Cryptocurrency For Beginners
இந்த உலகம் Blockchain தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளது. ஆகவே, கிரிப்டோகரன்சி [Cryptocurrency] என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. கிரிப்டோகரன்சியில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் அதிலே என்ன நடக்கிறது என்பதனை நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம். ஆங்கிலத்தில் நீங்கள் கிரிப்டோகரன்சி பற்றி தெரிந்துகொள்ள உதவும் 7 இணையதளங்கள் இங்கே தரப்பட்டுள்ளது.
கிரிப்டோகரன்சி பற்றி தமிழில் இங்கே கிளிக் செய்து நீங்கள் படிக்கலாம்.
கிரிப்டோகரன்சி என்பது உலகம் முழுமைக்கும் தற்போது விரும்பப்படும் ஒன்றாக மாறியுள்ளது. அதிலே முதலீடு செய்தால் ஏகப்பட்ட லாபத்தை ஈட்டமுடியும் என்கிற எண்ணத்தினால் பலரும் அதில் முதலீடு செய்திட ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், முதலீடு செய்திடும் கணிசமான நபர்களுக்கு அந்த கிரிப்டோகரன்சிகள் பற்றிய தகவல்கள் பெரிதாக தெரிவது கிடையாது. வெறுமனே அதிக லாபம் தருகிறது என்பதற்காக முதலீடு செய்கிறார்கள். பல நேரங்களில் இது அவர்களுக்கு பெரிய இழப்புகளை தந்துவிடுகிறது. எங்கேயேனும் ஒரு ரூபாயை நாம் முதலீடு செய்வதற்கு முன்னதாக அதுபற்றிய சிறு தேடலையாவது நிகழ்த்திட வேண்டும். அப்படி நீங்கள் கிரிப்டோகரன்சி பற்றி தெரிந்துகொள்ள உதவும் 5 இணையதளங்கள் இவையே.
CoinDesk
உலக அளவில் கிரிப்டோகரன்சி மார்க்கெட்டில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள CoinDesk என்ற இணையதளம் பெரிதும் உதவும். கிரிப்டோகரன்சியின் ஏற்ற இறக்கங்கள், மார்க்கெட்டில் நடக்கும் நிகழ்வுகள், புதிதாக இதற்குள் நுழைகிறவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் என அனைத்தும் ஓரிடத்தில் கிடைக்கிறது. https://www.coindesk.com/learn/ – இந்த லிங்கில் கிரிப்டோகரன்சியில் நமக்கு இருக்கும் அனுபவத்தின் அடிப்படையில் நமக்குத் தேவையான தகவல்களை வரிசைப்படுத்தி இருக்கிறார்கள்.
Crypto Head
Crypto Head என்ற இணையதளமானது நம்பத்தகுந்த கிரிப்டோகரன்சிகள் குறித்த செய்திகளை அதிகமாக வழங்குகிறது. கிரிப்டோகரன்சி பற்றி எதுவுமே தெரியாத ஒருவர் அதிலே முதலீடு செய்திட விரும்பினால் அவரை தயார் படுத்தும் விதத்திலான தகவல்கள் அனைத்தும் இதிலே இருக்கின்றன. பல்வேறு நாடுகளில் எந்த ஆப்கள் அல்லது கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்சு மூலமாக முதலீடு செய்யலாம் போன்ற தகவல்கள் இதிலே இருக்கின்றன. அதிலே விரைவில் இந்தியாவும் இணையும் என எதிர்பார்க்கலாம். முன்னனி கிரிப்டோகரன்சிகளான BTC, Ethereum, Litecoin, மற்றும் Ripple போன்ற கரன்சிகளின் ஏற்ற இறக்கங்கள் குறித்தும் தகவல்கள் இங்கே கிடைக்கின்றன.
Cointelegraph
2013 இல் தொடங்கப்பட்ட Cointelegraph, க்ரிப்டோ தொடர்பான செய்திகள் மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பற்றிய மிகவும் நம்பத்தகுந்த தகவல்கள் கொண்ட இணையதளங்களில் ஒன்றாக இருக்கிறது. உள்ளே, Bitcoin, Ripple, Litecoin, Monero மற்றும் Ethereum உள்ளிட்ட அனைத்து முக்கிய நாணயங்களையும் எவ்வாறு வர்த்தகம் செய்வது என்பதை நீங்கள் இங்கே கற்றுக்கொள்ள முடியும். நீங்கள் ஒரு சிறந்த வர்த்தகராகவும், உங்கள் வர்த்தகத்தில் இருந்து நல்ல லாபத்தைப் பெறவும் விரும்பினால், இங்கே இருக்கும் செய்திகள் நிச்சயமாக பயன்படும்.
இந்தியாவில் பிட்காயின் வாங்கலாமா? வருமானவரி செலுத்த வேண்டுமா?
CryptoCoinsNews
பெயர் குறிப்பிடுவது போலவே, இந்த இணையதளம் முக்கியமாக, படிப்பவர்களுக்கு அவர்களின் விருப்பமான கிரிப்டோகாயின்கள் குறித்த முக்கிய செய்திகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. CCN என பிரபலமாக குறிப்பிடப்படும் தளம்போல Bitcoin, Litecoin மற்றும் Ethereum உள்ளிட்ட சிறந்த கிரிப்டோக்களில் நடக்கும் அனைத்தையும் பற்றிய செய்திகளை உள்ளடக்கியது இந்த இணையதளம். CryptoCoinsNews இல் மிகவும் அற்புதமான கற்றல் பிரிவு இருக்கிறது. அங்கு நீங்கள் கிரிப்டோ முதலீடு குறித்த அடிப்படை நிகழ்வுகளை பார்வையிடலாம் அல்லது தொழில்துறையில் உங்கள் அறிவை மேம்படுத்தலாம்.
Bitcoin.com
இந்த Bitcoin.com இணையதளம் பிட்காயின் சார்ந்து அதிகப்படியான தகவல்களை வழங்குகிறது என்றாலும் கூட மற்ற முன்னனி முன்னனி கிரிப்டோகரன்சிகள் குறித்தும் செய்திகளை வழங்குகிறது. பிட்காயின் வாங்குவது, விற்பது, மைனிங் செய்வது உள்ளிட்ட பல்வேறு விசயங்களை தெளிவாக தெரிந்துகொள்ளத் தேவையான தகவல்கள் இங்கே இடம்பெற்றுள்ளன.