டிக் டாக் செயலியை முடக்க நடவெடிக்கை எடுக்க வேண்டும் என தமிமுன் அன்சாரி என்ற சட்டமன்ற உறுப்பினர் சட்டசபையில் கேட்டுக்கொண்டார் . இதனை அடுத்து அமைச்சர் மணிகண்டன் பேசியபோது “டிக் டாக் செயலியை முடக்க நடவெடிக்கை எடுக்கப்படும் எனவும் இதுகுறித்து மத்திய அரசிடம் பேசுவோம்” எனவும் தெரிவித்து இருந்தார் .
டிக் டாக் செயலியை முடக்க நடவெடிக்கை எடுப்போம் என அமைச்சர் கூறியதற்கு ஆளும்கட்சி எதிர்க்கட்சி உட்பட அனைவருமே பேராதரவு தெரிவித்து இருந்தனர் . சமூக வலைதளங்களிலும் பொதுமக்களிடமும் கூட இதற்கு வரவேற்பு கிடைத்தது . ஆனால் டிக் டாக் செயலியை முடக்குவது சரியா? அது தீர்வினை தருமா? என்ற கேள்வியும் பரவலாக எழுந்திருக்கின்றது.
——————————————————————————————
Advertisement :
——————————————————————————————
டிக் டாக் செயலி
தற்போது இளைஞர்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கக்கூடிய செயலிகளில் மிக முக்கியமானது டிக் டாக் செயலி . தங்களுடைய நடிப்பு திறனை வெளிபடுத்திட சிறந்த தளமாக பலர் டிக் டாக் செயலியை கருதுகிறார்கள் .
முன்னர் மீயூசிக்கலி என இருந்து தற்போது டிக் டாக் என வெளிவந்திருக்கும் இந்த ஆப் வந்த சில காலங்களிலேயே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இளம் பருவத்தினர் துவங்கி, குடும்பம் குடும்பமாக கூட டிக் டாக் இல் வீடியோ பதிவேற்றம் செய்வதை காண முடிகிறது.
டிக்டாக் ஆப்பிற்கு அடிமையாகி விட்டீர்களா? தடுப்பது எப்படி?
டிக் டாக் செயலி தடை கோரிக்கை
டிக் டாக் செயலி ஒருபுறம் தங்களது நடிப்பு திறனை வெளிப்படுத்திட பயன்பட்டாலும் மற்றொருபுறம் ஆபாச வீடியோக்கள் பரவும் தளமாகவும் மாறிப்போனது . அதோடு சேர்த்து சிலர் தங்களது வீடியோவை மெருகேற்றிட ஆபத்தான செயல்களில் ஈடுபடவும் ஆரம்பித்து இருக்கின்றனர் .
பல இளைஞர்களின் நேரத்தை இந்த டிக் டாக் செயலி வீணடிப்பதாகவும் குறை சொல்லப்பட்டது .
காவல் நிலையங்களிலும், காவல்துறை வாகனங்களையும் பயன்படுத்தி டிக் டாக் வீடியோ எடுத்ததற்காக இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிகழ்வுகளும் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.
பாமக நிறுவனர் திரு ராமதாஸ் அவர்கள் “ஆபாச வீடியோக்கள் அதிகம் பரவி சமூகத்தை சீரழிகின்ற டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் எனவும் இளைஞர்களின் நேரத்தையும் கவனத்தையும் வீணடிக்கின்ற ஆப்பினை தடை செய்ய வேண்டும் எனவும்” என கோரிக்கை விடுத்திருந்தார் .
இளைய தலைமுறையை சீரழிக்கும் டிக்-டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்பது தான் இந்த ஆண்டின் முதல் நாளில் நான் வெளியிட்ட அறிக்கை. அந்த கோரிக்கைக்கு சட்டப்பேரவையில் அனைத்துத் தரப்பின் ஆதரவும் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. டிக்-டாக் ஒழியட்டும். இளையதலைமுறை மீளட்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) February 13, 2019
பொதுமக்களில் பலரும் இதே கோரிக்கையை விடுத்திருந்தனர் . இதனை தொடர்ந்துதான் தமிமுன் அன்சாரி சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார் .
டிக் டாக் செயலியை முடக்குவது சரியா? இறுதி தீர்வாக அது இருக்குமா ?
நாமும் முன்பு டிக் டாக் செயலியை முடக்க வேண்டும் என்றே கோரிக்கை விடுத்திருந்தோம் . ஆனால் அந்த நிலைப்பாட்டில் இருந்து தற்போது மாற்றமடைகிறோம் . இதற்கான காரணத்தை தான் தற்போது பார்க்க இருக்கின்றோம் .
முன்னனி சாட் ஆப்களான WhatsApp , Messenger , Facebook ஆகியவற்றிலும் ஆபாச விசயங்கள் பரப்பப்படுகின்றன . இன்றும் பல இணையதளங்களில் ஆபாச வீடியோக்கள் இருப்பதனை பார்க்க முடிகின்றது .
இன்று டிக் டாக் என்ற ஒரு செயலியை தடை செய்தால் அதையே முன்னுதாரணமாக கொண்டு பல ஆப்களை தடை செய்ய துவங்கலாம் . அதனை அதிகார வர்க்கத்தினர் பயன்படுத்தி மக்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக கூறுகின்ற சமூக வலைதளங்களையும் முடக்கிட துவங்கலாம் .
இன்று டிக் டாக் செயலியை தடை செய்வது என்பது இந்திய அரசால் எளிமையாக செய்யக்கூடிய வேலை . ஆனால் அதற்கு பின்னர் வெறெந்த அப்ளிகேஷனும் வராது என உறுதி என கூற முடியாது .
இப்படிப்பட்ட சூழலில் முழுவதும் தடை என்பதற்கு மாற்றாக “சீரமைக்கலாம்” . டிக் டாக் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்கள் அனைத்தையுமே கண்காணிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கு இருக்கின்றது .
>> தொழில்நுட்பம் குழந்தைப்பருவத்திலேயே பிள்ளைகளை சென்று அடைவதினால் “தனி கண்காணிப்பு குழுவினை அமைத்து ” கண்காணிக்க வேண்டும் .
>> குறிப்பிட்ட வயதினை அடைந்தவர்கள் மட்டுமே டிக் டாக் போன்ற செயலிகளை பயன்படுத்துவதனை உறுதிப்படுத்திட வேண்டும் .
>> ஆபாச விசயங்கள் , வன்முறை கருத்துக்கள் உள்ளிட்டவற்றை பரப்புபவர்களை உடனடியாக கண்டறிந்து அவர்களுக்கு தண்டணை அளிக்கும் விதமாக மாற்றங்களை கொண்டுவர அரசும் அப்ளிகேசன் வைத்திருப்பவர்களும் முயல வேண்டும் .
>> தொழில்நுட்பத்தினை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பது போன்ற விசயங்களை பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் போய் சேர்கின்ற விதத்தில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும்.
——————————————————————————————-
Advertisement:
——————————————————————————————–
இதுபோன்ற தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தொடர்ந்து படிக்க subscribe செய்திடுங்கள்.
உங்களுடைய கருத்துக்களை தவறாமல் பதிவிடுங்கள், அவையே எங்களுக்கு ஊக்கம் தரும்
TECH TAMILAN
இதையும் படிங்க,