Features of Android Q OS
ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் பெண் ரோபோ “வ்யோம் மித்ரா” விண்வெளிக்கு அனுப்பப்பட இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவிற்கு மனிதனை அனுப்பும் திட்டத்தின் ஒருபகுதியாக இது இருக்கும்.
ஜனவரி 22,2020 அன்று நடைபெற்ற ““Human Spaceflight and Exploration – Present Challenges and Future Trends” எனும் கலந்தாய்வில் இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீரரை இஸ்ரோ அறிமுகம் செய்து வைத்தது. பேசும் திறன் மற்றும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் என பல்வேறு திறன்களுடன் வடிவமைத்துள்ள இந்த ரோபோ கோட் சூட்டுடன் ஒரு இருக்கையில் அமர்ந்து இருந்தது. அதன் பெயருடன் இஸ்ரோ அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. “வ்யோம் மித்ரா” என்பதற்கு சம்ஸ்கிருத மொழியில் “விண்வெளி நண்பன்” என பொருள்.
2022 இல் நிலவிற்கு மனிதர்களை அனுப்பப்போகிறோம் என இஸ்ரோ கூறி இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக பல்வேறு சோதனைகளையும் தொடர்ச்சியாக நடத்திக்கொண்டு இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர்களுக்கான பயிற்சிகளும் கூட துவங்கிவிட்டது. மனிதர்களை நிலவிற்கு அனுப்புவதற்கு முன்னர் சோதனை முயற்சியாக ஆள் இல்லாமல் இரண்டு சோதனை பயணங்களை மேற்கொள்ள இஸ்ரோ தயாராகி வருகிறது. அப்படி ஆள் இல்லாமல் செல்லும் விண்கலனில் இந்த “வ்யோம் மித்ரா” அனுப்பப்படும். மிகச்சிறப்பான தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள “வ்யோம் மித்ரா” சில பணிகளை செய்யும் திறனுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் பயணத்தின் போது மிகச்சிறப்பாக செயல்பட்டு தரவுகளை அனுப்பும் எனகூறப்பட்டுள்ளது .
Humanoid for Gaganyaan unveiled. This is the prototype humanoid which will go as trial before #gaganyaan goes with astronauts. This humanoid speaks too and is named Vyom Mitra . pic.twitter.com/TKX6pbLyrb
— Prasar Bharati News Services (@PBNS_India) January 22, 2020
இதில் கவனிக்கவேண்டிய ஒரு விசயமும் இருக்கிறது. இந்த மனித உருவிலான ரோபோவிற்கு பெண் உருவமும் பெண் பெயரும் வைக்கப்பட்டுள்ளது பெண்களுக்கு சிறப்பு சேர்ப்பதாக இருக்கும்.
இஸ்ரோவின் தகவல்படி இந்த ரோபோவானது திருவனந்தபுரத்தில் இருக்கும் IISU [ISRO Inertial Systems Unit] வில் ஓராண்டு காலத்தில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ தலைவர் சிவன் இந்த ரோபோவை அறிமுகப்படுத்தினார் . அப்போது இந்த மனித உருவிலான ரோபோ தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டது. அப்போது நான் முதல் மனித உருகொண்ட ரோபோ. என்னால் விண்வெளி ஆராய்ச்சியாளர்களை அடையாளம் கண்டு, அவர்களுடன் உரையாடவும், கேள்விகளுக்கு பதிலளிக்கவும் முடியும். விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் செய்யும் பணிகளான ஸ்விச் பேனல் ஆபரேசன், எச்சரிக்கும் பணிகள் மற்றும் விண்வெளி வீரர்களுடன் சக பயணியாக பயணித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும் என்று கூறி அசத்தியது.
Click Here! Get Updates On WhatsApp
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.