Site icon Tech Tamilan

WhatsApp Business App | குட்டி பிசினஸ் பன்றவங்க கண்டிப்பா பயன்படுத்துங்க

Whatsapp Business logo

Whatsapp Business logo

Whatsapp Business logo

WhatsApp Business App

சிறியதாக பிசினெஸ் செய்பவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என WhatsApp நிறுவனத்தால் கூறப்பட்டது. தற்போது WhatsApp Business ஆப்பினை 5 மில்லியன் பேர் பயன்படுத்துவதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Facebook நிறுவனத்தின் WhatsApp சாட் ஆப் பெரும்பாலான நபர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. WhatsApp நிறுவனம் கடந்த ஆண்டு WhatsApp Business எனும் புதிய ஆப்பை வெளியிட்டு இருந்தது. இந்த ஆப் சிறியதாக பிசினெஸ் செய்பவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என WhatsApp நிறுவனத்தால் கூறப்பட்டது. தற்போது WhatsApp Business ஆப்பினை 5 மில்லியன் பேர் பயன்படுத்துவதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது WhatsApp Business App வெளியிடப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளதை ஒட்டி Web வெர்சனில் சில அப்டேட்களை கொண்டுவந்துள்ளது WhatsApp நிறுவனம்.

யார் WhatsApp Business App ஐ பயன்படுத்தலாம்?

WhatsApp போன்று தான் WhatsApp Business App ம் இயங்கும். ஆனால் சிறிய அளவில் பிசினஸ் செய்பவர்கள் WhatsApp Business App ஐ பயன்படுத்தலாம். WhatsApp Business App இல் இருக்க கூடிய சில வசதிகளான Quick Reply , Welcome Message , Label போன்றவற்றின் மூலமாக வாடிக்கையாளர்களை எளிமையாக தொடர்பில் வைத்திருக்க முடியும். ஆபர் உள்ளிட்ட விவரங்களை எளிமையாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க முடியும்.

WhatsApp Business App சிறப்பம்சங்கள்

முற்றிலும் இலவசம்

முன்னரெல்லாம் வாடிக்கையாளர்களுக்கு ஆபர் உள்ளிட்ட விவரங்களை குறுஞ்செய்தி மூலமாகவே அனுப்பி வந்தார்கள். இதற்கென குறிப்பிட்ட தொகையினை தொலைத்தொடர்பு நிறுவங்களுக்கு அளிக்க வேண்டி இருந்தது. தற்போது அனைவரும் இன்டர்நெட் வசதி பெற்றுவிட்ட சூழலில் WhatsApp Business App ஐ பயன்படுத்துவதன் மூலமாக அந்த பணத்தினை சேமிக்கலாம். இணையத்தில் தற்போது பல ஆப்கள் இதுபோன்ற சேவையினை வழங்குவதற்காக இருக்கின்றன ஆனால் அவை குறிப்பிட்ட தொகையினை வாங்கிக்கொண்டு தான் வழங்குகின்றன. ஆனால் WhatsApp Business App முற்றிலும் இலவசம்.

 

Business Profiles

இதுதான் மிக முக்கிய வசதி, WhatsApp Business App இல் Business Profiles ஐ கிரியேட் செய்திடலாம். இதன்மூலமாக வாடிக்கையாளர்கள் உங்களுடைய கடையின் முகவரி, இலவச தொடர்பு எண், இணைய முகவரி உள்ளிட்ட பல தகவல்களை தெரிந்துகொள்ள இயலும்.

 

Greeting Message , Away Message , Quick Replies

Greeting Message – உங்களது எண்ணிற்கு முதன்முதலாக தொடர்பு கொள்ளும் நபருக்கு வரவேற்பு செய்தியை நீங்கள் அனுப்பலாம். இதனை நீங்கள் அனுப்ப தேவையில்லை தானாகவே சென்றுவிடும்

 

Away Message – நீங்கள் தொடர்புக்கு வெளியே இருக்கும் போது உங்களை தொடர்பு கொள்பவர்களுக்கு கூற வேண்டிய செய்தியினை கூறலாம்

 

Quick Replies – ஒவ்வொரு முறையும் நீங்கள் குறுஞ்செய்தியை டைப் செய்து அனுப்ப வேண்டியது இல்லை. Quick Reply மெசேஜ்களை save செய்துவிட்டு / என டைப் செய்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப முடியும்.

 

Labels

இதன்மூலமாக customer , message ஆகியவற்றினை பிரித்துவைத்துக்கொள்ள முடியும். ஆர்டர் செய்தவர்கள் , பணம் தர வேண்டியவர்கள் என பலதரப்பட்ட விவரங்களை பிரித்து பார்த்துக்கொள்ள இயலும்.

 






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version