Site icon Tech Tamilan

What is 3D Printing? | Explained in Tamil


ஹாலிவுட் திரைப்படங்களில், விண்வெளிக்கு செல்லும் விமானங்களில் பயணிப்பவர்களில் ஒருவர் யாருக்கும் தெரியாமல் ஒரு மெஷினில் துப்பாக்கி (Gun) ஒன்றினை செலெக்ட் செய்வார். உடனே அந்த மெஷின் துப்பாக்கி ஒன்றினை பிரிண்ட் செய்யும். இதனை நாம் காணும் போது இது சினிமாவில் உள்ள ஒரு காட்சி, அனிமேஷன் செய்து இப்படியெல்லாம் காட்டியிருப்பார்கள் என எண்ணியிருப்போம். அந்த தொழில்நுட்பத்திற்கு பெயர் 3D Printing என்பார்கள்.

 

3டி முறையில் பிரிண்ட் செய்யப்பட்ட துப்பாக்கி

 

ஆனால் 3D Printing என்பது உண்மையான ஒரு தொழில்நுட்பம். செயல்முறையில் 3D Printing தொழில்நுட்பத்தின் மூலமாக பொருள்கள் தயாரிக்கவும் படுகின்றன. ஆகையினால், இதனை அனிமேஷன் என நினைத்துக்கொண்டு இருந்தால் அதனை விட்டுவிடுங்கள்.

 

இந்த பதிவில் 3D Printing தொழில்நுட்பம் குறித்த பல தகவல்களை பார்க்க இருக்கிறோம்.


——————————————————————————————-
Advertisement:





——————————————————————————————–

What is 3D Printing? | 3டி பிரின்டிங் என்றால் என்ன?

டிஜிட்டல் முறையில் கணினியில் சேமிக்கப்பட்டு இருக்கும் தகவலின் அடிப்படையில் முப்பரிமாண திடப்பொருளை உருவாக்குகின்ற தொழில்நுட்பம் தான் 3D Printing.

 

3D Printing தொழில்நுட்பத்தில் ஒரு பொருளை உருவாக்கிட வேண்டும் எனில் அதற்க்கான பொருள்களை அந்த மெஷினோடு இணைந்திருக்க வேண்டும், அந்த பொருளின் டிஜிட்டல் தகவலை கணினியில் சேமித்து வைத்திருக்க வேண்டும். அனைத்தும் தயாரான பிறகு மெசினை ஆன் செய்தால் Horizontal முறையில் ஒவ்வொரு படிநிலையாக (Layer by Layer) பொருள் உருவாகும்.

 

மிக முக்கியமாக இந்த 3D Printing தொழில்நுட்பத்தில் எதனையும் வெட்டுவதோ இணைப்பதோ தேவைப்படாது. மிகவும் கடினமான வடிவங்களை கொண்ட பொருள்களை இந்த தொழில்நுட்பத்தில் எளிமையாக உருவாக்கிட இயலும்.


How Does 3D Printing Work?

3D Printing தொழில்நுட்பத்திற்கு மூன்று முக்கிய விசயங்கள் தேவைப்படுகின்றன.

> 3D Scanners

> 3D Modeling Software

> 3D Printer


3D Scanners

பொருளை 3டி முறையில் ஸ்கேன் செய்கிறார்

ஒரு பொருளை 3D Printing தொழில்நுட்பத்தில் உருவாக்கிட வேண்டுமெனில் அந்தப்பொருளின் டிசைனை CAD (Computer Aided Design) போன்றதொரு மென்பொருளில் உருவாக்கிட வேண்டும். அப்படி இல்லாமல், 3D Scanners கருவிகளை பயன்படுத்தியும் ஒரு பொருளினுடைய மாடலை பெறவும் இயலும்.


3D Modeling Software

3டி மாடலிங் மென்பொருள்

ஒரு திடப்பொருளை 3D Printing முறையில் பிரிண்ட் செய்வதற்கு அந்த திடப்பொருளின் வடிவத்தை டிஜிட்டல் முறைப்படி பெற வேண்டும். அதற்க்கு தேவைப்படுகிற மென்பொருள்களை தான் 3D Modeling Software என்கிறோம். தற்போது இந்த மென்பொருள்கள் விற்பனைக்கு வந்துள்ளன. சில தொழிற்சாலைகளில் ஒரு ஆண்டுக்கு 1000 டாலர் தொடங்கி இந்த மென்பொருள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த மென்பொருள் Open Source ஆகவும் கிடைக்கிறது. படித்து தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் படித்து தெரிந்துகொள்ளலாம்.

தற்போது விண்வெளி சாதனங்கள் தயாரிப்பு , பர்னிச்சர் பொருள்கள் தயாரிப்பு, வீடு கட்டுதல் வரைக்கும் கூட 3D Printing வந்திருக்கிறது.

உங்களுக்கு இந்த தொழில்நுட்பம் குறித்து படித்து தெரிந்துகொள்ள விருப்பம் இருந்தால் https://www.tinkercad.com/ இல் படிக்கலாம்.


3D Printer

3டி பிரிண்டர்

உங்களிடம் உருவாக்க வேண்டிய பொருளின் 3டி மாடல் இருப்பின் நீங்கள்பொருளினை உருவாக்கிட துவங்கலாம். slicing software மூலமாக 3டி மாடல் ஆனது நூறு அல்லது ஆயிரக்கணக்கான layer களாக பிரிக்கப்படும். அப்படி பிரித்த பின்னர் 3D Printer இல் அதனை இணைத்து விடலாம்.

