WhatsApp Feature
மொபைல் எண்ணை Save செய்திடாமலே WhatsApp இல் மெசேஜ் அனுப்பிட முடியும்
நாம் அன்றாட வாழ்வில் பெரிதும் பயன்படுத்துகிற மொபைல் ஆப்களில் ஒன்று WhatsApp. பல்வேறு விதமான சிறப்பம்சங்களை WhatsApp கொண்டிருந்தாலும் பெரும்பாலானவர்கள் கூறுகின்ற அடிப்படை குற்றசாட்டு “யாருக்கேனும் மெசேஜ் அனுப்ப வேண்டும் எனில் அவர்களது எண்ணை மொபைலில் பதிய (save) செய்யவேண்டி இருக்கிறது” என்பார்கள். ஆனால் WhatsApp இல் மொபைல் எண்ணை save செய்யாமல் கூட மெசேஜ் அனுப்ப முடியும். அதற்க்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. அதனை தான் இந்த பகுதியில் பார்க்க இருக்கிறோம்.
wa.me links
WhatsApp மொபைல் எண்ணை Save செய்யாமலேயே மெசேஜ் அனுப்புவதற்காகவே wa.me links எனும் ஆப்சனை வைத்திருக்கிறது. இதன்படி இந்த லிங்கில் https://wa.me/XXXXXXX, நாட்டின் எண் (+91) அதனை தொடர்ந்து மொபைல் எண்ணை பதிவிட வேண்டும். ஆனால் + அல்லது 0 போன்றவற்றை தவிர்த்துவிட வேண்டும். https://wa.me/918756435678 இப்படி பதிவிட வேண்டும். இந்த லிங்கை ஒரு பிரவுசரில் சர்ச் இல் பதிவிடுங்கள். பின்னர் மெசேஜ் எனும் பட்டனை அழுத்திடுங்கள். இப்போது குறிப்பிட்ட அந்த எண்ணை save செய்யாமலேயே உங்களால் மெசேஜ் அனுப்ப முடியும்.
Click To Chat App
மேலே உள்ள முறையில் லிங்க்கை உருவாக்குவது சிரமமாக இருக்கிறது என நீங்கள் கருதினால் Click To Chat எனும் மொபைல் ஆப்பினை உங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். அதனை ஓபன் செய்து Country Code மற்றும் mobile number ஐ பதிவிட்டு “Open” பட்டனை அழுத்தினால் போதும். உங்களது WhatsApp ஓபன் செய்ய வேண்டுமா என்கிற ஆப்சன் வரும். அதனை செலக்ட் செய்தால் உங்களால் குறிப்பிட்ட அந்த மொபைல் எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப முடியும்.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.