PUBG Mobile Game மூலமாக Tencent Games நிறுவனம் $1.3 பில்லியன் லாபம் ஈட்டி இருக்கிறது. உலகிலேயே PUBGயை அதிகமாக டவுன்லோட் செய்தவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. ஆனால் இந்த கேமிற்கு அடிமையாகும் போக்கும் அதிகரிக்கிறது என்பதுதான் கவலை தரக்கூடிய விசயம்.
கேம் விளையாடுவதே ஆபத்தானது அல்ல
அதை மட்டுமே விளையாடிக்கொண்டு இருப்பதுதான் ஆபத்து
இந்தப்பதிவை நான் எழுதும்போது எனது மொபைலில் இருந்து PUBG அப்ளிகேஷனை நீக்கிவிட்டுத்தான் எழுதுகிறேன். ஏனென்றால் மீண்டும் மீண்டும் விளையாடத்தூண்டும் இதன் போக்கும் இதை தொடர்ச்சியாக விளையாடும்போது ஏற்படுத்துகிற விளைவும் படிக்க படிக்க அதிர்ச்சி அளிப்பவையாக இருக்கிறது. இந்தப்பதிவை முழுமையாக படியுங்கள் மேலும் உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கும் இதனை பகிருங்கள்.
PUBG என்பது 100 பேர் பங்கேற்கும் ஒரு துப்பாக்கி சுடுதல் விளையாட்டு. இதை தனி நபராகவோ அல்லது குழுவாகவோ சேர்ந்து விளையாட முடியும். மிகச்சிறந்த கிராபிக்ஸ் மற்றும் நேரடியாக குழுவாக பேசிக்கொண்டு விளையாடும் ஆப்சன் போன்ற பல்வேறு காரணங்களால் PUBG விரும்பி விளையாடும் ஒரு மொபைல் கேமாக மாறிவிட்டது. இந்த மொபைல் கேம் மூலமாக மட்டும் Tencent Games நிறுவனம் $1.3 பில்லியன் லாபம் ஈட்டி இருக்கிறது. இந்தியாவில் இருந்து இந்த கேமிற்கு கிடைக்கும் வருமானம் மிகவும் குறைவுதான் என்றாலும் உலக அளவில் அதிகப்படியாக PUBG தரவிறக்கம் செய்யப்பட்டது என்னவோ இந்தியாவில் இருந்துதான். குறிப்பாக மாணவர்களும் இளைஞர்களும் தான் இதில் விளையாடுகிறார்கள். ஆகவே தான் இந்த எச்சரிக்கை பதிவை மீண்டும் எழுத இருக்கிறேன்.
1 . அடிப்படையே வன்முறை தான்
PUBG விளையாட்டில் பார்ப்பவர்களை கொள்வது தான் வேலையே. என்னதான் இதுவொரு விளையாட்டு என்றாலும் கூட தொடர்ச்சியாக இதே மாதிரியாக விளையாடிக்கொண்டு செல்லும்போது விளையாடும் நபரின் மனதில் கோபம் போன்ற உணர்வுகளை அதிகம் தூண்டிவிடுவதாக சொல்லப்படுகிறது.
2. சமூகத்தோடு விலகி இருக்க நேருதல்
PUBG போன்ற விளையாட்டுகளினால் நேரடியாக ஆடுகளத்தில் விளையாடி கொண்டாட வேண்டிய சிறுவர்கள் மொபைல் போனும் கையுமாக ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு மணிக்கணக்கில் விளையாடுகிறார்கள். இதன் காரணமாக நண்பர்களோடு, சொந்தங்களோடு பழகுவதில் இருந்து விலகிப்போய் விடுகிறார்கள். அதற்கான நேரத்தை PUBG போன்றவை எடுத்துக்கொள்கின்றன.
