நிம்மதியாக நிலத்தில் வாழ்வதனை உறுதிப்படுத்துவதனை முதன்மையாகக்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 05 ஆம் நாளை World Soil Day [உலக மண் தினம்] ஆக கடைபிடிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் 68 ஆவது கூட்டத்தில் இந்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நில சீரழிவு மற்றும் வறட்சி போன்ற காரணங்களால் தான் நிலத்திற்கு பெரிய ஆபத்து ஏற்படுகிறது. சுற்றுசூழலை பாதுகாப்பது, ஏற்கனவே பாதிக்கப்பட்ட சுற்றுசூழலை மீட்டெடுத்தல், ஊக்குவித்தல், பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடுவது, காடுகளை நிர்வகித்தல் போன்றவற்றை மேற்கொள்வதன் மூலமாக “நிலத்தில் நிம்மதியான வாழ்க்கை”யை உறுதிப்படுத்துவது தான் இலக்கு.
மறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் ஆடுல்யாதேஜ் இந்த திட்டத்திற்கு மிகவும் ஆதரவாக இருந்தார். ஆகையால் தான் அவரது பிறந்தநாள் டிசம்பர் 05 World Soil Day [உலக மண் தினம்] ஆக கடைபிடிக்கப்படுகிறது.