Site icon Tech Tamilan

இவைதான் உலகின் டாப் 5 அதிக விலை கார்கள் | The Top 10 Most Expensive Cars In The World

Rolls-Royce Boat Tail Top 5 expensive cars

கார்கள் என்றாலே பலருக்கும் பிடிக்கும். அப்படிப்பட்ட காரின் விலை சில லட்சங்களில் இருந்து பல நூறு கோடிகள் வரைக்கும் உள்ளது. சில நிறுவனங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பல சிறப்பம்சங்களை கொண்டு உருவாக்கும் கார்கள் நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத விலைக்கு விற்கப்படுகின்றன. அந்தக்கார்களை பல பிரபலங்கள் தங்களது வீட்டில் வாங்கி நிறுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். அப்படி, உலகிலேயே அதிக விலையுள்ள டாப் 5 கார்களைத்தான் நாம் இங்கே பார்க்க இருக்கிறோம் (Top 5 Most Expensive Cars In The World) .

https://www.youtube.com/watch?v=l6k6g04KCZ8

1. ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-Royce Boat Tail)

பல பணக்காரர்கள் வாங்கும் முதன்மையான கார்களில் ரோல்ஸ் ராய்ஸ்க்கு முக்கிய இடம் உண்டு. குறிப்பாக, Rolls-Royce Boat Tail பற்றி பேச முக்கியக்காரணம் இதன் எண்ணிக்கை மற்றும் விலை தான். மொத்தமாகவே மூன்று மட்டுமே உருவாக்கப்படும், ஏற்கனவே ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இது வழங்கப்படும். அந்த மூன்று கார்களும் வெவ்வேறு நிறங்கள் மற்றும் பிற அம்சங்களில் தனி தன்மையுடன் இருக்கும். இப்போதைக்கு ஒரே ஒரு கார்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை 28 மில்லியன் டாலர்கள் வரைக்கும் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்திய மதிப்பில் 213 கோடி ரூபாய்.

2. புகாட்டி லா வாய்ச்சர் நோயிரே (Buggati La Voiture Noire)

நீங்கள் படத்தில் பார்க்கும் கருநிற புகாட்டி கார் மிகவும் தனித்தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. கார்பன் பைபரில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கார் 1479 குதிரைத்திறன் கொண்டது. இதன் அதிகபட்ச வேகம் 260 miles/hour. இந்தக்காரின் விலை $18.7 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் 142 கோடியே 41 லட்சம். புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த காரை வாங்கியுள்ளார்.

3. புகாட்டி சென்டோடிசி [Buggati Centodieci)

கரங்களால் உருவாக்கப்படும் புகாட்டியின் இந்தவகை கார் மொத்தமாகவே 10 தான் உருவாக்கப்படும். தங்களது 110 ஆண்டுகால பாரம்பரியத்தை நினைவூட்டும் விதமான சிறப்பான வடிமைப்புகள் மற்றும் சிறப்பு அம்சங்களைக் கொண்டு இந்தக்கார்களை தயாரித்து உள்ளது இந்நிறுவனம். இந்த கார் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.4 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இதன் அதிகபட்ச வேகம் 380 km/h. இதன் விலை 9 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் 68 கோடியே 55 லட்சம்.

4. மெர்சிடஸ் மேபேக் எக்ஸலெரோ (Mercedes Maybach Exelero)

மெர்சிடஸ் நிறுவனத்தின் சிறந்த கார்களில் இதுவும் ஒன்று என சொல்லலாம். 2004 இல் உருவாக்கப்பட்ட இந்தக்கார் அப்போது 8 மில்லியன் டாலர்கள் என்ற விலையில் இருந்தது. இப்போது இதன் விலை 10 மில்லியன் டாலர்கள் வரை இருக்கலாம் என சொல்லப்படுகிறது. அதிவேகத்தில் எந்தவித சிரமும் இன்றி பயணிக்கும் விதத்தில் இந்தக்காரின் வடிவமைப்பு உள்ளது. அதிகபட்சமாக இந்த கார் 351 km/h வேகத்தில் செல்லும். இந்திய மதிப்பில் இந்த காரின் விலை 76 கோடியே 17 லட்சம். இந்தியாவில் இந்த கார் இந்தி நடிகர் க்ரித்திக் ரோஷன் அவர்களிடம் உள்ளது.

5. புகாட்டி டிவோ [Buggati Divo]

புகாட்டி டிவோ கார் புகாட்டி சிரோன் காரின் சில விசயங்களோடு ஒத்துபோனாலும் கூட இதன் அதிக விலைக்கு ஏற்றவாறு அதனைவிட பல சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது. அதிகபட்சமாக 40 கார்கள் தான் உருவாக்கப்படும் என்ற கட்டுப்பாட்டில் இந்த கார்கள் உருவாக்கப்பட்டு வேண்டுவோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. மலேசியாவில் உள்ள கார் விரும்பியான ஜேபி சின் அவர்களுக்கு இந்த கார் 2021 மே மாதம் வழங்கப்பட்டது. அதிகபட்சமாக இந்த கார் 351 km/h வேகத்தில் செல்லும். இதன் விலை 5.8 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் 44 கோடியே 19 லட்சம் ரூபாய்.

நீங்கள் இங்கே பார்த்தவை உலகில் தற்போது இருக்கும் அதிக விலையுள்ள கார்கள் [Most Expensive Cars In World].



Get updates via whatsapp

Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version