3. அடிமையாகுதல்
ஏன்டா எப்போவும் PUBG விளையாடிட்டே இருக்க என உங்களது அப்பா அல்லது அம்மா அல்லது வேறு யாருமோ சொன்னால் உடனடியாக கோபம் தலைக்கு ஏறுகிறதா? அவர்களை திட்ட வேண்டும் என தோன்றுகிறதா? அப்படியானால் நீங்கள் அந்த மொபைல் கேமிற்கு அடிமையாகிவிட்டீர்கள் என தெரிந்துகொள்ளுங்கள். பிறர் சொல்லும் போது கோபப்படுவதை விடவும் நீங்களாகவே உண்மையை புரிந்துகொண்டு அதிலிருந்து வெளிவர முயற்சி செய்திடுங்கள். நண்பர்களோடு வெளியே சென்று விளையாடுங்கள்.
4. நேரத்தை குடிக்கும்
தற்போது PUBG கேமில் குறிப்பிட்ட நேரம் வரை தான் விளையாட முடியும் என்ற கட்டுப்பாடு வந்திருக்கிறது. ஆனால் அது போதுமானது அல்ல. நினைத்துப்பாருங்கள் ஒரு கேம் விளையாடினால் குறைந்தது 25 நிமிடங்கள் ஆகிவிடுகிறது. ஒரு நாளைக்கு 5 முதல் 10 கேம் விளையாடுகிறீர்கள் எனில் நீங்கள் அதில் செலவு செய்யக்கூடிய நேரத்தை கணக்கிட்டுப்பாருங்கள். ஒரு வாரத்திற்கு என்னாகிறது? ஒரு மாதத்திற்கு என்னாகிறது? ஒரு ஆண்டுக்கு என்னாகிறது? நீங்கள் உங்களது வாழ்க்கைக்கு பயனுள்ளதாக ஏதேனும் செய்ய வேண்டிய நேரத்தை அது வீணாக்கிவிடுகிறது என்பதே உண்மை.
5. உடல் நலத்தை கெடுக்கிறது
உட்கார்ந்தே வேலை செய்யாதீர்கள் அது உங்களது உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். அது வேலைக்கு செல்கிறவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தான். மொபைல் கேம் விளையாடும் போது ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டு கண்களை அசைக்காமல் அதி கவனத்தோடு விளையாடுவது எந்த அளவிற்கு உடலுக்கு தீங்கானது என்பதை நீங்கள் எளிமையாக புரிந்துகொள்ள முடியும்.
சீனாவில் PUBG விளையாட்டு
PUBG விளையாட்டு சீனாவில் வெகு நாட்களாக அனுமதிக்கப்படவே இல்லை. இதற்கு காரணம் அது வன்முறையை தூண்டும் விதமாக இருக்கிறது என்பதுதான். அதன்பிறகு PUBG கேமில் பல்வேறு மாறுதல்கள் சீனாவிற்காக மட்டுமே செய்து வெளியிடப்பட்டது. உதாரணத்திற்கு, நீங்கள் விளையாடும் போது ஒருவரை சுட்டால் அவரிடமிருந்து ரத்தம் வெளியேறி அவர் இறந்துபோவார். பின்னர் அந்த இடத்தில் ஒரு பெட்டி உருவாகும். ஆனால் சீனாவில் அதை மாற்றி, ஒருவரை சுட்டால் அவர் சுருண்டு விழுவார் பின்னர் ஒரு பெட்டி அருகே வரும். சுடப்பட்டவர் குட் பை சொல்லிவிட்டு வெளியேறுவார்.
இதுபோன்ற மாற்றங்களை செய்தபிறகு தான் அங்கே PUBG அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் PlayerUnknown’s Battlegrounds என அழைக்கப்படும் இந்த கேம் சீனாவில் Game for Peace என அழைக்கப்படுகிறது. ஏன் இந்தியாவில் இந்த கேமை தணிக்கை செய்யவில்லை என தெரியவில்லை.
இதுபோன்ற டெக்னாலஜி சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க இந்த பட்டனை அழுத்தி வாட்ஸ்ஆப்பில் பெறுங்கள்.
Click Here! Get Updates On WhatsApp
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.