Sunday, November 24, 2024
HomeAppsPUBG Banned | பப்ஜி கேமிற்கு தடை

PUBG Banned | பப்ஜி கேமிற்கு தடை


பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் விளையாடுகின்ற ஆன்லைன் கேம் பப்ஜி (PUBG). தற்போது இந்த பப்ஜி கேமிற்கு தடை விதித்துள்ளது குஜராத் அரசாங்கம் [PUBG Banned in Gujarat]. மாணவர்கள் இந்த கேமிற்கு அடிமையாவதால் படிப்பு பாதிக்கப்படுவதோடு மனநல பாதிப்பும் ஏற்படுகிறது என்பதனை காரணம் காட்டி பள்ளி அளவில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


——————————————————————————————-
Advertisement:





——————————————————————————————–
 

இளைஞர்களை மயக்கும் PUBG விளையாட்டு

 

தனி நபராகவோ அல்லது குழுவாகவோ இணைந்து விளையாடக்கூடிய ஆன்லைன் கேம் PUBG தற்போது தடையை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. விரைவில் இந்தியா முழுமைக்கும் கூட தடை விதிக்கப்படலாம். PlayerUnknown’s Battlegrounds என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த விளையாட்டை கணினி, டேப்லெட், மொபைல் போன் என எந்த கருவியிலும் விளையாட முடியும்.

 

பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தான்  PUBG விளையாட்டை அதிகமாக விளையாடுகிறார்கள். நல்ல அனிமேஷன் மற்றும் நண்பர்களோடு குழுவாக விளையாடுதல் போன்றவற்றின் காரணமாக இளைஞர்களை இந்த கேம் ஈர்த்து வருகிறது. ஒருநாளில் 10 முதல் 15 மணி நேரம் இந்த கேமை விளையாடுகிற நபர்கள் இருக்கிறார்கள் என்கிறது ஆய்வு.


PUBG விளையாட்டிற்கு தடை ஏன்?

 

Gujarat State Commission for Protection of Child Rights இன் பரிந்துரையை அடுத்து PUBG விளையாட்டிற்கு தடை விதிக்க குஜராத் அரசாங்கம் முடிவு செய்து சுற்றறிக்கையை அனுப்பியது. அதன்படி மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளி மாணவர்கள் PUBG விளையாட்டை விளையாடாத விதத்தில் நடவெடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

 

The National Commission for Protection of Child Rights (NCPCR) அனைத்து மாநிலங்களுக்கும் PUBG விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் இந்தியா முழுமைக்கும் PUBG விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீரில் வெளியான 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவில் மதிப்பெண்கள் குறைவானதற்கு காரணம் PUBG விளையாட்டுதான் எனவும் உடனடியாக அரசாங்கம் இந்த விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 

எப்படி போகிமான், ப்ளூவேல் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டதோ அதனைப்போலவே PUBG விளையாட்டையும் இந்திய அரசாங்கம் விரைவில் தடை செய்திட வேண்டும்.


பொழுது போக்கிற்காக வாழ்வினை இழக்கும் இளைஞர்கள்

மொபைல் போன்களின் வருகையினால் ஏற்கனவே இளைஞர்கள் மொபைல் இல் அதிக நேரம் செலவிடுவதாகவும் இதனால் மன அழுத்தத்திற்கு உள்ளாவதாகவும் கூறப்பட்டுவந்தது . எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவதை போல PUBG விளையாட்டு மேலும் இளைஞர்களை அடிமைகளாக்கி வைத்திருக்கிறது.

Self Control is Everything

மொபைல் போன்ற சாதனங்களும் கேம்கள் , வீடியோக்கள் மற்றும் திரைப்படங்கள் அனைத்தும் நம்மை மகிழ்விக்க வந்தவை . அவற்றினை பயன்படுத்துவதோ விளையாடுவதோ பார்ப்பதோ தவறில்லை . ஆனால் அதனை அளவோடு செய்கிறோமா என்பதில் தான் அனைத்துமே இருகின்றது . இந்த மாதிரியான விசயங்களுக்கு அடிமையாகி போகின்றவர்கள் விபரம் அறியாதவர்கள் இல்லை , அனைவருமே படித்தவர்கள் , நன்றாக புரிந்துகொள்ளக்கூடியர்வர்கள் .

