Friday, November 22, 2024
HomeTech Articlesஜிபிஎஸ் என்றால் என்ன? | GPS Explained in Tamil

ஜிபிஎஸ் என்றால் என்ன? | GPS Explained in Tamil

GPS Explained in Tamil


இந்த மாடர்ன் உலகில் GPS ஒரு தவிர்க்க முடியாத தொழில்நுட்பமாக இருந்துவருகிறது. உங்களுக்கு தெரியாத இடங்களுக்கு செல்ல வழி காட்டுவது துவங்கி உடற்பயிற்சி செய்வதை கண்காணிப்பது வரைக்கும் GPS பலவிதங்களில் பயன்படுகிறது. நம் வாழ்வில் அன்றாடம் பயன்படுத்துகின்ற Google Map , OLA , UBER , Security Devices, Driverless car ஆகியவை அனைத்துமே ஜிபிஎஸ்(GPS) தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே செயல்படுகிறது.

இப்படி நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்ற ஜிபிஎஸ்(GPS) தொழில்நுட்பம் எவ்வாறு வேலை செய்கின்றது? மக்களுக்கு GPS வசதி இலவசமாக கிடைக்க காரணம் என்ன ? என்பதனை அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். இந்த பதிவு உங்களுக்கு ஜிபிஎஸ் பற்றிய புரிதலை கொடுக்கும் என நம்புகிறேன். [GPS In Tamil]

ஜிபிஎஸ் (GPS) என்றால் என்ன?

பூமியை சுற்றி நிறுத்தப்பட்டுள்ள செயற்கைகோள்கள்

ஜிபிஎஸ்(GPS) என்பதன் ஆங்கில விளக்கம் Global Positioning System. அதாவது பூமியில் நாம் எங்கு இருக்கின்றோம் என்பதனை அறிந்துகொள்வதற்கு உதவுகின்ற தொழில்நுட்பம். இந்த ஜிபிஎஸ்(GPS) வசதியினை கொண்டுதான் நாம் கூகுளின் மேப் உள்ளிட்டவற்றினை பயன்படுத்துகின்றோம். அமெரிக்கா இந்த தொழில்நுட்பத்தை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ள இலவசமாக அனுமதி வழங்கி உள்ளது.

GPS எவ்வாறு வேலை செய்கிறது ?

ஜிபிஎஸ்(GPS) தொழில்நுட்பமானது மூன்று முக்கிய பகுதிகளை கொண்டு இயங்குகிறது .

> செயற்கைக்கோள்கள்

> பூமியில் இருக்கும் நிலையங்கள்

> மொபைல் உள்ளிட்டவற்றில் இருக்கக்கூடிய GPS கருவி

துல்லியமாக இடத்தினை அறியும் GPS முறை

உங்களது இருப்பிடத்தை ஜிபிஎஸ் கருவி துல்லியமாக அறிந்துகொள்ள 30 செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி விண்வெளியில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.  நீங்கள் பூமியின் எந்தப்பகுதியில் இருந்தாலும் உங்களை குறைந்தபட்சம் 3 செயற்கைகோள்களின் பார்வையாவது உங்கள் மீது படும் விதமாக குறிப்பிட்ட இடைவெளியில் அவை பூமியை சுற்றிலும் நிறுத்தப்பட்டு இருகின்றன .

இப்போது நீங்கள் GPS தொழில்நுட்பத்தினை பயன்படுத்துகிறீர்கள் என வைத்துக்கொள்வோம் , விண்வெளியில் இருக்கின்ற செயற்கைகோள்கள் உங்களது GPS கருவியினை எங்கு இருகின்றது என கண்காணிக்கும் .குறைந்தபட்சம் மூன்று செயற்கைகோள்களின் தரவுகள் ஒன்றிணைக்கப்பட்டு மிகவும் துல்லியமாக நீங்கள் இருக்கின்ற இடத்தின்  தகவலை உங்களுக்கு அனுப்பிடும் . பூமியில் இருக்கின்ற Base Station இன் வேலை செயற்கைக்கோள் அந்த குறிபிட்ட நேரத்தில் அந்த குறிப்பிட்ட இடத்தில்தான் விண்வெளியில் இருக்கின்றதா என்பதனை சரிபார்த்துக்கொள்ளவே .

