Site icon Tech Tamilan

What is G Suite? Why Google Increasing Price for G Suite? | Explained in Tamil


ஒரு பிசினெஸ் செய்வதற்கு தேவையான ஆப்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது தான் G Suite. இதற்க்கு முன்னர் இவை கூகுள் ஆப்ஸ் என அழைக்கப்பட்டன. G Suite மூலமாக உங்களது விருப்ப டொமைன் பெயரை வைத்து முடிவடையக்கூடிய ஜிமெயில் ஐ பெறலாம். அதோடு சேர்த்து 30 GB க்கான Google Drive Storage ஐயும் பெறலாம். இப்படி பல வசதிகளை உள்ளடக்கிய G Suite விலையை தற்போது கூகுள் நிறுவனம் உயர்த்தியிருக்கிறது.அதன்படி Basic Plan $1 அதிகமாகவும் Business Plan $2 அதிகமாகவும் விற்கப்படும் என அறிவித்துள்ளது.


——————————————————————————————-
Advertisement:





——————————————————————————————–

What is G Suite?

நாம் மேலே கூறியதை போலவே ஒரு பிசினஸ் செய்வதற்கு தேவையான தன்னுடைய தனித்திருந்த ஆப்களை ஒருங்கிணைத்து G Suite என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டுவந்தது கூகுள் நிறுவனம். 2018 ஆம் ஆண்டின் நிலவரப்படி கிட்டத்தட்ட 4 மில்லியன் பிசினஸ் அக்கவுண்ட்கள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

G Suite மூலமாக உங்களது சொந்த டொமைனில் மின்னஞ்சல் முகவரியை பெறலாம், உதாரணத்திற்கு sridaran @techtamilan.in .. வெறுமனே மின்னஞ்சல் முகவரியோடு நின்றுவிடாமல் online storage, shared calendars, video meetings அதன் பயன்பாடுகள் நீண்டுகொண்டே போகின்றன. அதனைப்போலவே உங்களுடைய தகவல்களை எளிமையாக அதே சமயம் பாதுகாப்பாக பகிர்ந்துகொள்வதற்க்கான வசதியினையும் G Suite வழங்குகிறது.
சிறு தொழில் துவங்குவோர் முதல் மிகப்பெரிய ஜாம்பவானாக இருக்கக்கூடிய நிறுவனங்கள் கூட G Suite ஐ பயன்படுத்துகின்றன. G Suite இன் இன்னுமொரு முக்கியமான நல்ல விசயம், நீங்கள் G Suite ஆப்களை ஆன்ட்ரோய்டு அல்லது iOS போன்ற எந்த இயங்குதளங்களில் இயங்கும் மொபைல்களில் இருந்தும் எளிமையாக பயன்படுத்தலாம்.


 

G Suite விலை எவ்வளவு? அதிகப்படுத்த காரணம் என்ன?

இந்தியாவில் தற்போதைய சூழலில் பின்வரும் விலையே இருக்கிறது. ஏப்ரல் மாதத்திற்கு பிறகு புதிய விலையேற்றம் இருக்கும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

Basic Plan

Professional office suite with 30GB storage

₹150 INR / user / month OR ₹1500 per user per year plus tax.

Business Plan

Enhanced office suite with unlimited storage and archiving

₹600 INR / user / month or ₹7200 per user per year plus tax.

Enterprise Plan

Premium office suite with advanced controls and capabilities

₹1650 INR / user / month or ₹19800 per user per year plus tax.

இந்த மூன்று பிளான்களுக்கும் 14 நாட்கள் இலவச Trail ஐ வழங்குகிறது கூகுள், ஆகவே நீங்கள் வாங்குவதற்கு முன்னதாக பயன்படுத்தி பார்த்துக்கொள்ளலாம்.


தற்போது இந்த விலையில் மாற்றம் செய்யப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி Basic பிளான் $1 அதிகமாகவும் Business பிளான் $2 அதிகமாகவும் விற்கப்படும் என அறிவித்துள்ளது. இதன்படி புதிய விலையேற்றம் ஏப்ரல் 02 முதல் அமலுக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைவான விலையேற்றம் நிறுவனங்களுக்கு பெரிய இழப்பில்லை என கூறப்பட்டாலும் இதற்கு முன்னர் கூகுள் இப்படி கறாராக இருந்ததில்லை என கூறப்படுகிறது. ஏன் இந்த விலையேற்றம் என கூகுள் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, தற்போது G Suite இல் வீடியோ கான்பெரன்ஸ் உட்பட பல வசதிகள் இருக்கின்றன என சொல்லப்பட்டுள்ளது. இந்தியா போன்ற பிற நாடுகளில் எவ்வளவு விலையேற்றம் இருக்குமென்பது விரைவில் தெரியவரும். கிட்டத்தட்ட அதே அளவிற்கான விலையேற்றம் தான் இருக்கும்.


