இப்போது இணைய உலகை கலக்கிக்கொண்டு இருக்கும் ஒரு தொழில்நுட்பம் “Chat GPT” என்கிற ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் சாட் புரோகிராம். இந்த Chat GPT மூலமாக யார் வேண்டுமானாலும் ஒரு கணக்கை உருவாக்கி உரையாடல் நிகழ்த்திட முடியும். மனிதர்கள் கேட்கும் கேள்விகள் மற்றும் அவர்கள் ஏற்கனவே கேட்ட கேள்விகள் ஆகியவற்றை நினைவிலே வைத்துக்கொண்டு உரையாடல்களை நிகழ்த்தும் விதத்தில் தான் இந்த Chat GPT வடிவமைப்பு செய்யப்பட்டு இருக்கும்.
உதாரணத்திற்கு, ஒரு சாப்ட்வேர் என்ஜினியர் தான் உருவாக்கிய புரோகிராமில் உள்ள தவறை சரி செய்திட இந்த Chat GPT யிடம் உதவி கேட்கலாம். ஒரு மாணவர் ஏதேனும் ஒரு தலைப்பில் ஒரு கட்டுரை எழுத சொன்னால் Chat GPT எழுதித்தரும். இதுபோன்ற ஏராளமான உதவிகளை Chat GPT யிடம் பெறலாம். நீங்கள் Chat GPT குறித்து மேலும் அறிந்துகொள்ள விரும்பினால் இந்தக்கட்டுரை உதவும்.
Chat GPT என்றால் என்ன?
ChatGPT என்பதற்கு ஆங்கில விரிவாக்கம் Generative Pre-trained Transformer. OpenAI என்கிற நிறுவனத்தால் நவம்பர் மாதம், 2022 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் இந்த Chat புரோகிராம். அதிக அளவிலான தரவுகள் உள்ளீடாக கொடுக்கப்பட்டு மெஷின்லேர்னிங் வாயிலாக அவை மாற்றி அமைக்கப்பட்டு, கேட்கப்படும் மொழி நடைக்கு ஏற்ற மாதிரியான பதிலை தரும் விதத்தில் இந்த புரோகிராம் உருவாக்கப்பட்டுள்ளது.
Preprocessing the text data: தரவுகள் உள்ளீடாக கொடுக்கப்படுகிறது. அவை பதில்களை உருவாக்கப்படும் விதத்தில் மாற்றி அமைக்கப்படுகிறது.
Feeding the data into the model: மாற்றி அமைக்கப்பட்ட தகவல்களின் pattern அறிந்துகொள்ளப்படும்
Fine-tuning the model: கேட்கப்படும் கேள்விக்கு ஏற்ற விதத்திலான பதிலை உருவாக்கும் விதத்தில் பயிற்றுவிக்கப்படும்.
இந்த முறைகளை கடந்த பின்னர், உள்ளீடாக கொடுக்கப்படும் வார்த்தைகளுக்கு ஏற்றது மாதிரியான பதில் வார்த்தைகளை உருவாக்கும் விதத்தில் புரோகிராம் பயிற்சி பெற்றுவிடும்.
OpenAI நிறுவனம் யாருடையது?
Chat GPT புரோகிராமை உருவாக்கியது OpenAI என்கிற நிறுவனம் தான். 2015 ஆம் ஆண்டு வாக்கில் சான் பிரான்ஸிஸ்கோவில் சாம் அல்ட்மன், எலன் மஸ்க் மற்றும் சிலரால் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் ஒரு லாபநோக்கமற்ற நிறுவனம். 2018 ஆம் ஆண்டில் நிர்வாகப்பொறுப்பில் இருந்து மஸ்க் வெளியேறினார், ஆனால் அவர் தொடர்ச்சியாக இந்த நிறுவனத்திற்கு நிதி உதவி அளித்து வந்தார். 2019 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் இருந்து 1 பில்லியன் USD முதலீடாக பெற்றது.
Chat GPT எப்படி உருவாக்கப்பட்டுள்ளது?
Chat GPT ஆனது Generative Pre-training Transformer என்கிற மாதிரி கட்டமைப்பை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. GPT மாதிரியானது ஒரு வகை மின்மாற்றி அடிப்படையிலான நரம்பியல் நெட்வொர்க் ஆகும். இயற்கையான விதத்தில் வார்த்தைகளை உருவாக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புரோகிராமில் பல அடுக்குகள் உள்ளன, உள்ளீடு அடுக்கு,சுய கவனம் அடுக்கு, வெளியீட்டு அடுக்கு என பல அடுக்குகள் உள்ளன.
உள்ளீடு கொடுக்கப்படும் சொற்களை வரிசைப்படுத்தி numerical representations ஆக மாற்றப்படுகிறது. பிறகு ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையிலான உறவுகள் கவனிக்கப்படுகிறது. பிறகு, எந்த வார்த்தைக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்படுகிறது. அதன் மூலமாக கேட்கப்படும் விசயம் புரிந்துகொள்ளப்படுகிறது.
கூடுதலாக, masked language modeling முறை ChatGPT யில் பயன்படுத்தப்படுகிறது. அங்கு சில டோக்கன்கள் ஒரு சிறப்பு டோக்கன் [MASK] மூலம் மாற்றப்பட்டு, மாற்றப்பட்ட டோக்கன்களைக் கணிக்க மாதிரி பயிற்சியளிக்கப்படுகிறது. இந்த நுட்பம், உள்ளீட்டு உரையில் உள்ள சொற்களுக்கு இடையே உள்ள சார்புகளைக் கற்றுக்கொள்ள மாதிரியை அனுமதிக்கிறது, மேலும் உள்ளீட்டுத் தரவைப் போலவே உரையை உருவாக்க உதவுகிறது.
