Thursday, September 19, 2024
HomeTech ArticlesWhat is Mission Sakthi? | மிஷன் சக்தி | Anti - Satellite |...

What is Mission Sakthi? | மிஷன் சக்தி | Anti – Satellite | இந்தியாவின் பெருமை

mission sakthi anti satellite

மிஷன் சக்தி

இந்தியா வெற்றிகரமாக தனது “Anti Satellite” சோதனையை நடத்திக்காட்டியுள்ளது. விண்வெளியில் கீழ் சுற்றுவட்டப்பாதையில் சுற்றுகிற செயற்கைகோள்களை தாக்கி அழிக்க முடியும்.

Mission Sakthi

பூமியை சுற்றி நிறுத்தப்பட்டுள்ள செயற்கைகோள்கள்

மிஷன் சக்தி என்பது பிற நாட்டினரின் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கின்ற திட்டம். இதற்க்கு முன்னர் அமெரிக்கா , ரஷ்யா , சீனா ஆகிய நாடுகளே வெற்றிகரமாக இந்த பரிசோதனையை செய்து முடித்து இருந்தன. தற்போது நான்காவது நாடாக இந்தியா இணைந்துள்ளது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சிக்கழகம் (Defence Research and Development Organisation) இந்த சோதனையை அப்துல்கலாம் தீவில் இருந்து நடத்தியது. வெற்றிகரமாக நடந்த இந்த சோதனையில் விண்வெளியில் இருந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக 3 நிமிடங்களிலேயே தாக்கி அழிக்கப்பட்டது. இதனை இன்று பாரத பிரதமர் நாட்டிற்கு தெரிவித்தார்.

மிஷன் சக்தி சோதனையின் மூலமாக விண்வெளியில் கீழ் சுற்றுவட்டப்பாதையில், அதாவது 300 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றிவருகின்ற எந்த நாட்டின் செயற்கைக்கோளையும் வெறும் மூன்றே நிமிடங்களில் தாக்கி அளிக்க முடியும். இதன் மூலமாக விண்வெளி ஆராய்ச்சியில் புதிய உயரத்தை இந்தியா தொட்டிருக்கிறது. பிற நாடுகளின் வான்வெளி அச்சுறுத்தல்களில் இருந்து நாம் பாதுகாப்பாக இருப்பதனை மிஷன் சக்தி உறுதிப்படுத்தும்.

இந்தியாவின் பெருமை

mission sakthi anti satellite

ASAT எனப்படும் anti satellite தொழில்நுட்பத்தினை பல நாடுகள் வைத்திருப்பதாக கூறுகின்றன. ஆனால் பரிசோதனை மூலமாக நிரூபித்து இருப்பது நான்கு நாடுகள் தான். அவை அமெரிக்கா, ரஷ்யா , சீனா மற்றும் இந்தியா.

 

மிஷன் சக்தி குறித்து பேசிய பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் “தற்போது நாம் பல்வேறு பயன்பாடுகளுக்காக பல செயற்கைகோள்களை வைத்திருக்கிறோம், விவசாயம், பேரிடர் மேலாண்மை , தகவல் தொழில்நுட்பம் , பருவநிலை என அவை நீளுகின்றன. தற்போது மிஷன் சக்தி இந்தியாவின் மற்றுமொரு பெருமையான தருணம். தற்போது நீர், நிலம் , காற்று ஆகியவற்றில் மட்டும் நாம் தற்காப்பு சக்தியை பெற்று இருக்கவில்லை, கூடவே விண்வெளிக்கும் சேர்த்து தற்காப்பு சக்தியை பெற்று இருக்கிறோம்” என்றார்.

 

மேலும் இந்தியாவின் மிஷன் சக்தி என்பது இந்தியாவின் தற்காப்பிற்காக மட்டுமே, மற்ற நாட்டினரின் மீது எந்த தருணத்திலும் பயன்படுத்தப்பட மாட்டாது. சர்வதேச சட்டங்களுக்கு எப்போதும் கட்டுப்பட்டே இந்தியா விண்வெளியில் செயல்படும் அமைதியை நிலைநாட்டிடவே இந்தியா விரும்புகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே மங்கள்யான் செயற்கைகோள் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது, பின்னர் சந்திரனுக்கு மனிதரை அனுப்பும் கங்கன்யான் திட்டமும் நடந்துகொண்டு இருக்கிறது. இந்த சூழலில் மிஷன் சக்தி இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றியுள்ளது.

இன்னும் பல உயரங்களை தொட வாழ்த்துக்கள், மிஷன் சக்தி திட்டத்தை வெற்றிகரமாக நடத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

2 COMMENTS

  1. […] மிஷன் சக்தி என்பது பிற நாட்டினரின் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கின்ற திட்டம். இதற்க்கு முன்னர் அமெரிக்கா , ரஷ்யா , சீனா ஆகிய நாடுகளே வெற்றிகரமாக இந்த பரிசோதனையை செய்து முடித்து இருந்தன. தற்போது நான்காவது நாடாக இந்தியா இணைந்துள்ளது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சிக்கழகம் (Defence Research and Development Organisation) இந்த சோதனையை அப்துல்கலாம் தீவில் இருந்து நடத்தியது. வெற்றிகரமாக நடந்த இந்த சோதனையில் விண்வெளியில் இருந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக 3 நிமிடங்களிலேயே தாக்கி அழிக்கப்பட்டது. இதனை புதன்கிழமை அன்று பாரத பிரதமர் நாட்டிற்கு தெரிவித்தார். […]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular