Bad Diet
சரியான ஊட்டச்சத்து மிக்க உணவுப்பொருள்களை உண்ணாமல் போவதால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன
அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவது எது என்றால் நாம் புகைப்பழக்கம், மதுப்பழக்கம் , நோய்கள் என அடுக்கிக்கொண்டே போவோம் அல்லவா? ஆனால் இவற்றை காட்டிலும் அதிக இறப்புகளுக்கு காரணம் “தரமற்ற, ஊட்டச்சத்து மிக்க உணவுப்பொருள்களை உண்ணாமல் போவதே” என ஆய்வில் கண்டறிந்து இருக்கிறார்கள். IHME (Institute of Health Metrics and Evaluation) எனும் அமைப்பு 195 நாடுகளில் நடத்திய ஆய்வில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக நாம் அனைவரும் கவனம் செலுத்திட வேண்டிய அறிக்கை இது.
துரித உணவுகளை உண்பது தான் காரணம் என இந்த அறிக்கை கூறவில்லை. மாறாக நாம் சாப்பிடும் உணவில் சேர்த்துக்கொள்ளும் உப்பின் அளவு, பழங்கள் மற்றும் காய்கறிகளை தவிர்ப்பது, பருப்பு வகைகள் போன்ற சத்துமிக்க உணவுப்பொருள்களை தவிர்ப்பது போன்றவையே பிரதான காரணமாக அமைகிறது என இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
ஆய்வின் முடிவு
2017 இல் மட்டும் 11 மில்லியன் இறப்புகள் மற்றும் 255 மில்லியன் பாதிப்புகளுக்கு தவறான உணவு முறை காரணமாக அமைந்திருக்கிறது. அதிக சோடியம் (உப்பு) எடுத்துக்கொண்டதனால் 3 மில்லியன் இறப்புகளும் 70 மில்லியன் பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன, குறைவான பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் எடுத்துக்கொள்வதனால் 2 மில்லியன் இறப்புகளும் 65 மில்லியன் பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
ஒவ்வொரு நாட்டிலும் உணவுப்பழக்கவழக்கம் என்பது வெவ்வேறானவை. அதற்காக, எடுத்துக்கொள்ளும் உணவு மாறலாமே தவிர உடலுக்கு சென்று சேரவேண்டிய ஊட்டசத்து பொருள்கள் எந்தவிதத்திலாவது சென்று சேரும் விதமாக இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்துகிறார்கள். மேலும், தற்போது உணவுக்கட்டுப்பாடு என்ற போர்வையில் இதனை சாப்பிடக்கூடாது அதனை சாப்பிடக்கூடாது என்பது தான் அறிவுறுத்தப்படுகிறதே தவிர, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெற இவற்றையெல்லாம் சாப்பிடுங்கள் என எவரும் அறிவுறுத்துவது இல்லை என்பது ஆய்வாளர்களின் குற்றச்சாட்டு.
விழித்துக்கொள்வோம்!
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.