உதாரணத்திற்கு இந்த புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள மூன்று வட்டங்களும் மூன்று செயற்கைகோள்கள் உங்களின் இருப்பிடமாக தந்த தகவல்கள் என வைத்துக்கொள்வோம் . துல்லியத்தன்மையை  அதிகரிக்கவே குறைந்தபட்சம் மூன்று செயற்கைகோள்களின் தரவுகளாவது எடுத்துக்கொள்ளப்படுகிறது . மூன்று செயற்கைகோள்களின் தரவுகள் ஒன்றினையும் புள்ளியே நாம் இருக்கின்ற இடம் .

GPS துல்லியமாக இருப்பது எப்படி?

ஜிபிஎஸ் கருவி செயற்கைக்கோள்கள் உதவியுடன்தான் இயங்குகின்றன என்றாலும் எப்படி துல்லியமாக இருக்கின்றது என்பது மிகப்பெரிய கேள்விதான் . துல்லியதன்மையை அதிகரிக்கத்தான் பூமியின் எந்தப்பகுதியில் இருந்தாலும் குறைந்தபட்சம் மூன்று செயற்கைகோள்களின் பார்வையாவது படும்வண்ணமாக விண்வெளியில் 30 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன .

பூமியை சுற்றி நிறுத்தப்பட்டுள்ள செயற்கைகோள்கள்

மேலும் துல்லியத்தன்மையை அதிகரிக்க Atomic clocks செயற்கைகோள்களில் பயன்படுத்தப்படுகின்றன . பூமியில் இருக்கக்கூடிய நிலையத்தின் நேரத்திற்கும் செயற்கைகோளின் நேரத்திற்கும் இடையில் இருக்கக்கூடிய தொடர்பு என்பது மிகவும் முக்கியம் .

GPS யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ? எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது?

விண்வெளி ஆய்வின் துவக்க காலங்களிலேயே ஜிபிஸ் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுவிட்டது. 1950 ஆம் ஆண்டு காலகட்டங்களில் தங்களது நீர் மூழ்கி கப்பல்கள் இருப்பிடத்தை கண்டறிய செயற்கைக்கோள்களை பயன்படுத்தலாமா என்பதை சோதிக்க ஆர்மபித்தது. இதுதான் முதல் நேவிகேஷன் சிஸ்டமான Transit உருவாக காரணமாக அமைந்தது. பூமியின் குறைந்த சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள செயற்கைகோள்களை பயன்படுத்தி நீர்மூழ்கி கப்பல்களின் சரியான இடம் கண்டறிய பயன்பட்டது.

ஆனால், Transit ஐ பயன்படுத்த பொதுமக்களுக்கு அனுமதி தரப்படவில்லை. 1970 வரைக்குமான காலகட்டங்களில் கூட இப்போது இருக்கும் நவீன GPS இல்லை. முதல் முறையாக 1978 ஆம் ஆண்டு தான் முதல் GPS செயற்கைக்கோள் அனுப்பப்பட்டது. இரண்டாவதாக, 1993 ஆம் ஆண்டு GPS செயற்கைக்கோள் அனுப்பப்பட்டவுடன் இப்போது இருக்கும்படி முழுமையாக GPS செயல்பாட்டுக்கு வந்தது.

GPS இலவசம் ஏன்?

GPS Explained in Tamil

அமெரிக்காவிற்கும்  ரஷ்யாவிற்கும் இடையே பனிப்போர் நிலவியிருந்த நேரம் , நியூயார்க்கிலிருந்து சியோல் நோக்கி 250 பயணிகளோடு பயணித்த விமானமொன்று தவறுதலாக ரஷ்யாவின் எல்லைக்குள் புகுந்தது , அதனால் சுட்டும் வீழ்த்தப்பட்டது . இந்த நிகழ்விற்கு பிறகு மீண்டும் இதுபோன்றதொரு நிகழ்வு நடைபெறாமல் இருக்க GPS தொழில்நுட்பத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அனுமதித்தது அமெரிக்கா .

GPS தொழில்நுட்பம் நிறுத்தப்பட வாய்ப்பிருக்கின்றதா?

