Site icon Tech Tamilan

5 பேருக்கு $50000 கொடுத்த வாட்ஸ்ஆப் | Whatsapp startup india challenge winners

whatsapp startup india challenge winners

whatsapp startup india challenge winners

whatsapp startup india challenge winners

Startup Winners

வாட்ஸ்ஆப் இந்தியா நடத்திய போட்டியில் வென்றவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் டாலர் வழங்கப்பட்டது



வாட்ஸ்ஆப் இந்தியா (What’sApp India) மற்றும் ஸ்டார்ட்அப்  இந்தியா (Startup India) இவை இரண்டும் இணைந்து புதிய தொழில்முனைவோர்களுக்கான போட்டியினை (Entrepreneur Challenge) அறிவித்து இருந்தது . அதன்படி இந்திய பொருளாதாரத்தை உயர்த்துகிற அதேசமயம் பெரும்பாலான மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும்படியான ஐடியாக்களுடன் கூடிய பிசினஸ் ஐ துவங்கியிருக்கும் இளைஞர்கள் போட்டியில் கலந்துகொள்ளலாம் .
அதன்படி விண்ணப்பித்து இருந்த பல போட்டியாளர்களில் இருந்து 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு நேரடியாக பங்கேற்கும் நிகழ்விற்கு அழைக்கப்பட்டார்கள் . ஒவ்வொரு போட்டியாளரும் தங்களது நிறுவனம் குறித்த விவரங்களை நடுவர்களின் முன்னால் விவரிக்கவேண்டும் . அந்த 10 போட்டியாளர்களில் இருந்து 5 போட்டியாளர்கள் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்  . அவர்களுக்கு தலா $50,000 டாலர் WhatsApp india வின் சார்பாக கொடுக்கப்பட்டது . MedCords, Melzo, Javis, Gramophone and MinionLabs இவை தான் வெற்றிபெற்றவை.

MedCords

நகர்ப்புற மற்றும் கிராமப்புற பின்தங்கிய மக்களுக்கு குறைந்தவிலையில் தரமான ஹெல்த்கேர் வசதியினை தொழில்நுடபத்தின் உதவியினால் வழங்குவது தான் இதன் அடிப்படையான விசயம் . நோயாளிகளின் நோய் விவரங்களை டிஜிட்டல் முறையில் சேமித்து அதற்கேற்றவாறு மருத்துவ ஆலோசனைகளை வழங்குவது .

Melzo

சூரத்தை அடிப்படையாகக்கொண்டு செயல்படும் இந்நிறுவனம் விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் தகவல்களை வழங்கிடுகிறது . எத்தகைய கருவிகளிலும் சிறப்பாக செயல்படும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது . 200 நாடுகளில் 3 லட்சம் பேர் இதனை பார்த்திருக்கிறார்கள்.

Javis

மும்பையை இருப்பிடமாகக்கொண்ட இந்நிறுவனம் , WhatsApp போன்று ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் முறையில் செயல்படும் இந்த பிளாட்பார்ம் ஆனது பிசினஸ் எளிமையாக செய்வதற்கு உதவிகரமானதாக இருக்கின்றது . கேட்கப்படுகிற கேள்விகளுக்கு தானாகவே பதிலளிக்கும் விதத்திலான பிளாட்பார்ம்.

Gramophone

விவசாயிகளுக்கு உதவிடும் விதமாக செயல்படும் இந்த நிறுவனம் அறுவடைக்காலத்தில் 20 சதவிகித மிச்சத்தையும் ஒட்டுமொத்த உற்பத்தியினை 30 சதவிகித லாபத்தையும் கொடுக்கும் என கூறப்பட்டுள்ளது .

MinionLabs

பெங்களூருவில் செயல்படும் இந்நிறுவனமானது எவ்வளவு மின்சாரம் செலவாகின்றது என்பதனை கண்காணிக்க ஒரு கருவியினை உருவாக்கியிருக்கிறது . பல கருவிகளில் செலவாகின்ற மின்சார அளவினை கண்காணிக்க முடியுமென்பதனால் மின்சாரத்தை சேமிக்க முடியும் .

இந்தப்போட்டியும் 50 ஆயிரம் டாலரும் நிச்சயமாக இந்தியாவில் புதிய தொழில் துவங்க நினைக்கின்ற இளம் தொழில்முனைவோருக்கு பயனுள்ளதாக இருக்கும் .





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version