- [easy-notify id=297]
- இனி இன்ஸ்டாகிராம் ஆப்பிலும் வாய்ஸ் சாட் செய்யலாம்
- வீடியோ சாட் வசதிக்கு அடுத்தபடியாக வாய்ஸ் சாட் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது
வாட்ஸ்ஆப் (WhatsApp) , மெசஞ்சர் (Messenger) உள்ளிட்ட சாட் ஆப்களில் வாய்ஸ் சாட் வசதி இருந்தது . தற்போது இன்ஸ்டாகிராம் ஆப்பிலும் வாய்ஸ் சாட் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது .
கடந்த ஆறுமாதங்களுக்கு முன்னதாக வீடியோ சாட் வசதி கொண்டுவரப்பட்ட சூழலில் தற்போது வாய்ஸ் சாட் வசதி கொண்டுவரப்பட்டு இருப்பதற்கு முக்கியகாரணம் மற்ற ஆப்களான whatsapp , facebook messanger ஆகியவற்றுடன் போட்டிபோடுவதற்காகவே என கருதப்படுகின்றது . பெரும்பாலனவர்களால் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தப்பட்டுவரும் சூழலில் இந்த அப்டேட் வரவேற்பினை பெற்றுள்ளது .
இந்த வசதியினை பெற முதலில் இன்ஸ்டாகிராம் ஆப்பினை அப்டேட் செய்திடுங்கள் .
எப்போதும் போலவே message பட்டனை அழுத்தியவுடன் கீழ்ப்புறத்தில் மைக் லோகோ இருப்பதை காணலாம் .
அதனை அழுத்திப்பிடித்து அதிகபட்சமாக ஒரு நிமிடம் வரை வாய்ஸ் மெசேஜ் ஐ ரெக்கார்டு செய்து அனுப்பிடலாம் .
மைக் லோகோவை அழுத்தியவுடன் மேற்புறமாக தோன்றக்கூடிய லாக் பட்டனை ட்ராக் செய்து பட்டனை அழுத்திடாமலேயே ரெகார்ட் செய்ய முடியும்.
ரெக்கார்டு செய்த வாய்ஸ் ரெக்கார்ட் அனுப்பதேவையில்லை என கருதினால் இடதுபக்கமாக இருக்கின்ற trash பாக்சில் இழுத்துவிட்டு டெலீட் செய்துகொள்ளலாம் .
TECH TAMILAN