Site icon Tech Tamilan

ஏன் கடிகாரம் அனைத்தும் 10:10 இல் வைக்கப்படுகின்றன? | Why watches stops at 10:10?

03.-This-Is-Why-10-10-Is-The-Default-Setting-On-Watches

Why watches stop at 10:10

நீங்கள் கடிகாரம் வாங்க கடைகளுக்கு சென்றால் பெரும்பான்மையான இடங்களில் விற்கப்படாத புதிய கடிகாரங்கள் 10 மணி 10 நிமிடத்தை குறிக்கும் .விதமாக வைக்கப்பட்டிருக்கும். இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் உண்மையாலுமே ஏன் அப்படி வைக்கப்படுகின்றன? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.


ஒவ்வொருவர் கைகளிலும் கடிகாரம் தவழ்கிறது. நீங்கள் அதனை வாங்குவதற்கு கடைக்கு செல்லும் போது பெரும்பாலான கடிகாரங்கள் 10:10 என்ற நேரத்தை குறிக்கும் விதமாகவே வைக்கப்பட்டிருக்கும். நீங்கள் இதற்கான காரணத்தை கேட்டால் பெரும்பாலானவர்கள் சொல்லக்கூடிய பதில் ‘அந்த நேரத்தில் தான் அமெரிக்க முன்னால் ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் சுட்டுக்கொல்லப்பட்டார்’ என்பதையே பதிலாக கூறுவார்கள். இன்னும் சிலரோ இதெல்லாம் இலுமினாட்டிகளின் குறியீடு என நம்மையே மிரள வைப்பார்கள். உண்மையிலேயே விற்கப்படாத கடிகாரங்கள் ஏன் 10:10 இல் வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ள இன்னும் சில நிமிடங்களே நீங்கள் காத்திருக்க வேண்டும்.

பெரும்பாலானவர்கள் கூறுவது, ஆப்ரஹாம் லிங்கன், ஜான் கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்ட நேரத்தை குறிப்பதற்காகவே இந்த நேரத்தை குறிக்கும் விதமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் ஆப்ரஹாம் லிங்கன் சுடப்பட்டது இரவு 10.15 p.m மணிக்கு அவர் இறந்தது அதிகாலை 7.22 மணிக்கு. ஜான் கென்னடி சுடப்பட்டது 12.30 p.m. CST க்கு மார்ட்டின் லூதர் கிங் சுடப்பட்டது மாலை 6:01 p.m. ஆஹா நம்மை இவ்வளவு நாட்களாக ஏமாற்றிவிட்டார்களே என நினைக்கிறீர்களா!

இன்னொரு பொய்யும் இந்த 10:10 நேரத்தை மையப்படுத்தி உலாவுகிறது, அத்தனையும் பார்த்துவிடுவோம். 10:10 நேரத்தின் போது தான் அமெரிக்கா, ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகி மீது அணுகுண்டை வீசியது. அப்போது ஏற்பட்ட பேரழிவுக்கு வருத்தம் தெரிவிக்கவே இந்த நேரம் வைக்கப்படுகிறது என்பார்கள். ஆனால் முதலாவது அணுகுண்டு [The Fat Man bomb] 11:02 a.m க்கு வீசப்பட்டது, இரண்டாவது அணுகுண்டு [Little Boy] 8:15 a.m. க்கு வீசப்பட்டது. ஆக இந்த கதைகளும் கட்டுக்கதைகளே என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

இவை அனைத்துமே பொய்யென்றால் பிறகு எதற்காகத்தான் கடைகளில் இருக்கும் கடிகாரங்கள் ஏன் 10:10 என்ற நேரத்தில் வைக்கப்பட்டுள்ளன?

துவக்கத்தில் கடிகாரங்கள் அனைத்தும் வெவேறான நேரங்களில் தான் வைக்கப்பட்டன. ஆனால் 10:10 என்ற நேரத்தை படிப்படியாகவே கடிகார நிறுவனங்கள் பயன்படுத்த துவங்கின. 10:10 என்ற நேரத்தை வைப்பதில் சில நன்மைகள் இருப்பதே இதற்குக் காரணம்,

>> 10:10 என்ற நேரத்தை குறிக்கும் போது இரண்டு முள்களும் ஒன்றோடொன்று உரசாமல் தனித்தனியே இருக்கும். அதேபோல V வடிவில் இருப்பதால் எளிதில் பார்க்கும் விதமாகவும் கவரும் விதமாகவும் இருக்கும்.

>> 10:10 என்ற நேரத்தில் இருக்கும் போது ஒழுங்கு வடிவில் இருக்கும். வாடிக்கையாளர்கள் பார்க்கும் போது மகிழ்வான தோற்றத்தில் இருக்கும். அதுவே ஒழுங்கற்ற வடிவில் இருந்தால் வாடிக்கையாளர்களை கவராது.

>> பெரும்பான்மையான நிறுவனங்கள் தங்களது லோகோவை 12 க்கு கீழாகவே வைக்கும். அதை முற்கள் தாங்கி நிற்பது போன்ற தோற்றம் வாடிக்கையாளர்களை எளிதில் கவரும்.

>> உதாரணத்திற்கு, ஆரம்பத்தில் Timex நிறுவனம் தங்களது கடிகாரங்களில் 8:20 என்ற நேரத்தை குறிக்கும்படி தான் வைத்திருந்தது. ஆனால் அந்த நிலையில் முற்கள் இருப்பது சோகமான முகம் போல இருப்பதாக கருதிய டைம்எக்ஸ் நிறுவனம் தங்களது புதிய கடிகாரங்களில் 10:09:36 என துல்லியமாக வைக்கத்துவங்கியது.

இப்படி ஒவ்வொரு நிறுவனமும் 10:10 என்ற நேரத்தை பின்பற்ற துவங்கியதால் சிறிய கடைக்காரர்களும் கூட அதையே பின்பற்றத் துவங்கிவிட்டார்கள். இப்படித்தான் புதிய கடிகாரங்களில் 10:10 என்ற நேரம் வைக்கப்பட்டு வருகிறது.



Get updates via whatsapp





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version