5.4 பில்லியன் பேஸ்புக் கணக்குகள் நீக்கம், ஏன்?

7 reasons Why facebook disabled accounts?

Facebook disable your account

2018 ஆம் ஆண்டு பேஸ்புக் 3.3 பில்லியன் போலி கணக்குகளை நீக்கியது. 2019 இல் 5.4 பில்லியன் கணக்குகளை போலியானவை என நீக்கியுள்ளது. இது இனியும் தொடரும் என தெரிகிறது.



Click Here! Get Updates On WhatsApp

போலிக்கணக்குகளை நீக்கும் பேஸ்புக்

facebook இடம் பயனாளர்களின் தகவல்களை கேட்கும் அரசாங்கம் - அதிகரிப்பு

அதிக பயனாளர்களை இன்றளவும் வைத்துக்கொண்டிருக்கிற பேஸ்புக் அவ்வப்போது பல்வேறு பிரச்சனைகளிலும் சிக்கிக்கொண்டு வருகிறது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா, அமெரிக்க தேர்தலில் பங்கீடு, தகவல் கசிவு, போலி தகவல்கள் என கூறிக்கொண்டே போகலாம். இதுபோன்ற தவறுகளை தடுக்க பேஸ்புக் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

 

இதன் ஒரு பகுதியாகத்தான் போலியான கணக்குகள் பலவற்றை அடையாளம் கண்டு அவற்றை அதிரடியாக நீக்கி வருகிறது. 2018 ஆம் ஆண்டு பேஸ்புக் 3.3 பில்லியன் போலி கணக்குகளை நீக்கியது. 2019 இல் 5.4 பில்லியன் கணக்குகளை போலியானவை என நீக்கியுள்ளது. இது இனியும் தொடரும் என தெரிகிறது.  இப்படி நீக்கும் போது ஒரு விசயத்தையும் பேஸ்புக் குறிப்பிடுகிறது அது என்னவென்றால், இவ்வளவு கணக்குகளை பேஸ்புக் நீக்குவதனால் மட்டுமே போலியான விசயங்கள் பேஸ்புக்கில் இருப்பதாக நினைத்துவிட வேண்டாம், நாங்கள் மிகக்கடுமையான முறையில் ஆராய்கிறோம் என விளக்கியுள்ளது.

போலியான கணக்குகளை மட்டும் பேஸ்புக் நீங்குவதில்லை, தவறான முறையில் பேஸ்புக்கை பயன்படுத்துவோரின் கணக்குகளையும் பேஸ்புக் நீக்கிக்கொண்டு தான் வருகிறது. உங்களது பேஸ்புக் கணக்கு முடக்கப்படாமல் இருக்க வேண்டும் என நீங்கள் இணைத்தால் பின்வரும் தவறுகளை செய்திடாமல் இருக்க வேண்டும்.

1. போலியான பெயர் | Fake Name

அடுத்தவர்களின் பெயர்களிலோ அல்லது கடை அல்லது நிறுவனங்களின் பெயர்களிலோ பேஸ்புக் கணக்குகள் இருக்க கூடாது. நீங்கள் பயன்படுத்தினால் அந்த கணக்கு உங்களது பெயரில் தான் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்பதை பேஸ்புக் கண்டுபிடித்தால் கணக்கை முடக்கி விடுவார்கள். தவறாக முடக்கி இருந்தால் நீங்கள் மேல்முறையீடு செய்யலாம்.

2. தவறான கருத்துக்களை தொடர்ச்சியாக பகிர்தல்

பேஸ்புக் தளத்தில் பகிரக்கூடிய விசயங்களுக்கு பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன, அவற்றை மீறி நீங்கள் போஸ்ட் போட்டால் உங்களது கணக்கு நீக்கப்படும். உதாரணத்திற்கு பிறர் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக போஸ்ட் போடக்கூடாது. அப்படி போட்டால் உங்களது கணக்கு முடக்கப்படும்.

3. தொடர்ச்சியாக விதிமுறைகளை மீறுதல்

பேஸ்புக் பல்வேறு விதிமுறைகளை வகுத்திருக்கிறது . பொதுவாக நாம் அவற்றை படிக்காமலேதான் பயன்படுத்தி வருகிறோம். அவற்றை மீறும் போது நமது கணக்கினை பேஸ்புக் முடக்கிவிடுகிறது . உதாரணத்திற்கு நீங்கள் பலமுறை அடுத்தவர்களுக்கு உரிமை இருக்கின்ற வீடியோக்களை பயன்படுத்துகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். உங்களுக்கு பேஸ்புக் எச்சரிக்கை விடுக்கும். மீண்டும் மீண்டும் தொடர்ந்தால் உங்களது கணக்கை நிரந்தரமாக நீக்கிவிடும்.

4. Friend Request & Group Joining

உங்களுக்கே தெரியும் 5000 நண்பர்களைத்தான் பேஸ்புக்கில் இணைக்க முடியும். நீங்கள் தொடர்ச்சியாக கணக்கில் அடங்காமல் Friend Request கொடுத்துக்கொண்டே இருந்தீர்கள் என்றால் உங்களை சரியான நபர் இல்லை என பேஸ்புக் நினைத்துவிடும். பின்னர் உங்களது கணக்கை நீக்கிவிடும். இதேபோலத்தான் பல்வேறு குரூப்களில் சேருவதற்கு முயன்றாலோ அல்லது தொடர்ச்சியாக அதிகப்படியான விசயங்களை பகிர்ந்தாலோ உங்களது கணக்கை நீக்க வாய்ப்புண்டு.

மீட்க வழி இருக்கிறதா?

நிச்சயமாக இருக்கிறது . பேஸ்புக் தவறாக உங்களது கணக்கை முடக்கிவிட்டது என நீங்கள் கருதினால் நிச்சயமாக முறையீடு செய்யலாம். பின்வரும் லிங்கை கிளிக் செய்து நீங்கள் உங்களது அடையாள அட்டையை இணைந்து உங்களது விளக்கத்தை கொடுத்து புகார் அளிக்கலாம். ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் உங்களது கணக்கு மீண்டும் செயல்படும் இல்லையேல் அவ்வளவு தான்.

 

https://www.facebook.com/help/contact/260749603972907


Click Here! Get Updates On WhatsApp





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.