Site icon Tech Tamilan

Wi-Fi 6 என்றால் என்ன? சிறப்பங்சங்கள் என்ன?

Wi-Fi 6 என்றால் என்ன? சிறப்பங்சங்கள் என்ன?

Wi-Fi 6 என்றால் என்ன? சிறப்பங்சங்கள் என்ன?

Wi-Fi 6 என்றால் என்ன? சிறப்பங்சங்கள் என்ன?

Features of Wi-Fi 6

Wi-Fi மூலமாக இன்டர்நெட் பெறும் கருவிகளின் எண்ணிக்கை அதிகமாகும் போது இன்டர்நெட் வேகத்தில் எந்தவித தொய்வும் இல்லாமல் செயல்படுவதற்கு Wi-Fi 6 தொழில்நுட்பம் அவசியமாகிறது



Click Here! Get Updates On WhatsApp

Wi-Fi 6 என்பது தற்போது நாம் பயன்படுத்திக்கொண்டு இருக்கும் Wi-Fi தொழில்நுட்பத்தின் அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் [Next Generation] . இன்னும் குறிப்பாக இதனை விளக்க வேண்டும் எனில் Wi-Fi 6 ஐ “AX WiFi” அல்லது 802.11ax WiFi என அழைக்கலாம். தற்போது நாம் பயன்படுத்திக்கொண்டு இருக்கும் Wi-Fi  ஆனது 802.11ac. இந்த ஆண்டின் துவக்கத்தில் புதிய தொழில்நுட்ப மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்ததாக விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. 

 

தொழில்நுட்பங்களை தர நிர்ணயம் [industry standards] செய்திடும் IEEE [Institute of Electrical and Electronics Engineers] அமைப்புதான் Wi-Fi தொழில்நுட்பத்தை வடிமைக்கிறது. Wi-Fi 6 ஐயும் இந்த நிறுவனம் தான் வடிவமைத்து வெளியிடுகிறது.

எதற்க்காக Wi-Fi 6?

தற்போது மொபைல் உள்ளிட்ட தொழில்நுட்ப சாதனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஒரு வீட்டில் குறைந்த பட்சம் மொபைல், கணினி என துவங்கி மிகப்பெரிய வீடுகளில் கண்காணிப்பு கருவிகள், இணையதளத்தின் மூலமாக இயங்கும் பிற சாதனங்கள் என Wi-Fi ஐ பயன்படுத்தும் சாதனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படி கருவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது இணைய வேகம் குறைவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. அது போன்ற பிரச்சனைகளை தவிர்க்கத்தான் தற்போது Wi-Fi 6 அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

எந்த அளவிற்கு வேகமாக இருக்கும்?

தற்போது இருக்கும் Wi-Fi தொழில்நுட்பத்தை விட 25% அதிவேகமாக Wi-Fi 6 இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது இருக்கக்கூடிய Wi-Fi தொழில்நுட்பத்தின் அதிகபட்ச வேகமாக 938 Mbps இருக்கும் போது Wi-Fi 6 இன் வேகம் 1,320 Mbps வரைக்கும் அதிகமாக இருக்கும். 

 

Wi-Fi 6 இன் வேகத்தை நீங்கள் உணர வேண்டுமெனில் அதிகபட்ச மொபைல் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்திட வேண்டும். அதேபோல உங்களது பிளான் அதிவேகம் கொண்டதாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு உங்களுடைய பிளான் இன் அதிவேகமே 100  Mbps எனில் நீங்கள் Wi-Fi 6 வசதி கொண்ட Router ஐ பயன்படுத்தினாலும் அதிக வேகத்தை பெற முடியாது.

எப்போது Wi-Fi 6 பயன்பாட்டிற்கு வரும்?

Cisco, Netgear, Asus மற்றும் TP-Link போன்ற Router தயாரிப்பு நிறுவனங்கள் Wi-Fi 6 தொழில்நுட்பத்தினை கொண்டிருக்கிற Router களை விற்பனைக்கு கொண்டுவந்திருக்கிறது. மொபைல் போன்களை பொறுத்தவரைக்கும் Samsung Galaxy S10 தான் Wi-Fi 6 ஐ சப்போர்ட் செய்திடும் தொழில்நுட்பத்தோடு வருகிற முதல் மொபைல் போன். ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்கால போன்களில் Wi-Fi 6 தொழில்நுட்பம் வர அதிக வாய்ப்பு இருக்கிறது.

 

நீங்கள் மிகக்குறைந்த அளவிலான கருவிகளையே பயன்படுத்துகிறீர்கள், இணைய வேகம் குறைவான பிளான் இல் இருக்கிறீர்கள், உங்களது மொபைல் மற்றும் ரௌட்டரில் Wi-Fi 6 தொழில்நுட்பம் இல்லை எனில் நீங்கள் Wi-Fi 6 பற்றி கவலைப்பட தேவையில்லை Wi-Fi 5 போதுமானது.


Click Here! Get Updates On WhatsApp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version