Site icon Tech Tamilan

QR Code என்றால் என்ன? | QR Code உருவாக்குவது எப்படி? ​

1D-vs-2D-barcode QR code in tamil

1D-vs-2D-barcode QR code in tamil

1D-vs-2D-barcode QR code in tamil

QR Code

சாதாரண பெட்டிக்கடை துவங்கி மிகப்பெரிய வணிக வளாகங்கள் வரைக்கும் QR Code பயன்படுத்தப்படுகிறது. கோடிக்கான நண்பர்கள் தங்களது மொபைல்களில் ஸ்கேன் செய்து பணத்தை எளிமையாக செலுத்திவிடுகிறார்கள்.

படத்தில் இருக்கும் QR Code ஐ நீங்கள் அதிகப்படியான இடங்களில் பார்த்திருக்கக்கூடும். பெட்ரோல் பங்குகளில் பணம் செலுத்தும் இடத்திலோ, கடைகளில் இருக்கும் பொருள்களிலோ, WhatsApp ஐ கணினியில் ஓபன் செய்திடும் போதோ, ShareIt App ஐ பயன்படுத்தும் போதோ கண்டிப்பாக கட்ட வடிவத்திலான QR Code ஐ பார்த்திருப்பீர்கள். QR Code என்றால் என்ன? எப்படி வேலை செய்கிறது? என்பதை அறிந்துகொள்வதற்கு ஆர்வமாக இருக்கிறீர்களா? உங்களுக்கான பதிவு தான் இது.

QR Code என்றால் என்ன?

1D Barcode – நாம் கடைகளுக்கு சென்று பொருள் வாங்கும் போது பில் போடுபவர் கையில் ஒரு ஸ்கேனரை வைத்து Barcode ஐ ஸ்கேன் செய்வார். உடனடியாக அதன் விலை பில்லில் சேர்ந்துவிடும். அப்போது ஸ்கேனரில் இருந்து சென்று எதிரொளிக்கும் ஒளியினை Barcode இல் இருக்கும் கறுப்பு நிற கோடுகள் இடைமறிப்பு (intercept) செய்யும். இதில் குறைந்த அளவிலான தகவலை மட்டுமே உள்ளீடு செய்ய முடியும்.
 
நாம் இதற்க்கு முன்னர் பயன்படுத்திய BAR CODE இல் உள்ள குறைபாடுகளை களைவதற்காக கொண்டுவரப்பட்டதுதான் QR Code. QR CODE என்பதன் ஆங்கில விரிவாக்கம் QUICK RESPONSE CODE . 1டி வடிவ பார் கோடில் குறைந்த அளவிலான தரவுகளை மட்டுமே சேமிக்க முடியும் ஆனால் 2டி வடிவத்திலான QR Code இல் அதிகப்படியான விவரங்களை சேமித்து வைக்க முடியும். QR Code ஐ decode செய்வதற்கு தனித்துவமான கருவிகள் எதுவும் தேவைப்படுவது இல்லை. கேமரா மற்றும் இணைய வசதி கொண்ட மொபைல் போன் இருந்தாலே போதுமானது, இதுதான் மிக சிறந்த சிறப்பம்சம். தற்போது பல்வேறு அப்ளிகேஷன்களில் QR Code இன் பயன்பாடு இருந்து வருகிறது.

QR Code ஐ நன்றாக கவனித்து பாருங்கள், மூன்று மூலைகளில் சிறிய கட்டங்கள் இருக்கும். ஒரு மூலையில் மட்டும் இந்த கட்டம் இருக்காது. சரியான திசையிலிருந்து QR Code ஐ படிப்பதற்கு இந்த கட்டங்கள் தான் உதவுகின்றன. இதுபோன்று பல நுணுக்கமான செயல்பாடுகள் QR Code இல் இருக்கும்.

QR Code உருவாக்குவது எப்படி?

பின்வரும் இணையதளங்களில் சென்று உங்களுக்கான QR Code ஐ உருவாக்கிக்கொள்ள முடியும்.
 
Kaywa
GOQR.me
Free QR Code Generator by Shopify
Visualhead
The-qrcode-generator.com
QR Stuff
qr-code-generator.com
QR Code Monkey
Create QR Code by Google App Engine

QR Code ஐ ஸ்கேன் செய்திடும் போது எந்த இணைய முகவரிக்கு செல்ல வேண்டுமோ அதனை கொடுத்துக்கொள்ளுங்கள்.

பிறகு Static அல்லது Dynamic என்ற ஆப்சனில் ஒன்றை தேர்ந்தெடுங்கள் Static ஐ தேர்ந்தெடுத்தால் பிரிண்ட் செய்துவிட்டால் உங்களால் அதில் கொடுத்திருக்கும் தகவலை மாற்றிட முடியாது.Dynamic ஐ தேர்ந்தெடுத்தால் பிரிண்ட் செய்துவிட்டால் கூட தகவலை மாற்றிட முடியும்.வெளியில் பகிர்வதற்கு முன்பாக QR Code சரியாக வேலை செய்கிறதா என்பதை பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.


Click Here! Get Updates On WhatsApp





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version