இந்தியாவில் இருக்கும் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் PUBG விளையாட்டை தடை செய்திட வேண்டும் என விரும்பி வருகிறார்கள். இளைஞர்களின் நேரத்தை கொள்ளையடிக்கும் இந்த ஆப் தடை பட்டியலில் விடுபட்டிருப்பது பெற்றோர்களுக்கு ஏமாற்றமே.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்ததை அடுத்து சீன பொருள்களுக்கு எதிரான பிரச்சாரம் இந்தியாவில் அதிகரித்தது. அதில் ஒரு பகுதியாக சீன ஆப்களை இந்தியாவில் தடை செய்திடவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வந்தது. தற்போது மத்திய அரசு 59 சீன ஆப்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அதில் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் டிக்டாக், UC பிரவுசர், ES File Explorer, Shareit போன்ற பல ஆப்களும் அடக்கம். மேலும் படிக்க
59 சீன ஆப்கள் தடை செய்யப்பட்டுள்ள சூழலில் PUBG ஏன் இந்தியாவில் தடை செய்யப்படவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மிக முக்கியக்காரணம் PUBG கேம் சீன நிறுவனத்தை சேர்ந்தது என்ற தகவல் பெரும்பான்மையானவர்களுக்கு தெரிந்திருந்தபடியால் தான். இதுபோலவே WhatsApp, Zoom போன்ற ஆப்களும் ஏன் தடை செய்யப்படவில்லை என்ற கேள்வியோடு பல வாட்ஸ்ஆப் பதிவுகள் வருகின்றன. இந்த கேள்விகளுக்கான பதிலைத்தான் தற்போது பார்க்க இருக்கிறோம்.
PUBG ஏன் இந்தியாவில் தடை செய்யப்படவில்லை?
நம்மில் பெரும்பாலானவர்கள் PUBG விளையாட்டை சீன நிறுவனத்தின் ஆப் என்றுதான் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் PUBG கேமை உருவாக்கியது தென் கொரியாவை சேர்ந்த கேம் ஸ்டூடியோ – புளுகோல் [Game Studio – Bluehole]. PUBG கேம் பிரபலமாக தொடங்கியதை அடுத்து சீன நிறுவனமான டென்சென்ட் [Tencent] சீனாவில் இந்த கேமை வெளியிட அனுமதி வாங்கியது. தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் வெளியிடும் உரிமையை பெற்றது. இந்தியாவிலும் கூட PUBG விளையாட்டை சீன நிறுவனமான டென்சென்ட் [Tencent] தான் வெளியிட்டுள்ளது.
PUBG கேமை பொறுத்தவரைக்கும் உரிமை என்பது இரண்டு நாட்டு நிறுவனங்களுக்கும் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. இதனால் தான் மத்திய அரசின் தடை பட்டியலில் இருந்து PUBG ஆப் விடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தடை செய்யப்பட வேண்டிய ஆப்களின் பட்டியலை தயாரித்தவர்கள் டென்சென்ட் நிறுவனத்தின் பங்கு பற்றி அறிந்திடாமல் கூட இருந்திருக்கலாம்.
இந்தியாவில் இருக்கும் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் PUBG விளையாட்டை தடை செய்திட வேண்டும் என விரும்பி வருகிறார்கள். இளைஞர்களின் நேரத்தை கொள்ளையடிக்கும் இந்த ஆப் தடை பட்டியலில் விடுபட்டிருப்பது பெற்றோர்களுக்கு ஏமாற்றமே.
WhatsApp, Zoom போன்ற ஆப்களும் ஏன் தடை செய்யப்படவில்லை
WhatsApp தற்போது பேஸ்புக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. பேஸ்புக் என்பது ஒரு அமெரிக்க நிறுவனம் ஆகும். ஆகவே தான் இந்த தடை பட்டியலில் WhatsApp இடம்பெறவில்லை.
Zoom ஆப்பை பெரும்பாலானவர்கள் சீன ஆப் என்றுதான் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். Zoom என்ற ஆப்பை உருவாக்கியவர் எரிக் யுவான் என்கிற சீன அமெரிக்கர் மேலும் அவர் அமெரிக்க குடியுரிமையை பெற்றிருக்கிறார். கூடுதலாக, Zoom என்பது Zoom Video Communications என்ற அமெரிக்க நிறுவனத்தை சேர்ந்தது. ஆகவே தான் இந்த தடை பட்டியலில் Zoom இடம்பெறவில்லை
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.