்புணர்வையும் விவாதத்தையும் நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். ஆண்கள் எப்படி எந்தவித கவன சிதறலும் இல்லாமல் கும்பமேளாவில் குளிக்க முடிகிறதோ அதைப்போலவே பெண்களும் புனித நீராடுவதற்கான வாய்ப்பினை வழங்க வேண்டும், சமூகத்தில் இதற்கான மாற்றம் நடக்க வேண்டும்”என்றார்.
இதுபோன்ற தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தொடர்ந்து படிக்க subscribe செய்திடுங்கள்.
உங்களுடைய கருத்துக்களை தவறாமல் பதிவிடுங்கள், அவையே எங்களுக்கு ஊக்கம் தரும்
TECH TAMILAN
இதையும் படிங்க,