நண்பர்களே நாம் தொடர்ந்து ஒரு விசயத்தில் ஈடுபடும்போது நம்மை அறியாமலே அதற்கு அடிமையாகிறோம்  . அப்படியும் தொடரும் போது மனநோயாகவே மாறிப்போகிறது .

 

நாம் எந்த நிலையில் இருக்கின்றோம் என்பதனை அனைவருமே அறிந்துவைத்திருப்பது நல்லது . ஆரம்பகட்டத்தில் இருப்பவர்கள் இப்போதே கவனமாக குறைத்துக்கொள்ளுங்கள் . உங்களாலேயே கட்டுப்படுத்திட முடியாவிட்டால் உடனடியாக மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள் .

PUBG விளையாட்டு உங்களது விலை மதிப்பில்லா நேரத்தை விழுங்கிக்கொண்டு இருக்கிறது என்பதனை உணருங்கள்.

பயனுள்ள இந்த பதிவை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


TECH TAMILAN


——————————————————————————————-
Advertisement:





——————————————————————————————–
 

இதையும் படிங்க,

10+ whatsapp features in tamil
இன்றைய ஸ்மார்ட்போன் உலகில் WhatsApp சிறந்த தகவல் பற்றிமாற்றத்திற்கான ஓர் ஆப்பாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலானவர்கள் WhatsApp ஐ பயன்படுத்தினாலும் அதில் இருக்கக்கூடிய சிறந்த Features ஐ பலர் ...
what is agi in tamil
உலகம் புதுப்புது தொழில்நுட்பங்களை கண்டுகொண்டு இருக்கிறது. அப்படி, அதிகமாக பேசப்படும் ஒரு தொழில்நுட்பம் தான் AI அதாவது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், செயற்கை நுண்ணறிவு என தமிழில் மொழி ...
அறிவியல் துறையில் தற்போது முன்னனி கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இருப்பது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தான் (Artificial Intelligence) . ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் [Artificial Intelligence] குறித்து நீங்கள் அறிந்து ...
gold investment tips in tamil (1)
இந்தியாவில் செல்வ செழிப்பின் அடையாளமாக தங்கம் இருக்கிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அவர்களால் இயன்ற அளவில் தங்கத்தை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். தற்போது 190,000 டன் அளவிலான ...
SolarSquare-Team-1709904299 (1)
இந்தியாவில் ஸ்டார்ட்அப் மிகவும் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. வெற்றிபெற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வரிசையில் SolarSquare என்கிற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் வெற்றி குறித்து பார்க்க இருக்கிறோம். உள்ளூரில் ...
what is Refurbished Laptop (1)
நமக்கான வேலைகளை செய்துகொள்வதற்கு சில நேரங்களில் கூடுதலாக லேப்டாப் தேவைப்படும்போது, refurbished laptops ஐ வாங்கலாமே என எண்ணுவோம். இதற்கு மிக முக்கியக்காரணம், அதன் விலை தான் ...
small business
நீங்கள் உங்களுடைய பிசினஸை துவங்கிய உடன் அதனை பதிவு செய்வது மிகவும் அவசியமானது. வங்கியில் லோன் வாங்குவதற்கும் மற்ற பிற விசயங்களுக்கும் நிறுவனத்தை பதிவு செய்து வைத்திருப்பது ...
how to start dropshipping business in india (1)
உங்களுக்கான ஒரு பிசினஸ் ஐ துவங்க நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள் என தெரிகிறது. உங்களைப்போலவே பலருக்கும் இந்த ஆர்வம் நிச்சயமாக இருக்கும். ஆனால், சிலருக்கு முதலீடுகள் செய்வதற்கான ...
how to get naturals salon franchise in tamil
இந்தியாவில் இப்போது பேஷன் மற்றும் அழகியல் துறை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இளைஞர்களும் தற்போது பேஷன் மற்றும் அழகியல் துறையில் வேலை செய்திட ஆர்வத்தோடு ...
how to get kfc franchise in tamil
நமது இந்தியாவில் வெளிநாட்டு உணவுகள் மற்றும் கடைகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அதன் வெளிப்பாட்டை கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் அதிகமாக காண முடிகிறது. இதனால் தான் ...
RELATED ARTICLES

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular