Site icon Tech Tamilan

ஒலிம்பிக் வெற்றியாளர்கள் ஏன் பதக்கத்தை கடிக்கிறார்கள்? | WHY DO OLYMPIANS BITE THEIR MEDALS?

விளையாட்டு வீரர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக கருதப்படுவது 'ஒலிம்பிக் போட்டிகள்' தான். அந்தப் போட்டிகளில் தங்களது திறனை முழுமையாக வெளிப்படுத்தி வெற்றிபெறுகிறவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. அப்படி பதக்கங்களை பெறுகிறவர்கள் பற்றிய புகைப்படம் அல்லது வீடியோக்களை பார்க்கும் போது பெரும்பாலானவர்கள் தங்களது பதக்கங்களை கடித்துக்கொண்டு இருப்பது போலவே இருக்கும். ஏன் இப்படி பதக்கங்களை கடிக்கிறார்கள் என்ற கேள்வி இயல்பாக எழுவது இயற்கை தான் [Why Do Olympians Bite Their Medals?]

Wonders

ஒலிம்பிக் போட்டிகள் அனைவரும் விரும்பி பார்க்கக்கூடிய ஒரு போட்டி. அதிலே வெற்றியாளர்களுக்கு பதக்கம் கொடுக்கும் போது அதை கடித்துக்கொண்டே புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுக்கிறார்களே ஏன் என யோசித்து இருக்கிறீர்களா?

விளையாட்டு வீரர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக கருதப்படுவது ‘ஒலிம்பிக் போட்டிகள்’ தான். அந்தப் போட்டிகளில் தங்களது திறனை முழுமையாக வெளிப்படுத்தி வெற்றிபெறுகிறவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. அப்படி பதக்கங்களை பெறுகிறவர்கள் பற்றிய புகைப்படம் அல்லது வீடியோக்களை பார்க்கும் போது பெரும்பாலானவர்கள் தங்களது பதக்கங்களை கடித்துக்கொண்டு இருப்பது போலவே இருக்கும். ஏன் இப்படி பதக்கங்களை கடிக்கிறார்கள் என்ற கேள்வி இயல்பாக எழுவது இயற்கை தான் [Why Do Olympians Bite Their Medals?]

தற்போது ஒலிம்பிக் போட்டிகளில் முதலாம் இடம் பிடிப்பவர்களுக்கு வழங்கப்படும் தங்க பதக்கங்கள் முற்றிலும் தங்கத்தினால் ஆனவை அல்ல. தங்கப்பதக்கம் ஆனது 494 கிராம் வெள்ளியாலும் 6 கிராம் மட்டுமே தங்கத்தாலும் ஆனது. ஆனால் முந்தைய காலங்களில் முழுவதுமாகவே தங்கத்தால் தான் தங்கப்பதக்கம் செய்யப்பட்டிருக்கும். கடைசியாக 1912 ஆம் ஆண்டு சுவீடன் நாட்டில் நடைபெற்ற போட்டியில் தான் முழுவதும் தங்கத்தால் ஆன தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. அப்போதைய காலகட்டங்களில் வழங்கப்பட்ட தங்கப்பதக்கம் உண்மையானதா என்பதை கண்டறிய பதக்கங்களை கடிக்கும் பழக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது.

தங்கம் மென்மையான உலோகம் ஆகையால் அதனை கடிக்கும் போது தடம் பதியும். உள்ளே வேறு உலோகம் பயன்படுத்தப்பட்டு மேற்புறமாக தங்க முலாம் பூசப்பட்டு இருந்தால் கடிக்கும் போது முலாம் விலகி உள்ளே இருக்கும் உலோகம் தெரியவரும்.  ஆகவே தான் அந்தக்காலத்தில் சிலர் ஒலிம்பிக் பதக்கத்தை கடிக்க பழகியிருக்கிறார்கள்.

ஆனால் இப்போது வழங்கப்படும் தங்கப்பதக்கம் என்பது 494 கிராம் வெள்ளியாலும் 6 கிராம் மட்டுமே தங்கத்தாலும் ஆனது என்பது அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் இப்போதும் பதக்கத்தை கடிப்பது போன்ற போஸ் கொடுப்பதற்கு காரணம் புகைப்படக்காரர்களும் விளையாட்டு வீரர்களின் பழக்க தோசமும் தான். ஒலிம்பிக் போட்டியில் வெல்கிறவர்கள் இதை ஒரு பழக்கமாக மாற்றிவிட்டபடியால் தெரிந்தோ தெரியாமலோ பதக்கத்தை கடிப்பது போன்ற முறையிலேயே புகைப்படமெடுக்க நிற்கிறார்கள்.

அடுத்தமுறை நீங்கள் பதக்கத்தை கடிப்பது போன்ற புகைப்படத்தை பார்த்தால் இந்தப்பதிவு நினைவிற்கு வரட்டும்.

ஏன் கடிகாரம் அனைத்தும் 10:10 இல் வைக்கப்படுகின்றன?

Read Here

நீர் இல்லாவிடில் பூமியில் உயிரினம் தோன்றியிருக்குமா?

Read Here

Exit mobile version