The Personal Data Protection Bill, 2018 எனும் விதிமுறைகள் அடங்கிய மசோதா நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் இருந்த குழுவினால் உருவாக்கப்பட்டது. இதில் தனி நபர்களின் தகவல்களை பெறுவது சேமிப்பது மற்றும் அதனை பயன்படுத்துவது குறித்த வழிமுறைகளும் , அதனை மீறுவோருக்கு விதிக்கவேண்டிய தண்டனை குறித்த விவரங்களும் இருக்கின்றன. இந்தியாவில் இருந்து பெறப்படும் தகவல்கள் அனைத்தும் இந்தியாவில் தான் சேமித்து வைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் இதில் இருக்கின்றன. வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளுக்கு பெரும் தடையாக இருப்பதும் இதுதான்.
ஏற்கனவே தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த மசோதா விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என அறிவித்து இருந்தார். அதேபோல தற்போது இம்மசோதாவிற்கு கேபினெட் அமைச்சரவையும் ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்த மசோதா இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் மிகப்பெரிய மாறுதல்களை தொழில்நுட்ப நிறுவனங்கள் செய்யவேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய யூனியன் GDPR என்ற கட்டுப்பாட்டை கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.