Site icon Tech Tamilan

WhatsApp Update : Now you can know how many times a post forwarded

WhatsApp New Feature

பொய்யான செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் முயற்சியின் ஆரம்பமாக Forwarding Info, Frequently Forwarded

எனும் இரண்டு ஆப்சன்களை WhatsApp கொண்டுவர இருக்கிறது.


WhatsApp New Features

>> Forwarding Info

 

>> Frequently Forwarded

தவறான செய்திகள் சமூக வலைத்தளங்கள் மற்றும் WhatsApp போன்ற ஆப்களின் மூலமாக அதிகமாக பகிரப்படுகிறது  என்பது ஏற்கனவே எழுந்துள்ள குற்றசாட்டு. இந்திய அரசாங்கமும் இதனை தடுக்க சமூகவலைத்தள நிறுவனங்களை கேட்டுக்கொண்டது. அதற்கான முயற்சிகளை நாங்கள் செய்வோம் என நிறுவனங்களும் உறுதி அளித்திருந்தன. தற்போது WhatsApp Update வெளிவர இருக்கிறது.

Forwarding Info

நீங்கள் ஒரு செய்தியை அனுப்பியவுடன் அந்த மெசேஜ் ஐ செலக்ட் செய்து பின்னர் Message Info வில் சென்று பார்த்தால் அந்த செய்தி எத்தனை முறை அனுப்பப்பட்டிருக்கும் என்பதனை தெரிந்துகொள்ள முடியும்.

 

அனுப்பப்பட்ட செய்திக்கு மட்டும் தான் தற்போது message info ஆப்சன் வருகிறது. ஆகவே செய்தியை அனுப்பியவுடன் தான் அது எத்தனை முறை பகிரப்பட்டு இருக்கிறது என்பதனை அறிந்துகொள்ள முடியும். இது ஒருகுறைபாடு தான். நமக்கு வந்தவுடனே இது தெரிந்தால் மட்டுமே நல்லது .

Frequently Forwarded

ஒரு செய்தி 4 முறைக்கும் அதிகமாக Forward செய்யப்படும்போது அதனை தெரிந்துகொள்வதற்காக Frequently Forwarded என்ற ஆப்சன் கொண்டுவரப்பட இருக்கிறது. இதன் மூலமாக அதிகமாக பகிரப்படும் செய்தி எதுவென்பதனை அறிந்துகொள்ள இயலும். ஒரு செய்தி அதிகமுறை அனுப்பப்பட்ட செய்தியாக இருக்கும் போது அது உண்மையானதா , தற்போதைய செய்தியா என்பது போன்றவற்றை பயனாளர்கள் பார்க்க வேண்டும்.

 

இந்த இரண்டு ஆப்சன்களும் இதுவரை வெளிவரவில்லை, விரைவில் WhatsApp Update வெளிவரும் என இந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version