Black Hole In Tamil
அறிவியலாளர்கள் இந்த பிரபஞ்சம் உருவானபோதே சிறிய சிறிய கருந்துளைகள் உருவானதாக தெரிவிக்கிறார்கள். மிகப்பெரிய கிரகங்கள் அல்லது ஸ்டார்கள் அழியும் போது அல்லது ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் போது மிகப்பெரிய கருந்துளைகள் [Stellar black holes] உருவாகின்றன.
கருந்துளை என்றால் என்ன? What Is a Black Hole?
கருந்துளை என்பது பிரபஞ்சத்தில் இருக்கும் ஒரு இடம். அந்த இடத்தில் நிலவும் ஈர்ப்பு விசை என்பது ஒளியைக்கூட வெளியே செல்லவிடாமல் ஈர்க்கும் அளவுக்கு அதிகபட்சமாக இருக்கும். ஒரு பொருளானது [matter] நொருங்கி சிறிய இடத்திற்குள் அடைபடும் போது ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கும். இந்த சூழ்நிலையானது ஒரு நட்சத்திரம் அழியும் போது உருவாகும். கருந்துளை அல்லது பிளாக்ஹோல்ஸ் ஐ நம்மால் பார்க்க இயலாது. காரணம், ஒளியைக்கூட வெளியேற விடாமல் ஈர்த்துக்கொள்ளும் அளவுக்கு சக்தி வாய்ந்த ஈர்ப்பு விசையை [Gravity] அது கொண்டுள்ளது.
விண்வெளியில் இருக்கும் தொலைநோக்கி மற்றும் சில கருவிகளை பயன்படுத்தி பிரபஞ்சத்தில் எங்கே கருந்துளை இருக்கிறது என்பதை அறிய முடியும். வேறு இடங்களில் இருக்கும் நட்சத்திரம் ஒரு மாதிரியாகவும் கருந்துளைக்கு அருகே இருக்கும் நட்சத்திரம் ஒரு மாதிரியாகவும் நடந்துகொள்வதை வைத்து கருந்துளை இருப்பதை அறிந்துகொள்ள முடியும்.
கருந்துளை எப்படி உருவாகிறது?
அறிவியலாளர்கள் இந்த பிரபஞ்சம் உருவானபோதே சிறிய சிறிய கருந்துளைகள் உருவானதாக தெரிவிக்கிறார்கள். மிகப்பெரிய கிரகங்கள் அல்லது ஸ்டார்கள் அழியும் போது அல்லது ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் போது மிகப்பெரிய கருந்துளைகள் [Stellar black holes] உருவாகின்றன.
கருந்துளைகள் எவ்வளவு பெரியதாக இருக்கும்?
கருந்துளைகள் பல்வேறு அளவுகளில் இருக்கின்றன. அவை அணுவின் அளவில் துவங்கி மிகப்பெரிய அளவிலும் இருக்கின்றன. அணுவின் அளவில் இருக்கும் கருந்துளையானது மிகப்பெரிய மலையின் எடை அளவில் இருக்கும். அதெப்படி என கேட்கலாம், ஒரு பெரிய பீரோவை அடித்து நொறுக்கி அதிகபட்ச அளவில் அழுத்தினால் எப்படி சிறியதாக மாறுமோ அப்படிதான்.
கருந்துளைகள் கறுப்பு நிறத்தில் இருக்குமென்றால் விஞ்ஞானிகள் எப்படி அதனை கண்டறிகிறார்கள்?
ஒரு பொருளின் மீது பட்டு திரும்புகிற ஒளியைக்கொண்டே நாம் அந்தப்பொருள் இருப்பதை அறிகிறோம். ஆனால் கருந்துளைகள் ஒளியைக்கூட இழுத்துக்கொள்ளும் அளவுக்கு அதிக ஈர்ப்பு விசை கொண்டிருக்கின்றன. ஆகவே கருந்துளைகளை நேரடியாக கண்டுணர முடியாது. ஆனால் அதிகபட்ச ஈர்ப்பு விசை கொண்ட கருந்துளை அருகே இருக்கும் நட்சத்திரங்கள் மற்றும் வாயுக்களின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும் அதனால் என்ன மாதிரியான விளைவுகள் நடக்கும் என்பதையும் விஞ்ஞானிகள் அறிவார்கள். அப்படிதான் கருந்துளைகளை அறிகிறார்கள்.
கருந்துளையும் நட்சத்திரமும் அருகருகே இருக்கும் போது அதிக சக்தி வாய்ந்த வெளிச்சம் உண்டாகும். இந்த வெளிச்சத்தை நம் கண்களால் காண முடியாது. விஞ்ஞானிகள் சிறந்த தொலைநோக்கிகள் மற்றும் கருவிகளைக்கொண்டு இந்த அதிக சக்தி வாய்ந்த வெளிச்சத்தை காண முடியும்.
கருந்துளையால் பூமிக்கு ஆபத்து இருக்கிறதா?
கருந்துளை ஒரு அரக்கன் அல்ல. அது நட்சத்திரங்களை விழுங்குவதற்காக பிரபஞ்சத்தில் சுற்றித்திரிவது இல்லை. இப்போதைக்கு கருந்துளைக்குள் விழுந்து அழியும் ஆபத்து பூமிக்கு இல்லை. நம்முடைய சூரிய மண்டலத்துக்கு அருகே அப்படியொரு கருந்துளை இல்லை. சூரியன் எரிந்து அதனால் கருந்துளை உருவாக வாய்ப்புள்ளதா என்றால், கருந்துளையை உருவாக்கும் அளவுக்கு சூரியன் மிகப்பெரியதாய் இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.