Technology news in tamil
டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் சூழ்நிலையில் அதன் வெளிப்படையான அறிக்கையில் [transparency report] 2019 இன் இரண்டாம் பகுதியில் மட்டும் 49 மில்லியன் வீடியோக்களை நீக்கியிருப்பதாக கூறியிருக்கிறது.
அண்மையில் வெளியாகி இருக்கிற டிக்டாக் ஆப்பின் வெளிப்படையான அறிக்கையில் [transparency report] கடந்த 2019 ஆம் ஆண்டில் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான இடைவெளியில் மட்டும் 49 மில்லியன் வீடியோக்களை தங்களது தளத்தில் இருந்து நீக்கியிருப்பதாக தெரிவித்துள்ளது. மொத்த வீடியோக்களுடன் ஒப்பிடும் போது இப்படி நீக்கப்பட்ட வீடியோக்களின் அளவு 1% ஆகும்.
ஏன் இந்த வீடியோக்கள் நீக்கப்பட்டன?
டிக்டாக் விதிமுறைகளை மீறும் விதத்தில் இருந்தபடியால் தான் இந்த வீடியோக்களை டிக்டாக் நீக்கியிருப்பதாக அறிக்கையில் கூறியிருக்கிறது. அதிக பட்சமாக அமெரிக்காவில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்கள் தான் நீக்கப்பட்டு இருக்கின்றன. அதற்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. கிட்டத்தட்ட இந்தியர்களின் 16 மில்லியன் வீடியோக்கள் டிக்டாக் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
அதேபோல பதிப்புரிமை சார்ந்த முறையீடுகளும் அரசு கூட சில முறையீடுகளையும் செய்திருக்கிறது. அரசின் சார்பில் இருந்து 45 முறை வீடியோக்களை நீக்குவதற்கான விண்ணப்பம் அளிக்கப்பட்டதாகவும் அதில் பெரும்பான்மையானவை இந்தியாவில் இருந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் டிக்டாக் மீது சில குற்றசாட்டுகள் வைக்கப்பட்டு இருந்தன. அதில் குழந்தைகள் வன்முறை வீடியோ, வன்முறையை தூண்டும் விதத்திலான வீடியோ உள்ளிட்டவற்றை டிக்டாக் நீக்குவது இல்லை என குற்றம் சுமத்தப்பட்டது. இதனிடையே தான் டிக்டாக் இந்த அறிக்கையை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மீது ஏற்கனவே வெறுப்புணர்வை உண்டாக்கும் கருத்துக்களை நீக்குவதில் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தி நிலவுகிறது.
டிக்டாக் ஆப் மீதான தடை இந்தியாவில் நீக்கப்படும் என இங்கிருக்கும் பயனாளர்கள் நம்பிக்கொண்டு இருக்கும் சூழ்நிலையில் ஹாங்காங்கில் இருந்தும் வெளியேறி இருக்கிறது.
Read More :
டிக்டாக் போனால் என்ன வருகிறது “இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்”
மீண்டும் வரப்போகிறதா டிக்டாக்?
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.