Site icon Tech Tamilan

WhatsApp Gold Virus is TRUE OR NOT?


தற்போது பின்வரும் குறுஞ்செய்தி ஒன்று மிகவேகமாக பரவிவருகிறது . அதன்படி மார்டினெல்லி ( Martinelli) என்ற பெயரில் ஒரு வீடியோ வாட்ஸ்ஆப்பில் வரும் அதனை ஓபன் செய்யாதீர்கள் . ஓபன் செய்துவிட்டால் பிறகு உங்களால் ஒன்றுமே செய்ய இயலாது . WhatsApp gold ஐ அப்டேட் செய்யும்படி மெசேஜ் வந்தாலும் ஓபன் செய்யாதீர்கள் . அது ஆபத்தான வைரஸ் எனவும் , இந்த செய்தியை அனைவருக்கும் பகிரவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது .

 

“Today the radio was talking about WhatsApp Gold and it is true. There is a video that will be released tomorrow on WhatsApp and is called Martinelli. Do not open it. Enter your phone and nothing you do will fix it. Spread the message if you know someone. If you receive a message to update Whatsapp Gold Do not open it! They just announced that the virus is serious. Send it to everyone.”


WhatsApp Gold Virus is TRUE OR NOT?

WhatsApp gold

2016 இலும் இதேபோன்றதொரு வதந்திதான் பரவியது , தற்போதைய WhatsApp இல் இருப்பதை காட்டிலும் அதிக சிறப்பம்சங்களை பெற அப்டேட் செய்திடுங்கள் என குறுஞ்செய்தி பரவியது .



WhatsApp அப்போதும் இதனை மறுத்தது , இப்போதும் மறுத்திருக்கிறது . மேலும் அவர்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளபடி WhatsApp க்கான அப்டேட் ஆப்பிலேயே வருமே தவிர ஒரு லிங்க் இல் டவுண்லோடு செய்துகொள்ளும்படி வராது . WhatsApp plus , WhatsApp gold போன்றவைகளுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை .

 

மொத்தத்தில் இதுபோன்ற மெசேஜ் அனைத்துமே புரளியை ஏற்படுத்துகிறவையே 

அப்படி மெசேஜ் வந்தால் என்ன செய்வது ?

அப்படி ஏதேனும் உங்களுக்கு லிங்க் வந்தால் அதனை கிளிக் செய்யாமல் தவிர்த்துவிடுங்கள் .

உங்களது மொபைலில் WhatsApp ஐ இண்ஸ்டால் செய்ய வேண்டும் எனில் playstore இல் சென்று டவுண்லோடு செய்து இண்ஸ்டால் செய்திடுங்கள் . கண்ட இணையதளங்களில் சென்று டவுண்லோடு செய்ய வேண்டாம் .


——————————————————————————————

Advertisement :



——————————————————————————————


Fake Version of WhatsApp still there be alert

எத்தனை சாட் ஆப்கள் வந்தாலும் இன்றுவரை உலகின் பெரும்பகுதி  மக்களால் பயன்படுத்தப்படுவது facebook இன் WhatsApp தான் . தற்போது இணையத்தில்  WhatsApp ஆப்பின் போலியான ஆப் இணையத்தில் கிடைக்கிறது . அதனை மக்கள் டவுன்லோடு செய்து இண்ஸ்டால் செய்வதும் நடக்கிறது . இதனால் மிகப்பெரிய அளவில் டேட்டா திருட்டும் நடைபெறுவதாக MalwareByets தனது ரிப்போர்ட்டில் தெரிவித்துள்ளது .

 

 

WhatsApp Plus என்கிற பெயரில் இணையத்தில் கிடைக்கும் இந்த ஆப்பினை இண்ஸ்டால் செய்யும்போது அது பயன்படுத்துபவர்களின் தகவல்களை திருடி விடுவதாக கூறப்படுகிறது .

 

Google Play Store இல் இந்த ஆப் கிடைப்பது இல்லை . ஆனாலும் Google search செய்திடும்போது apk வடிவில் பல இணையதளங்களில் What’sApp plus கிடைக்கின்றது .

 

 WhatsApp பயன்படுத்த நினைப்பவர்கள் இணையத்தில் தேடும் போது plus என்பதனால் கூடுதல் வசதிகள் இந்த ஆப்பில் இருப்பதாக நினைத்துக்கொண்டும் இண்ஸ்டால் செய்துவிடுகின்றனர் . பலர் எது ஒரிஜினல் ஆப் என்பது தெரியாமலும் டவுண்லோடு செய்கின்றனர் .

 

WhatsApp Plus தவறான பாதுகாப்பற்ற ஆப்பாக தெரிவிக்கபட்டுள்ளது . இதனுடைய domain முகவரி Android/PUP.Riskware.Wtaspin.GB

 

இந்த ஆப்பினை இண்ஸ்டால் செய்திடும்போது தங்கநிற வாட்ஸ் ஆப் லோகோவுடன் படத்தில் காட்டியுள்ளபடி இருக்கும் . அதில் இருக்கின்ற Accept and Continue பட்டனை அழுத்தியவுடன் WhatsApp update என வரும் , கீழே download ஆப்சனும் இருக்கும் .

 

 

Download பட்டனை அழுத்தியவுடன் அரபிக்  மொழியில் இருக்கக்கூடிய இணையதளத்திற்கு உங்களை கொண்டு செல்லும் . அங்கு புதிய பெயரில் Watts plus plus WhatsApp ஒரு ஆப் இருக்கும் .

 

இந்த ஆப் சில கூடுதல் வசதிகளை பெற்று இருந்தாலும் இந்த fake ஆப் எப்படி இயங்குகிறது , தகவல்களை பெறுகிறது என்பதனை கண்டறிய இயலவில்லை . ஆனால் இந்த ஆப் பயனாளர்களின் தகவல்களை திருடும் பாதுகாப்பற்ற ஆப் என MalwareByets தனது ரிப்போர்ட்டில் தெரிவித்துள்ளது .

 

மொபைல் ஆப்களை Playstore இல் இருந்து மட்டும் டவுன்லோடு செய்திடுங்கள்


TECH TAMILAN


Exit mobile version