நீங்கள் வைத்திருக்கும் 3D Printer ஐ பொருத்து USB மூலமாகவோ WIFI மூலமாகவோ தகவல்களை 3D Printer க்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பப்படும் தகவலை வைத்துக்கொண்டு 3D Printer ஆனது layer layer ஆக பொருளை பிரிண்ட் செய்து உருவாக்கும்.


Applications of 3D printing

தற்போது 3D printing மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. உற்பத்தி , மருத்துவம், ஆர்ட் மற்றும் வடிவமைப்பு போன்ற பல துறைகளில் 3D printing தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகிறது.

Manufacturing applications

அதிக அளவிலான பொருள்களை தரமாகவும் துல்லியமாகவும் வடிவமைக்க 3D printing தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் குறைந்த செலவில் அதிக அளவுள்ள பொருள்களை வடிமைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 3D printing தொழில்நுட்பம் பெரும்பாலான தொழிற்சாலைகளில் கொண்டுவரப்பட்டால் மனித ஆற்றல் குறைவதோடு பொருள்களின் விலையும் குறைய வாய்ப்பிருக்கிறது.


Architecture

மிகவும் சிக்கலான வடிவமைப்பை வாடிக்கையார்களுக்கு காட்டுவது என்பது சிக்கலானது. ஆனால் 3D printing தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எவ்வளவு பெரிய சிக்கலான வடிவமைப்பையும் உருவாக்கிட முடியும்.
Architecture துறையில் சிக்கலான வடிவமைப்பை எளிமையாக உருவாக்கிட, மற்றவர்களுக்கு புரிகின்ற விதத்தில் உருவாக்கிட 3D printing தொழில்நுட்பம் பேருதவியாக இருக்கும்.


Medical Application

மருத்துவத்துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கொண்டுவந்துள்ளது 3D Printing. ஒரு நோயாளிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் மிக விரைவாக ஆப்ரேசன் செய்திடவும், எழும்பிற்கான மாற்று பொருளினை உடனடியாக உருவாக்கி அதனை பொருத்திடவும் 3D Printing வழிவகை செய்கிறது.

இதோடு மட்டுமே 3D Printing தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் முடிந்துவிடவில்லை. நாளுக்கு நாள் அதன் எல்லை விரிவடைந்துகொண்டே போகிறது. ஒருகாலத்தில் நமக்கு வேண்டிய உபகரணங்களை வீட்டிலேயே தயாரித்துக்கொள்ளும் வாய்ப்பு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

தொடர்ந்து இது போன்ற தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ள Subscribe செய்திடுங்கள்


——————————————————————————————-
Advertisement:





——————————————————————————————–
இதையும் தவறாம படிங்க

இன்றைய ஸ்மார்ட்போன் உலகில் WhatsApp சிறந்த தகவல் பற்றிமாற்றத்திற்கான ஓர் ஆப்பாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலானவர்கள் WhatsApp ஐ பயன்படுத்தினாலும் அதில் இருக்கக்கூடிய சிறந்த Features ஐ பலர் ...
உலகம் புதுப்புது தொழில்நுட்பங்களை கண்டுகொண்டு இருக்கிறது. அப்படி, அதிகமாக பேசப்படும் ஒரு தொழில்நுட்பம் தான் AI அதாவது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், செயற்கை நுண்ணறிவு என தமிழில் மொழி ...
அறிவியல் துறையில் தற்போது முன்னனி கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இருப்பது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தான் (Artificial Intelligence) . ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் [Artificial Intelligence] குறித்து நீங்கள் அறிந்து ...
இந்தியாவில் செல்வ செழிப்பின் அடையாளமாக தங்கம் இருக்கிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அவர்களால் இயன்ற அளவில் தங்கத்தை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். தற்போது 190,000 டன் அளவிலான ...
இந்தியாவில் ஸ்டார்ட்அப் மிகவும் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. வெற்றிபெற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வரிசையில் SolarSquare என்கிற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் வெற்றி குறித்து பார்க்க இருக்கிறோம். உள்ளூரில் ...
நமக்கான வேலைகளை செய்துகொள்வதற்கு சில நேரங்களில் கூடுதலாக லேப்டாப் தேவைப்படும்போது, refurbished laptops ஐ வாங்கலாமே என எண்ணுவோம். இதற்கு மிக முக்கியக்காரணம், அதன் விலை தான் ...
நீங்கள் உங்களுடைய பிசினஸை துவங்கிய உடன் அதனை பதிவு செய்வது மிகவும் அவசியமானது. வங்கியில் லோன் வாங்குவதற்கும் மற்ற பிற விசயங்களுக்கும் நிறுவனத்தை பதிவு செய்து வைத்திருப்பது ...
உங்களுக்கான ஒரு பிசினஸ் ஐ துவங்க நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள் என தெரிகிறது. உங்களைப்போலவே பலருக்கும் இந்த ஆர்வம் நிச்சயமாக இருக்கும். ஆனால், சிலருக்கு முதலீடுகள் செய்வதற்கான ...
இந்தியாவில் இப்போது பேஷன் மற்றும் அழகியல் துறை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இளைஞர்களும் தற்போது பேஷன் மற்றும் அழகியல் துறையில் வேலை செய்திட ஆர்வத்தோடு ...
நமது இந்தியாவில் வெளிநாட்டு உணவுகள் மற்றும் கடைகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அதன் வெளிப்பாட்டை கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் அதிகமாக காண முடிகிறது. இதனால் தான் ...

TECH TAMILAN

Exit mobile version