Site icon Tech Tamilan

What is an Internet Bot? Explained in Tamil |


பொதுவாக Bot (பாட்) என அழைக்கப்படுகின்ற Internet Bot ஆனது, ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம். மிகவும் எளிய , அதே சமயம் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய வேலையை செய்வதற்கு மனிதர்களால் உருவாக்கப்பட்ட சாப்ட்வேர் என்றும் கூறலாம். மனிதர்கள் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான வேலையை செய்வதென்பது காலவிரயம் ஏற்படக்கூடியது, பல சமயங்களில் (24/7) செய்யவும் முடியாது. அப்படிப்பட்ட சூழலை தவிர்க்க உருவாக்கப்பட்டதுதான் Bot (பாட்).


Bot (பாட்) எனும் வார்த்தையானது ரோபோட் (robot) என்பதில் இருந்து வந்தது. இதனை தவிர  ஸ்பைடர்ஸ் (spiders) or கிராவலர்ஸ் (crawlers) எனவும் அழைக்கப்படுகிறது.


——————————————————————————————-
Advertisement:





——————————————————————————————–

Are Internet Bots good or Bad?

 

இன்டர்நெட் பாட் (Internet Bot) நன்மையானதா அல்லது தீமையானதா என கேட்டால், வழக்கம் போல அது பயன்படுத்துபவர்களின் கைகளிலே தான் இருக்கிறது என்றே சொல்ல முடியும்.

 

பின்வரும் பகுதியில் இதனை பார்க்கலாம்.


Search Engine Bots/Crawlers

 

கூகுள் , யாஹூ போன்ற சர்ச் எஞ்சின்கள் சரியாக செயல்படுவதில் பாட் களின் பங்கு அதிகமிருக்கிறது . குறிப்பிட்ட இடைவெளியில் இணையத்தில் புதிதாக அப்லோட் செய்யப்பட்ட இணைய பக்கங்களை ஸ்கேன் செய்து அதிலிருந்து தரவுகளை சேமிப்பது , முக்கிய வார்த்தைகளை பிரித்தெடுப்பது போன்ற வேலையென்பது கடினமானது , அதே சமயம் மீண்டும் மீண்டும் செய்யக்கூடியது .

இதனை செய்ய சர்ச் என்ஜின் நிறுவனங்கள் பாட் அல்லது கிராவலர் என அழைக்கப்படும் தானியங்கி புரோகிராம்களை வடிவமைத்துள்ளன . பாட் களின் மிக முக்கிய பயன்பாடுகளில் இதுவும் ஒன்று.


ChatBot 


நீங்கள் ஒரு சிறிய நிறுவனத்தை நடத்திக்கொண்டு வருகிறீர்கள் . உங்களால் அதிக பணம் செலவழித்து 24 மணிநேரமும் செயல்படக்கூடிய வாடிக்கையாளர் சேவை மையத்தை அமைப்பதென்பது கடினமான ஒன்று .


அப்படிப்பட்டவர்களுக்கு மிகவும் உதவிகரமானதாக இருப்பது ChatBot . இந்த சாட் புரோகிராம் வாடிக்கையாளர் கேட்கும் கேள்விகளுக்கு ஏற்கனவே செய்யப்பட்டுள்ள புரோகிராம் படி பதிலை வழங்கும் . இதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன .

குறிப்பாக மருத்துவத்துறையில் இதனை பயன்படுத்த துவங்கி இருக்கிறார்கள் .

ஒரு மருத்துவர் கேட்கும் கேள்விகளை இந்த புரோகிராம்  கேட்டு நீங்கள் பதிலளிப்பதற்கு ஏற்றவாறு மருந்தினை பரிந்துரை செய்யும் .

நோயாளி : எனக்கு காய்ச்சல் அடிக்கிறது

பாட் : எத்தனை நாட்களாக அடிக்கிறது

நோயாளி : மூன்று நாட்கள்

பாட் : ஏற்கனவே மருந்து சாப்பிடீர்களா

நோயாளி : இல்லை

பாட் : இந்த மாத்திரைகளை உட்கொள்ளுங்கள்.

ஒருவேளை நோயாளி சொல்லும் நோய்க்கான மருந்து பற்றிய புரோகிராம் செய்யப்படவில்லையெனில் எங்களது மருத்துவர் உங்களை தொடர்புகொள்வார் என முடித்துவிடும். அடுத்தநாள் மருத்துவர் அதனை தெரிந்துகொள்ளலாம்.

நீங்கள் உங்களது மொபைல் பேலன்ஸையோ அல்லது வங்கி பேலன்சையோ அறிவதற்கு ஒரு Code ஐ அனுப்பியவுடன் அதற்கான பதிலை யாரோ ஒரு மனிதர் அனுப்புவது இல்லை . ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட புரோகிராம் தான் நீங்கள் கேட்கும் கேள்விக்கு ஏற்றவாறு பதிலளிக்கும் .

