Site icon Tech Tamilan

Gaming Disorder நோயாக அங்கீகரிக்கட்டது | WHO Officially recognized Gaming Disorder

Gaming Disorder நோயாக அங்கீகரிக்கட்டது

Gaming Disorder நோயாக அங்கீகரிக்கட்டது

Gaming Disorder நோயாக அங்கீகரிக்கட்டது

Gaming Disorder


உலக சுகாதார நிறுவனம் அதிகப்பூர்வமாக “Gaming Disorder” ஐ உலகில் அதிகம் பாதிப்பினை உருவாக்கும் நோய்களுக்கான அட்டவணையில் இணைந்திருக்கிறது.இந்திய அரசு உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு செயலாற்றிட வேண்டும்.


உலக சுகாதார நிறுவனம் அதிகப்பூர்வமாக “Gaming Disorder” ஐ உலகில் அதிகம் பாதிப்பினை உருவாக்கும் நோய்களுக்கான அட்டவணையில் இணைந்திருக்கிறது. இதன்மூலமாக உலக சுகாதார நிறுவனத்தில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கக்கூடிய நாடுகள் இந்த பாதிப்பினை தடுக்கவும் “Gaming Disorder” ஆல் யாரும் பாதிக்கப்படாத விதமாகவும் இருக்க கூடிய நடவடிக்கைளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் .

Gaming Disorder என்றால் என்ன?

Gaming Disorder என்பது தன்னை தானே கட்டுப்படுத்திட இயலாமல் கேமை தொடர்ச்சியாக விளையாடுவது என பொருள் கொள்ளலாம். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நாம் தொடர்ச்சியாக விளையாடுவதனால் உடலுக்கும் மனதிற்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்பது தெரியும். தெரிந்தும் அவர்களால் விளையாடுவதை தடுத்து நிறுத்திட முடியாது. இதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் மன பிறழ்வு, உயிரே போவது கூட நேரிடலாம்.

இந்தியாவில் Gaming Disorder

இதுவரை இந்தியாவில் Gaming Disorder ஆல் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த புள்ளிவிவரங்கள் அரசால் சேகரிக்கப்பட்டதாக தெரியவில்லை. யாரேனும் பாதிக்கப்பட்டாலோ அல்லது தற்கொலை விவாகரத்து போன்றவை நடந்தாலோ அவ்வப்போது “இதற்கு காரணம் தொடர்ச்சியாக விளையாட்டில் ஈடுபட்டதுதான்” என செய்தி வெளியிடுவார்கள் .

பெங்களூருவை சேர்ந்த 26 வயது இளைஞர் தொடர்ச்சியாக அதிக நேரம் NETFLIX இல் நிகழ்ச்சிகளை பார்த்ததனால் அதற்கு அடிமையாகிப்போனதாக மருத்துவமனையில சோதனைக்காக சேர்ந்திருக்கிறார் . இந்தியாவை பொருத்தவரையில் இப்பிரச்சனைக்காக மருத்துவமனையில சேர்த்திருக்கும் முதல் இளைஞராக இவர் கருதப்படுகிறார் .

அரசு கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும்

உலக சுகாதார நிறுவனம் எடுத்திருக்கக்கூடிய இந்த நடவெடிக்கையின் உண்மையான நோக்கமே உறுப்பினர்களாக இருக்கக்கூடிய அரசுகள் இந்த விசயத்தில் உடனடியாக கவனம் செலுத்திட வேண்டும் என்பதுதான். பப்ஜி, நெட்பிலிக்ஸ் போன்றவற்றின் வரவினால் மொபைலில் அதிக நேரம் பொழுதினை போக்க ஆரம்பித்து பின்னாளில் அதுவே அடிமைத்தனமாக மாறிப்போன பல இளைஞர்கள் உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

இதனை தடுக்க அரசாங்கம் கடுமையான நடவெடிக்கைகளை கொண்டுவர வேண்டும். அதேபோல பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இளைஞர்களை மீட்க வேண்டும்.

சுய கட்டுப்பாடு அவசியம் இளைஞர்களே

மொபைல் போன்ற சாதனங்களும் கேம்கள் , வீடியோக்கள் மற்றும் திரைப்படங்கள் அனைத்தும் நம்மை மகிழ்விக்க வந்தவை . அவற்றினை பயன்படுத்துவதோ விளையாடுவதோ பார்ப்பதோ தவறில்லை . ஆனால் அதனை அளவோடு செய்கிறோமா என்பதில் தான் அனைத்துமே இருகின்றது . இந்த மாதிரியான விசயங்களுக்கு அடிமையாகி போகின்றவர்கள் விபரம் அறியாதவர்கள் இல்லை , அனைவருமே படித்தவர்கள் , நன்றாக புரிந்துகொள்ளக்கூடியர்வர்கள் .

நாம் எந்த நிலையில் இருக்கின்றோம் என்பதனை அனைவருமே அறிந்துவைத்திருப்பது நல்லது . ஆரம்பகட்டத்தில் இருப்பவர்கள் இப்போதே கவனமாக குறைத்துக்கொள்ளுங்கள் . உங்களாலேயே கட்டுப்படுத்திட முடியாவிட்டால் உடனடியாக மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள் .





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version