நிச்சயமாக இருகின்றது , GPS தொழில்நுட்பம் முற்றிலுமாக அமெரிக்காவின் கண்டுபிடிப்புதான் . அமெரிக்க ராணுவத்திற்கு GPS வசதியினை செயலிழக்கசெய்வதற்கான உரிமை இருக்கின்றது . ஆனால் நாடு முழுமைக்கும் அல்லாமல் குறிபிட்ட பகுதியில் மட்டும் போதுமான காரணங்கள் இருப்பின் தடை செய்யப்படலாம் .

Applications of GPS technology

ஜிபிஎஸ் தொழில்நுட்பம் பலவிதங்களில் பல துறைகளில் முன்னேற்றம் ஏற்பட வழிவகை செய்துள்ளது. பலரும் அறிந்த விதத்தில் ஜிபிஎஸ் இன் பயன்பாடு என்பது வழியை தெரிந்துகொள்ளும் அப்ளிகேஷன்களில் மிகவும் சரியாகவும் தீவிரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. நொடிக்கு நொடி ட்ராபிக் எப்படி இருக்கிறது, எந்த வழியில் சென்றால் விரைவாக சென்று சேரலாம் என ஜிபிஎஸ் ஐ பயன்படுத்தி தெரிந்துகொள்ள முடியும்.

விவசாயத்திலும் GPS பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. உதாரணத்திற்கு, எங்கெல்லாம் பயிர்கள் சரியாக வளர்ந்துள்ளன, எங்கே அக்கறை செலுத்திட வேண்டும் என சரியாக தெரிந்துகொள்வதற்கு GPS பயன்படும். இதனால் சிக்கனமாக நீர் மற்றும் உரத்தை பயன்படுத்த முடியும்.

GPS விமானத்தை இயக்கவும் பயன்படுகிறது. மிகவும் சிக்கலான வானியல் சூழ்நிலைகளில் செல்லும் இடங்களுக்கு சரியாக செல்வதற்கு GPS பயன்படுகிறது.

இதுபோன்று பல்வேறு துறைகளில் GPS பயன்பாடு அதிகரித்து வருகிறது.

GPS accuracy and limitations

ஆரம்பத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும் இப்போது நாம் பயன்படுத்தும் GPS தொழில்நுட்பம் என்பது மிகவும் துல்லியமானதாக இருக்கிறது. அனைத்தும் சரியாக இருக்கும் சூழ்நிலையில் ஜிபிஎஸ் சரியாக வேலை செய்யும். ஆனாலும், சில சூழ்நிலைகளில் ஜிபிஎஸ் சரியாக வேலை செய்யாமலும் போகலாம். அதுபற்றி நீங்கள் தெரிந்துவைத்திருப்பது நல்லது.

ஜிபிஎஸ் ஐ பாதிக்கக்கூடிய மிக முக்கிய விசயமே சிக்னல் குறைபாடு தான். கட்டிடங்கள், மரங்கள், மற்றும் பிற விசயங்கள் சிக்னலை தடை செய்திடும் போது ஜிபிஎஸ் துல்லியமானதாக இருக்காது. இதனால் தான் கட்டிடங்கள் அதிகமாக இருக்கும் இடங்களிலும் மரங்கள் அதிகமாக இருக்கும் காடுகளிலும் ஜிபிஎஸ் துல்லியமாக இருக்காது.

அடுத்ததாக, உங்களை எத்தனை செயற்கைகோள்களால் கண்காணிக்க முடிகிறதோ அந்த அளவிற்கு ஜிபிஎஸ் துல்லியமாக இருக்கும். வானம் தெளிவாக தெரியும் இடங்களில் நீங்கள் இருக்கும் போது அதிகமான செயற்கோள்களின் பார்வை உங்கள் மீது படும். இதனால் உங்களது இருப்பிடம் தெளிவாக இருக்கும்.

Time synchronization என்பது மிகவும் முக்கியம். செயற்கைகோள் மற்றும் GPS Receiver இரண்டுக்கும் இடையே வேறுபாடு ஏற்படும் போது GPS தவறாக வேலை செய்திட வாய்ப்பு உள்ளது.

ஆகவே, இப்போது இருக்கும் GPS கூட 100% துல்லியமானது என சொல்லிவிட முடியாது. சில சமயங்களில் அதிலும் குறைபாடு இருக்கவே செய்யும்.

TECH TAMILAN


RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular