Rashtriya Gokul Mission [ராஷ்டிரிய கோகுல் மிஷன்]
> மத்திய வேளாண் அமைச்சகத்தினால் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது
> பழமையான மாட்டு இனங்களின் பெருக்கத்தை ஊக்குவிப்பது
> பால் உற்பத்தியை அதிகரிப்பது
விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மய்யத்தின் துணைத் தலைவராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பெங்களூரூ இஸ்ரோ மய்ய இயக்குநராக பணியாற்றி, சந்திரயான் -1 விண்கலத்தை நிலவுக்கு செலுத்தியதில் முக்கிய பங்காற்றியவர் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை. இஸ்ரோவில் பணியாற்றி ஓய்வு பெற்ற மயில்சாமி அண்ணாதுரைக்கு தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மய்யத்தின் துணைத்தலைவர் பதவி வழங் கப்பட்டுள்ளது.
வருமானம் குறைந்தவர்களுக்காக இடஒதுக்கீடு
> மத்திய அரசு பொதுப்பிரிவில் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்காக இட ஒதுக்கீட்டை கொண்டுவர முடிவு செய்துள்ளது
> அதன்படி 10% இட ஒதுக்கீடு அவர்களுக்கு வழங்கப்படும்
> ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கும் குறைவாகவும் 5 ஏக்கர் நிலத்திற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்
> இதற்காக விதி 15 மற்றும் 16 இல் மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு
Rail Kumbh Seva Mobile App
> ரயில் கும்ப சேவா மொபைல் ஆப் வடக்கு ரயில்வேயால் துவங்கப்பட்டுள்ளது
> கும்பமேளா நிகழ்விற்கு அலகாபாத்திற்கு வருவோருக்கு தகவல்களை வழங்குவதற்காக இந்த ஆப் பயன்படும்
Yaarn Bank Scheme [யார்ன் வங்கி திட்டம்]
> மத்திய ஜவுளித்துறை இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
> நூல் விற்பனையில் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதை தவிர்ப்பதே நோக்கம்
> இடைத்தரகர்களின் தொந்தரவை தவிர்ப்பது
தேசிய மனித உரிமைகள் ஆணையமானது பொதுச்சேவை மையங்கள் மூலமாக புகார்களை பதிவு செய்வதற்காக 14433 எனும் இலவச தொலைபேசி எண்ணைத் தொடங்கியுள்ளது.
ஐநா சபையில் தற்காலிக உறுப்பினர்களாக இணைந்துள்ள நாடுகள்
> ஜெர்மனி
> இந்தோனேசியா
> தென்னாப்பிரிக்கா
> பெல்ஜியம்
> டொமினியன் குடியரசு
தேஜாஸ் அதிவேக விரைவு இரயில்
இந்தியாவின் அதிவேக விரைவு குளிரூட்டப்பட்ட ரயிலான தேஜஸ் மதுரை – எழும்பூர் இடையே தனது சேவையை விரைவில் தொடங்கவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
குளிரூட்டப்பட்ட இந்தியாவின் அதிவேக விரைவு ரயிலான தேஜஸ் ரயில் சேவை குறித்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதில் LED திரைப் பொருத்தப்பட்ட சொகுசான இருக்கைகள், வைஃபை மற்றும் உயர்தரமான கழிவறைகளைக் கொண்ட தேஜஸ் ரயில், சென்னை ரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டு, தற்போது வில்லிவாக்கத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மியூசிக் அகாடெமியின் 13வது நாட்டிய விழாவில் பிரபல நாட்டிய கலைஞர் சாந்தா தனஞ்செயனுக்கு “நிருத்திய கலாநிதி விருது” வழங்கப்பட்டது.
Previous Current Affairs : Click here
Take Sample Test here : Click Here
TECH TAMILAN