மிகவும் சாதாரணமாக சொல்லவேண்டும் என்றால், கேள்விகள் என்ன விதத்தில் கேட்கப்படுகிறது என்பதை புரிந்துகொண்டு அதே விதத்தில் பதில் சொல்லும் விதத்தில் உருவாக்கப்பட்டு இருப்பது தான் ChatGPT.
Chat GPT யின் பயன்கள்
Chatbots : Chat GPT ஒரு மிகச்சிறந்த chatbot களில் ஒன்று. மனிதர்களின் மொழி நடையிலேயே கேள்விகளுக்கு பதில் தரும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
Language translation: ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு உரையை மொழிபெயர்க்க GPTஐப் பயன்படுத்தலாம், பயனர்கள் வெவ்வேறு மொழிகளில் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதை எளிதாக்குகிறது.
Text summarization: GPT ஆனது நீண்ட உரையை சுருக்கமாக்கப் பயன்படுத்தலாம், இதனால் பயனர்கள் செய்தியின் முக்கியப் புள்ளிகளை விரைவாகப் புரிந்துகொள்ள முடியும்.
Text completion: வாக்கியங்கள் அல்லது பத்திகளை உருவாக்க GPT பயன்படுத்தப்படலாம், பயனர்கள் மிகவும் திறமையாகவும் துல்லியமாகவும் எழுத உதவுகிறது.
Content creation: GPT ஆனது கட்டுரைகள், கதைகள் என பலவற்றை உருவாக்க பயன்படுகிறது. கட்டுரைகள் உருவாக்குபவர்களுக்கு நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்துகிறது.
Chat GPT க்கு Limitations இருக்கிறதா?
Chat GPT மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டாலும் கூட இதற்கும் பல Limitations இருக்கிறது.
> தவறான பதில்களை தரவும் வாய்ப்பு உள்ளது. இணையத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் தான் உள்ளீடாக கொடுக்கப்பட்டுள்ளது என்பதால் தவறாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
> 2021 க்கு முற்பட்ட தகவல்கள் தான் பெரும்பான்மையாக உள்ளீடாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 2021 க்கு பிந்தைய தகவல்கள் பெரிய அளவில் இருக்காது.
> ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன் மற்றும் சீன மொழி உள்ளிட்ட மொழிகளை இதனால் புரிந்துகொண்டு பதில் தர முடியும். இதனை தவிர்த்த பிற மொழிகளில் பதில் தர முடியாது. பெரும்பான்மையாக, ஆங்கிலத்தில் மட்டுமே அதிக தகவல்களை கொண்டிருக்கும்.
Chat GPT யில் கணக்கை உருவாக்குவது எப்படி?
யார் வேண்டுமானாலும் இலவசமாக கணக்கை உருவாக்கி Chat GPT யை பயன்படுத்த முடியும். இதனை எப்படி பயன்படுத்துவது, எப்படி கணக்கை உருவாக்குவது என்பதை இணைக்கப்பட்டுள்ள வீடியோ மூலமாக நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
Chat GPT மூலமாக பணம் சம்பாதிக்க முடியுமா?
Chat GPT மூலமாக நேரடியாக பணம் சம்பாதிக்க முடியாது என்றாலும் கூட, நீங்கள் ஏற்கனவே பணம் சம்பாதிக்க பின்பற்றும் வேலைக்கு Chat GPT யை பயன்படுத்தலாம்.
உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு Content Creator வேலை செய்கிறீர்கள் என வைத்துக்கொண்டால் நீங்கள் Content உருவாக்க Chat GPT யை பயன்படுத்தலாம்.
அதேபோல, நீங்கள் ஒரு யூடியூபர் எனில் நீங்கள் புதிய வீடியோக்களை உருவாக்க யோசனைகளை பெற Chat GPT யை பயன்படுத்தலாம்.
Affiliate Marketing யுக்திகளை உருவாக்க இதனை பயன்படுத்தலாம்
How to generate content using Chat GPT in tamil?
Chat GPT மூலமாக ஒருவரால் இணையதளத்திற்கு தேவையான கட்டுரைகளை எழுத முடியும். அதை எப்படி செய்வது என்பது தெளிவாக இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.
Chat GPT யை பயன்படுத்தினால் adsense இல் பிரச்சனை வருமா?
நம்மில் பலரும் adsense மூலமாகவே விளம்பரங்களை காண்பித்து பணம் ஈட்டி வருகிறோம். கூகுள் நிறுவனம் AI மூலமாக உருவாக்கப்படும் கட்டுரைகளை அனுமதிப்பது இல்லை. ஆகவே, நீங்கள் Chat GPT யை பயன்படுத்தினால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். நீங்கள் Chat GPT யை பயன்படுத்தினால் என்ன செய்திட வேண்டும் என்பதெல்லாம் இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.
முடிவுரை
Chat GPT இப்போதைக்கு பிரபல்யமான புரோகிராம் என அறியப்படுகிறது. பலர் இதன் மூலமாக பணம் ஈட்ட முடியும் என்கிறார்கள். பலர் கூகுள் நிறுவனத்தின் தேடு பொறிக்கு மாற்றாகவும் Chat GPT இருக்கும் என கணித்து இருக்கிறார்கள். Chat GPT மூலமாக ஒருவரால் எந்தவொரு விசயத்தையும் எளிமையாக கற்றுக்கொள்ள முடியும். ஆகவே, Chat GPT மூலமாக பலவிதமாக பலன்கள் இருக்கின்றன. நாம் அதனை எதற்காக பயன்படுத்தப்போகிறோம் என்பதைப்பொறுத்து அதன் பலன்கள் மேலும் விரிவடையும்.
Read More : ChatGPT – 4 இனி இவர்களுக்கு வேலை இருக்காது