Telegram App
வாட்ஸ்ஆப் தனது பிரைவேசி பாலிசியை அப்டேட் செய்த பிறகு கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. வாட்ஸ்ஆப் க்கு மாற்றாக டெலிகிராம் அல்லது சிக்னல் ஆப்களை இன்ஸ்டால் செய்திடுங்கள் என்ற முழக்கம் பரவியது. பலரும் கூட இந்த புதிய ஆப்களை இன்ஸ்டால் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். டெலிகிராம் ஆப்பில் இருக்கும் சில சிறப்பம்சங்களை இங்கே பார்க்கலாம். இதனால் தனியே தரவுகளை சேமிக்க வேண்டிய தேவை இருக்காது.
1. Unlimited server storage
டெலிகிராம் ஆப்பில் அனைத்து தகவல்களும் கிளவுட் ஸ்டோரேஜில் சேமிக்கப்படுகிறது. இதனால் மொபைல், கணினி உள்ளிட்ட எந்தக் கருவியிலும் எத்தனை கருவியில் வேண்டுமானாலும் லாகின் செய்து முன்னர் செய்த மெசேஜ் தரவுகளை பெற முடியும்.
2. Group Option
டெலிகிராம் ஆப் இரண்டுவிதமான குரூப் ஆப்ஷனை வழங்குகிறது. சாதாரண குரூப்பில் [normal group] 200 பேர் வரை . அதற்கு மேற்பட்டவர்கள் குரூப்பில் இணைந்திடும் போது சூப்பர் குரூப்பாக [ Super Group] அது மாற்றம் பெறுகிறது. இதில் 5000 பேர் வரைக்கும் இணையலாம்.
3. Username feature
ஒருவரது மொபைல் எண் இல்லாமல் கூட டெலிகிராம் ஆப்பில் ஒருவரோடு தொடர்பு கொள்ள முடியும். General Search என்ற வசதியின் மூலமாக நண்பர்களை கண்டறியலாம்.
4. Channels
குரூப் வசதியைப்போலவே சேனல் என்ற வசதியும் டெலிகிராம் ஆப்பில் இருக்கிறது. சேனலை யார் உருவாக்குகிறார்களோ அவர்களே யார் செய்தியை பகிரலாம் என்பதை தீர்மானிக்கலாம்.
5. Multi-platform support
டெலிகிராம் ஆப் பல்வேறு இயங்குதளங்களில் கிடைக்கிறது. Android, ios, windows phone, windows pc, Mac os, Linux os என அனைத்து தளங்களிலும் இயங்கும்.
6. Secret chat
Secret chat என்ற வசதியின் மூலமாக அனுப்பப்படும் தகவல் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும், மேலும் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு தானே அழிந்தும் விடும். வாட்ஸ்ஆப்பில் அனைத்து தகவல்களும் என்கிரிப்ட் செய்யப்படும். ஆனால் டெலிகிராம் ஆப்பில் Secret chat மட்டுமே என்கிரிப்ட் செய்யப்படும்.
7. Media compression
image மற்றும் video வை அனுப்பும் போது compress செய்தோ அல்லது compress செய்யாமலோ அனுப்ப முடியும்.
8. Voice calls
அண்மையில் அப்டேட் செய்யப்பட்ட டெலிகிராம் ஆப்பில் வாய்ஸ் கால் வசதி இருக்கிறது. வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் ஆகிய இரண்டு வசதிகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
9. Sends any kind of file
தற்போது பலர் டெலிகிராம் ஆப்களை பயன்படுத்த முக்கியக்காரணம் படங்களை டவுன்லோட் செய்வதற்காகவே. டெலிகிராம் ஆப்பில் எந்த பைல்களையும் அனுப்பலாம்.
10. Multiple sessions
ஒருவர் எத்தனை கருவிகளில் வேண்டுமானாலும் டெலிகிராம் ஆப்பில் லாகின் செய்துகொள்ளலாம். அதே போல அனைத்து கருவிகளிலும் தகவலை பெற முடியும்.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.