Site icon Tech Tamilan

What will happen if you are not reading ‘Terms and Conditions’?

 


ஒவ்வொருவரும் தங்களது மொபைலில் குறைந்தது 10 முதல் 15 ஆப்களை வைத்திருப்போம், குறைந்தது Google , Facebook, Instagram,Snapchat போன்று 5 க்கும் மேற்பட்ட சமூக வலைத்தளங்களில் கணக்குகளை தொடங்கியிருப்போம். இவற்றில் கணக்குகளை துவங்க கண்டிப்பாக ‘Terms and Conditions’ என்ற பகுதியை நாம் கடந்து போகாமல் இருக்க முடியாது. நொடிப்பொழுதில் ‘Terms and Conditions’ இல் டிக் செய்துவிட்டு நமக்கான கணக்கினை துவங்கி விடுகிறோம். அந்த ‘Terms and Conditions’ இல் என்ன இருக்கிறது, படிக்காமல் டிக் செய்வதானால் என்னாகும் என்பதனை தான் இந்த பகுதியில் பார்க்க இருக்கிறோம்.

 


 

What does terms and conditions apply mean?

 

Reading terms and condition is very important thing when you signup

 

Terms and conditions ஐ எளிமையான முறையில் சொல்ல வேண்டுமானால் ‘ஒப்பந்த பத்திரம்’ எனலாம். நாம் ஒரு இணையதளம் அல்லது ஆப் ஐ இன்ஸ்டால் செய்து பயன்படுத்திடும்போது அதன் நிறுவனங்கள் நமது தகவலை பெறுவது உண்டு. அதேபோல நநிறுவனம் வழங்குகின்ற தகவலை நீங்களும் பெறுவீர்கள். இருவரும் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடும்போது உங்களுடைய என்னமாதிரியான தகவலை நிறுவனம் சேமிக்கிறது, அதனை யாருடன் பகிர்ந்துகொள்ள போகிறது என்பதும், நிறுவனம் வழங்குகின்ற தகவலை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திட வேண்டும் என்பதற்கான ஒப்பந்த விதிமுறைகள் terms and conditions இல் இருக்கும்.


Why many of them are not reading ‘Terms and Conditions’?

 

Reading terms and conditions is time consuming and bored, but its important

 

Terms and conditions ஐ ஏன் படிக்கவில்லை என்பதற்கு அதிகப்படியான பதிலாக இருப்பது

> மிக அதிக பக்கங்களை கொண்டிருக்கும்

> படித்தாலும் புரியப்போவது இல்லை

> என்னுடைய தகவல் முக்கியமானது இல்லை

இவை தான் அதிகப்படியான பதிலாக இருக்கும்.


What will happen if you are not reading ‘Terms and Conditions’?

 

மிகவும் தேவையான ஒரு ஆய்வினை Norwegian Consumer Council ஐ சேர்ந்த Fin மற்றும் அவரது குழுவினர் ‘Terms and Conditions’ குறித்த விரிவான ஆய்வினை மேற்கொண்டனர். அதுகுறித்து அவர் TED TALK நிகழ்வில் பகிர்ந்துகொண்ட வீடீயோ இதோ.

 

 

இவர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஒரு நிறுவனத்தின் ‘Terms and Conditions’ மட்டும் 900 பக்கங்கள் இருந்திருக்கின்றன. ஒரு நபர் சராசரியாக இன்ஸ்டால் செய்யக்கூடிய ஆப்களை தேர்ந்தெடுத்து அதன் ‘Terms and Conditions’ களை படிக்க வைத்திருக்கின்றனர். அப்படி படிக்கும் போது அதனை படித்து முடிக்க மட்டும் 31 மணி 49 நிமிடங்கள் ஆகியிருக்கின்றன. ஒருவர் ‘Terms and Conditions’ ஐ படிக்க இவ்வளவு நேரம் செலவு செய்வாரா? இது இயல்பான ஒன்றா என பார்த்தால் நிச்சயமாக இருக்கவே முடியாது.

 

Fin’s team appointed person to readout terms and conditions for the popular apps

 

‘Terms and Conditions’ ஐ படிக்காமல் போனால் என்னாகும் என்பதற்கும் இவர்கள் ஒரு Dating ஆப்பை தேர்ந்தெடுத்து சோதனை நடத்தியிருக்கிறார்கள். அதன்படி ஒருவர் தன்னுடைய ‘Account’ ஐ திறக்கும் போது அதில் ஒரு பட்டன் தானாகவே டிக் ஆகியிருக்கிறது. அந்த பட்டன் ‘கணக்கினை துவங்குபவர் தன்னுடைய facebook கணக்கில் இருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தையும் அந்த நிறுவனமோ அல்லது அது விற்கக்கூடிய பிற நிறுவனங்களோ பயன்படுத்திக் கொள்ள அனுமதி கொடுக்கிறார்’ என்பதாகும். இதனை நாம் கவனிக்காமல் சென்றால் நமது தகவல்கள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை கூட நிறுவனங்கள் பயன்படுத்தவோ விற்பனை செய்யவோ முடியும்.

 

நமக்கு இலவச சேவையினை வழங்குவதாக கூறிக்கொள்ளும் Google, Facebook உட்பட அனைத்து நிறுவனங்களுமே நமது செயல்பாட்டினை கண்காணிக்கின்றன. அவை பயன்படுத்திக்கொள்வதோடு மட்டுமல்லாமல் பிற நிறுவனங்களுக்கு விற்கவும் செய்கின்றன. இதற்க்கான அனுமதியே நாம் படிக்காமல் டிக் செய்கின்ற ‘Terms and Conditions’ இல் இருக்கின்றன.

 


 

What can we do?

 

போதுமான வரை கண்ட ஆப்களை இன்ஸ்டால் செய்வதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பற்ற இணையதளங்களில் கணக்கினை திறப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். Facebook போன்ற தளங்களில் “நீங்க யார்?” “எந்த நடிகை உங்களுக்கு பொருத்தமானவராக இருப்பார்?” ” எந்த ராசி?” என்பது போன்று கேட்கும் இணையதளங்களில் நுழைவதை நிறுத்திக்கொள்ளுங்கள். அவை உங்களுடைய தகவலை திருட அதிக வாய்ப்பிருக்கிறது.

 

முழு ‘Terms and Conditions’ ஐ படிப்பது மிக கடினமானது, நேரம் பிடிக்கக்கூடியது. ஆகையால் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் படிப்பது சிறந்தது. அவை நம்மிடமிருந்து என்ன தகவல்கள் திரட்டப்படுகின்றன, அவை யாருடன் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன, அவை எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பவை மிக முக்கியமானவை.


தங்கம், நிலம் மட்டும் உங்களது சொத்து அல்ல, உங்களை பற்றிய தனிப்பட்ட விவரங்களும் உங்களுடைய சொத்து தான்.


TECH TAMILAN

Exit mobile version