 

இலவசமாகவே கிடைக்கும் போது ஏன் பணம் செலுத்திட வேண்டும்?

கூகுள் நிறுவனம் அதன் பயனாளர்களுக்கு சில விசயங்களை இலவசமாக கொடுக்கும். அதன்படி 15GB சேமிப்பு வசதியுடன் பெரும்பாலான Google App களை எவர் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். பெரும்பாலானவர்கள் அப்படித்தான் பயன்படுத்துகிறார்கள். நாமும் கூட Google App களை இலவசமாக பயன்படுத்துகிறோம். பின்னர் எதற்க்காக பணம் செலுத்தி G Suite ஐ பெற வேண்டும் என கேட்கிறீர்களா?
நீங்கள் ஒரு தனி நபராக பயன்படுத்துகின்ற பட்சத்தில் இலவசமாக கிடைக்கின்றவற்றையே பயன்படுத்திக்கொள்ளாலாம். ஆனால் ஒரு நிறுவனம் என்று வருகிறபோது மற்றவர்களுடன் ஒருங்கிணைத்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை G Suite வழங்குகிறது.

> உங்களது நிறுவன டொமைனில் முடியக்கூடிய மின்னஞ்சல் முகவரியை உங்களால் பெற முடியும்

> சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை தருகிறது, இதன் மூலமாக பாதுகாப்பாக தரவுகளை வைத்திருக்க இயலும்

> தேவைப்படும் நேரங்களில் பணம் செலுத்தி ஸ்டோரேஜ் ஐ அதிகப்படுத்திக்கொள்ள முடியும்

> மேலும் auditing and business eDiscovery போன்ற கம்பெனிகளுக்கே உரித்தான சில வேலைகளை செய்ய முடியும்

> சிறந்த சப்போர்ட் வசதியும் G Suite வழங்குகிறது


——————————————————————————————-
Advertisement:





——————————————————————————————–

உலகம் புதுப்புது தொழில்நுட்பங்களை கண்டுகொண்டு இருக்கிறது. அப்படி, அதிகமாக பேசப்படும் ஒரு தொழில்நுட்பம் தான் AI அதாவது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், செயற்கை நுண்ணறிவு என தமிழில் மொழி ...
அறிவியல் துறையில் தற்போது முன்னனி கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இருப்பது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தான் (Artificial Intelligence) . ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் [Artificial Intelligence] குறித்து நீங்கள் அறிந்து ...
இந்தியாவில் செல்வ செழிப்பின் அடையாளமாக தங்கம் இருக்கிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அவர்களால் இயன்ற அளவில் தங்கத்தை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். தற்போது 190,000 டன் அளவிலான ...
இந்தியாவில் ஸ்டார்ட்அப் மிகவும் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. வெற்றிபெற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வரிசையில் SolarSquare என்கிற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் வெற்றி குறித்து பார்க்க இருக்கிறோம். உள்ளூரில் ...
நமக்கான வேலைகளை செய்துகொள்வதற்கு சில நேரங்களில் கூடுதலாக லேப்டாப் தேவைப்படும்போது, refurbished laptops ஐ வாங்கலாமே என எண்ணுவோம். இதற்கு மிக முக்கியக்காரணம், அதன் விலை தான் ...
நீங்கள் உங்களுடைய பிசினஸை துவங்கிய உடன் அதனை பதிவு செய்வது மிகவும் அவசியமானது. வங்கியில் லோன் வாங்குவதற்கும் மற்ற பிற விசயங்களுக்கும் நிறுவனத்தை பதிவு செய்து வைத்திருப்பது ...
உங்களுக்கான ஒரு பிசினஸ் ஐ துவங்க நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள் என தெரிகிறது. உங்களைப்போலவே பலருக்கும் இந்த ஆர்வம் நிச்சயமாக இருக்கும். ஆனால், சிலருக்கு முதலீடுகள் செய்வதற்கான ...
இந்தியாவில் இப்போது பேஷன் மற்றும் அழகியல் துறை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இளைஞர்களும் தற்போது பேஷன் மற்றும் அழகியல் துறையில் வேலை செய்திட ஆர்வத்தோடு ...
நமது இந்தியாவில் வெளிநாட்டு உணவுகள் மற்றும் கடைகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அதன் வெளிப்பாட்டை கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் அதிகமாக காண முடிகிறது. இதனால் தான் ...
ஒரு நல்ல நாள் என்பது பலருக்கு நல்ல தேநீர் (tea) உடன் தான் துவங்குகிறது. ஆகவே தான் நாம் வீட்டை விட்டு வெளியே வந்தாலே ஏகப்பட்ட டீ ...

TECH TAMILAN

Exit mobile version