நாம் ஹாலிவுட் திரைப்படங்களில் பார்க்கும் போது “நீங்க இந்த வேகத்துல போன விமானம் வெடிச்சுரும் ” என  தானியங்கி கணிணி ஒன்று நடிகர்களுக்கு உதவுமே அது மிகச்சிறந்த ,மேம்படுத்தப்பட்ட பாட் எனலாம் .


Key Advantages of Internet Bots

 

> 24 மணி நேரமும் வேலை செய்யும்

> திரும்ப திரும்ப ஒரே வேலையை செய்யும்

> மிகவும் சிக்கலான விசயங்களை தொடர்ச்சியாக சரியாக செய்யும்

> மனித வேலையை குறைக்கும்


Disadvantages of Internet Bots 

 

> மருத்துவத்துறையில் ChatBot மூலமாக மருந்துகளை பரிந்துரைக்கும் போது பல சமயங்களில் தவறானதாக அமைய வாய்ப்புண்டு. இதனை போன்றே சில விசயங்களில் நாம் எதிர்பார்த்ததற்கு மாற்றான விசயங்கள் நடக்க வாய்ப்பு உண்டு.

 

> என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், நமக்காக இயந்திரம் பேசும்போது ஏதோ ஒரு வெற்றிடம் நிலவியே தீரும். இந்த கேள்விக்கு இந்த பதில்தான் என்ற ரீதியிலேயே Bot இயங்கும். ஆகவே வாடிக்கையாளர்கள் சிறு மாற்றங்களை செய்திடும் போது அதற்கேற்றவாறு Bot இயங்காது.

 

> சில ஹேக்கர்கள் Bot மூலமாக ஹேக் செய்வது, ஆப்களை இன்ஸ்டால் செய்வது , அடுத்தவர்களின் கணினியில் இருந்து தகவலை பெறுவது போன்ற பல செயல்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்.

 

——————————————————————————————-
Advertisement:





——————————————————————————————–

Bot போன்றவற்றை தொழில் செய்பவர்கள் பயன்படுத்தும்போது சாதாரண, மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய, தவறேதும் நடந்துவிடாத வேலைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். அப்படி பயன்படுத்தும்போது bot சரியாக செயல்படுகிறதா என்பதனை குறிப்பிட்ட கால இடைவெளியில் சரிபார்த்துக்கொள்வது சிறந்தது.


உலகம் புதுப்புது தொழில்நுட்பங்களை கண்டுகொண்டு இருக்கிறது. அப்படி, அதிகமாக பேசப்படும் ஒரு தொழில்நுட்பம் தான் AI அதாவது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், செயற்கை நுண்ணறிவு என தமிழில் மொழி ...
அறிவியல் துறையில் தற்போது முன்னனி கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இருப்பது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தான் (Artificial Intelligence) . ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் [Artificial Intelligence] குறித்து நீங்கள் அறிந்து ...
இந்தியாவில் செல்வ செழிப்பின் அடையாளமாக தங்கம் இருக்கிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அவர்களால் இயன்ற அளவில் தங்கத்தை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். தற்போது 190,000 டன் அளவிலான ...
இந்தியாவில் ஸ்டார்ட்அப் மிகவும் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. வெற்றிபெற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வரிசையில் SolarSquare என்கிற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் வெற்றி குறித்து பார்க்க இருக்கிறோம். உள்ளூரில் ...
நமக்கான வேலைகளை செய்துகொள்வதற்கு சில நேரங்களில் கூடுதலாக லேப்டாப் தேவைப்படும்போது, refurbished laptops ஐ வாங்கலாமே என எண்ணுவோம். இதற்கு மிக முக்கியக்காரணம், அதன் விலை தான் ...
நீங்கள் உங்களுடைய பிசினஸை துவங்கிய உடன் அதனை பதிவு செய்வது மிகவும் அவசியமானது. வங்கியில் லோன் வாங்குவதற்கும் மற்ற பிற விசயங்களுக்கும் நிறுவனத்தை பதிவு செய்து வைத்திருப்பது ...
உங்களுக்கான ஒரு பிசினஸ் ஐ துவங்க நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள் என தெரிகிறது. உங்களைப்போலவே பலருக்கும் இந்த ஆர்வம் நிச்சயமாக இருக்கும். ஆனால், சிலருக்கு முதலீடுகள் செய்வதற்கான ...
இந்தியாவில் இப்போது பேஷன் மற்றும் அழகியல் துறை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இளைஞர்களும் தற்போது பேஷன் மற்றும் அழகியல் துறையில் வேலை செய்திட ஆர்வத்தோடு ...
நமது இந்தியாவில் வெளிநாட்டு உணவுகள் மற்றும் கடைகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அதன் வெளிப்பாட்டை கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் அதிகமாக காண முடிகிறது. இதனால் தான் ...
ஒரு நல்ல நாள் என்பது பலருக்கு நல்ல தேநீர் (tea) உடன் தான் துவங்குகிறது. ஆகவே தான் நாம் வீட்டை விட்டு வெளியே வந்தாலே ஏகப்பட்ட டீ ...

TECH TAMILAN

Exit mobile version