Free Calls
மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஜியோ தற்போது இலவச அழைப்பினை நிறுத்திக்கொள்ளவிருக்கிறது. அதன்படி ஜியோ எண்ணிலிருந்து வேறொரு நெட்ஒர்க் இல் இருக்கும் எண்ணிற்கு [ஏர்டெல், வோடபோன் etc] அழைத்துப்பேசினால் ஒரு நிமிடத்திற்கு 6 பைசா வீதம் கட்டணமாக பயனாளர்கள் செலுத்திடவேண்டும்.
Click Here! Get Updates On WhatsApp
மிகக்குறைந்த கட்டணத்தில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம், அதிவேக இணைய சேவை போன்ற காரணங்களுக்காக மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஜியோ தற்போது இலவச அழைப்பினை நிறுத்துக்கொள்ளவிருக்கிறது. அதன்படி ஜியோ எண்ணிலிருந்து வேறொரு நெட்ஒர்க் இல் இருக்கும் எண்ணிற்கு [ஏர்டெல், வோடபோன் etc] அழைத்துப்பேசினால் ஒரு நிமிடத்திற்கு 6 பைசா வீதம் கட்டணமாக பயனாளர்கள் செலுத்திடவேண்டும்.
ஜியோ இந்த நிலைக்கு வர என்ன காரணம்? IUC என்றால் என்ன? போன்றவற்றை இந்த பகுதியில் காண்போம்.
IUC என்றால் என்ன?
IUC என்பதற்கு ஆங்கிலத்தில் “Interconnect Usage Charge”. தற்போது பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட சூழலில் ஒரு நெட்ஒர்க்கில் இருந்து இன்னொரு நெட்ஒர்க்கிற்கு அழைப்பினை ஒரு பயனாளர் மேற்கொள்கிறார் எனில், உதராணத்திற்கு ஏர்டெல் பயனாளர் ஒருவர் வோடபோன் எண்ணிற்கு அழைக்கிறார் எனில் – ஏர்டெல் நிறுவனம் வோடபோன் நிறுவனத்திற்கு ஒரு நிமிடத்திற்கு 6 பைசா வீதம் கட்டணமாக கொடுக்க வேண்டும்.
IUC யால் ஜியோவுக்கு என்ன பாதிப்பு?
இலவச அழைப்பு என்பதும் அதிக அளவில் பயனாளர்கள் பெருகிப்போனதும் தான் இப்போது ஜியோவிற்கு பிரச்னையாகிவிட்டது. இதனை ஒரு உதாரணத்தின் மூலமாக நாம் அறியலாம். ஏர்டெல், ஐடியா போன்றவற்றின் பயனாளர்கள் கிட்டத்தட்ட 25 – 30 கோடி missed call களை ஜியோ எண்ணிற்கு கொடுக்கிறார்கள். ஒருவேளை அந்த missed call அனைத்தும் ஏற்கப்பட்டு பேசப்பட்டிருந்தால் கிட்டத்தட்ட 60 – 70 கோடி நிமிடங்கள் ஜியோவிற்கு “Incoming” அழைப்பாக வந்திருக்கும். அத்தகைய சூழலில் ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்கள் ஜியோவிற்கு பணம் செலுத்தும் சூழல் வந்திருக்கும். ஆனால் இங்கு நடப்பதோ முற்றிலும் மாறானதாக இருக்கிறது. 25 – 30 கோடி missed call களை பார்த்துவிட்டு ஜியோ பயனாளர்கள் ஏர்டெல், ஐடியா போன்ற பயனாளர்களுக்கு அழைப்புகளை மேற்கொண்டு பல நிமிடங்கள் பேசுகிறார்கள். இதனால் ஜியோ நிறுவனம் IUC கட்டணம் செலுத்திட வேண்டி இருக்கிறது.
தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அழைப்புகளை வழங்கிட கிட்டத்தட்ட 13500 கோடி ரூபாயை கடந்த 3 ஆண்டுகளில் செலுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது ஜியோ நிறுவனம்.
TRAI என்ன சொல்கிறது?
அக்டோபர் 2011 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் TRAI ஒரு பிரமானப்பத்திரம் ஒன்றினை தாக்கல் செய்தது. அதில் IUC கட்டணத்தை குறைப்பதற்கான வேலைகளை துவங்கி விட்டோம். படிப்படியாக குறைத்து பின்னர் முழுமையாக நீக்கி விடுவோம் என கூறியிருந்தது. பின்னர் 2017 ஆம் ஆண்டு ஒரு திருத்தத்தின்படி IUC கட்டணம் 6 பைசாவாக குறைக்கப்பட்டது. இந்தக்கட்டணம் டிசம்பர், 2019 வரைக்கும் இருக்கும் என்பதும் 2020 முதல் IUC கட்டணம் கிடையாது எனவும் கூறியது.
ஆனால் செப்டம்பர் மாதம், IUC கட்டணம் நீக்கப்படுவதை இன்னும் சில காலம் தள்ளிவைக்கலாமா என்ற ரீதியில் நடைபெற்ற நிகழ்வில் IUC கட்டணம் நீக்கப்படுவது அதிக அழைப்புகளை (outgoing) கொண்டிருக்கிற நிறுவனங்களுக்கு தான் பயன் தரும். இது போட்டிமிகுந்த இடத்தில் சரியானதாக இருக்காது என டிராய் கருதுகிறது. ஒருவேளை இந்தக்கட்டணம் நீக்கப்பட்டால் இதர தொலைபேசி நிறுவனங்களுக்கு வருமானமே கிடைக்காமல் கூடப்போகலாம். பிறகென்ன அவை மூடப்படலாம்.
Dark Mode
TRAI இன் இந்த முடிவு ஜியோவிற்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. அதன் வெளிப்பாடாகத்தான் IUC கட்டணத்தை பயனாளர்களிடமிருந்து வசூலிக்க முடிவு செய்தது. கூடவே இன்னொரு விசயத்தையும் தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கிறது. அதாவது ஜியோ – ஜியோ அழைப்புகளுக்கு IUC கட்டணம் ஏதுமில்லை எனவும் ஆகவே பிறரையும் ஜியோ குடும்பத்திற்கு அழைத்து வாருங்கள் என கேட்டுக்கொண்டுள்ளது.
ஜியோ வாடிக்கையாளர்கள் என்ன செய்திட வேண்டும்?
இனி தனியாக IUC டாப் அப் செய்திட வேண்டும். அதில் நீங்கள் வேறு மொபைல் நிறுவனங்களுக்கு அழைப்புகளை மேற்கொண்டால் நிமிடத்திற்கு 6 பைசா வீதம் கட்டணமாக எடுத்துக்கொள்ளப்படும். இல்லையேல் உங்களால் அழைப்புகளை மேற்கொள்ள இயலாது.
ஜியோ – ஜியோ >> இலவசம்
வரும் அழைப்புகள் இலவசம்
ஜியோ – லேண்ட்லைன் அழைப்புகள் >> இலவசம்
ஜியோவுக்கு பின்னடைவா?
நிச்சயமாக ஜியோவுக்கு இது பின்னடைவு தான். இனி கூடுதலாக ரீசார்ஜ் செய்திட வேண்டும், அளவாக மட்டுமே பிற நெட்ஒர்க்கில் இருப்பவர்களிடம் பேச முடியும் என கட்டுப்பாடு வரும்போது அது வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒருவித அதிருப்தியை உண்டாக்கும்.
அனைத்தும் TRAI வசம் தான் இருக்கிறது.
Click Here! Get Updates On WhatsApp
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.