சென்னை உயர்நீதிமன்றம் டிக் டாக் ஆப்பிற்க்கு தடை விதித்திருந்த நிலையில் தங்களது விதிமுறைகளுக்கு எதிராக இருந்த 6 மில்லியன் வீடியோக்களை நீக்கியிருக்கிறது டிக் டாக்.
டிக் டாக் ஆப்பானது கலாச்சாரத்தை சீர்குலைக்கின்ற விதமாகவும் [Degrading Culture] பாலியல் விசயங்களை ஊக்குவித்து [encouraging pornography] அதன் மூலமாக பாலியல் குற்றங்களுக்கு காரணமாகவும் இருக்கிறது. மேலும் பிறருக்கு தொந்தரவு கொடுக்கிற தகவல்களையும் சமூகத்திற்கு களங்கம் விளைவிக்கக்கூடிய விசயங்களையும் இளைஞர்களுக்கு மருத்துவரீதியான பிரச்சனைகளை உருவாக்கிடும் படியும் இருப்பதனால் டிக் டாக் ஆப்பிற்கு தடை விதிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த சூழலில் டிக் டாக் நிறுவனமானது விதிமுறைகளுக்கு உட்படாத 6 மில்லியன் வீடியோக்களை நீக்கியிருக்க்கிறது. இதன் மூலமாக தங்களது பயனாளர்களுக்கு பாதுகாப்பான வசதியினை வழங்க முடியும் என நம்புகிறது டிக் டாக்.
அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட வயதுடைய நபர்கள் மட்டுமே டிக் டாக் ஆப்பில் கணக்கை துவங்க முடியும் என்பதை உறுதி செய்ய age – gate வசதியை கொண்டுவந்துள்ளது. புதிய விதிமுறையின்படி 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே டிக் டாக் இல் கணக்கினை துவங்கிட முடியும். குறைந்த வயதுடையவர்கள் டிக் டாக் ஆப் பயன்படுத்துவதனை தடுக்க போதிய பாதுகாப்பு மேம்பாடுகளை செய்து வருவதாக டிக் டாக் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
[easy-notify id=297]
TECH TAMILAN