What is IoT (Internet Of Things)? Explained In Tamil

IoT அல்லது Internet Of Things என்பது பல்வேறு கருவிகளை இணைக்கும் ஒரு பிளாட்பார்ம் அல்லது தொழில்நுட்பம். இந்தத் தொழில்நுட்பம், பல்வேறு கருவிகள் தங்களுக்குள்ளும் இன்டர்நெட் உடனுடன் தொடர்புகொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறது. 

தற்போது வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தில் IoT யும் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் பயன்பாடு, மனிதர்கள் தங்களது வாழ்க்கையை மென்மேலும் மேம்படுத்திக்கொள்ளவும், எளிமையாக்கிடவும் உதவுகிறது. வீட்டில் மட்டுமின்றி, தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள் என பல்வேறு இடங்களிலும் இதன் பயன்பாடு இருக்கும். 

What is IoT (Internet Of Things)
What is IoT (Internet Of Things)

இந்தப்பதிவில், IoT குறித்த பின்வரும் விசயங்கள் அனைத்தையுமே விரிவாக பார்க்க இருக்கிறோம். இதன் மூலமாக நீங்கள் IoT குறித்து முழுமையாக அறிந்துகொள்ள முடியும். 

What is IoT? How does IoT work?

Examples of IoT devices

What are the 4 types of IoT?

What is the future of IoT?

What is IoT? How does IoT work?

IoT என்பதன் ஆங்கில விரிவாக்கம் Internet Of Things. அதாவது, இந்த தொழில்நுட்பமானது பல்வேறு கருவிகளை இன்டர்நெட் மூலமாக ஒரே நெட்ஒர்க்கில் இணைக்கிறது. இதன் மூலமாக, கருவிகள் ஒவ்வொன்றும் தங்களுக்கு இடையேயும் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும், அதேபோல இணையத்துடனும்  தொடர்பு கொண்டு தனக்கு வேண்டிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். 

இப்போது இருக்கும் விலை குறைவான கம்ப்யூட்டர் சிப், அதிவேக இன்டர்நெட் ஆகியவை மூலமாக லட்சக்கணக்கான ஸ்மார்ட் கருவிகள் இணையத்துடன் இணைந்துள்ளன. உதாரணத்திற்கு, ஸ்மார்ட் பிரஷ், ஸ்மார்ட் கார், ஸ்மார்ட் லைட்ஸ், இன்னும் சில உபகரணங்கள் கூட இணைந்துள்ளன. இவை தங்களிடம் இருக்கும் சென்சார்கள் மூலமாக தகவல்களை சேகரித்து பின்னர் புத்திசாலித்தனமாக பயனாளர்களுக்கு உதவுகின்றன. 

உதாரணத்திற்கு, நீங்கள் ஸ்மார்ட் பிரஸ் பயன்படுத்துகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதில் இருக்கும் சென்சார் உங்களது ஈறுகளின் நிலையை தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகிறது என்றால் உங்களது ஈறு மோசமான நிலையை அடைவதற்கு முன்பாகவே உங்களுக்கு எச்சரிக்கை செய்துவிடும். இது ஓர் உதாரணம் தான். 

 Internet of Things என்ற தொழில்நுட்பம் அனைத்து ஸ்மார்ட் கருவிகளையும் இண்டெர்நெட் உடன் இணைக்கிறது. எப்படிப்பட்ட தகவல்களை பெற வேண்டும் என்பதைப் பொறுத்து சென்சார்கள் அந்த கருவிகளில் பொருத்தப்படுகின்றன. இப்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, மிக குறைந்த செலவில் இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்துவிட முடிகிறது என்பதனால் இப்போது IoT வேகமாக வளர்ந்து வருகிறது.

How does IoT work?

IoT என்கிற தொழில்நுட்பம் நிகழ்காலத்தில் செயல்படக்கூடிய ஒரு தொழில்நுட்பம். இது நேரடியாக தகவல்களை சேகரிப்பது, பரிமாறுவது என நுட்பமான வேலையை செய்கிறது. இதில் மூன்று முக்கிய பாகங்கள் இருக்கின்றன. 

Smart devices : ஸ்மார்ட் கருவிகள், உதாரணத்திற்கு ஸ்மார்ட் டிவி, பாதுகாப்பு கேமரா, ஸ்மார்ட் வாட்ச் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அவை சென்சார்கள் மூலமாக தகவல்களை பெற வேண்டும், பயனர்கள் அளிக்கும் தகவல்களை பெற வேண்டும், அந்த தகவல்களை வைத்துக்கொண்டு இன்டர்நெட் உடன் இணைய வேண்டும். IoT பிளாட்பார்ம் உடன் இணைந்து செயலாற்ற வேண்டும். 

உதாரணத்திற்கு, இப்போது உள்ள CCTV என்ன செய்கிறது? நிகழ்வுகளை படம் எடுக்கிறது அவ்வளவுதான். ஆனால், IoT யில் இணைக்கப்பட்டுள்ள Smart CCTV யால் நீங்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் உங்கள் வீட்டிற்கு யாரேனும் வந்தால் அதனை ஆராய்ந்து உங்களது IoT யில் இணைந்துள்ள மொபைலுக்கு தகவலை அனுப்பும். இன்னும் அதிகமாக சொல்ல வேண்டும் என்றால், வந்தவர்களின் முகத்தை ஆன்லைனில் இருக்கும் குற்ற பின்னணி உள்ளவர்களின் முகங்களோடு ஒப்பிட்டு உங்களுக்கு எச்சரிக்கை கூட கொடுக்கும். இப்படி இதன் பயன்பாட்டை சொல்லிக்கொண்டே போகலாம். 

Internet of Things - tamil
Internet of Things – tamil

IoT application : IoT application என்பது ஒரு சாப்ட்வேர் தொழில்நுட்பம். இது பல்வேறு ஸ்மார்ட் கருவிகளை ஒருங்கிணைத்து பயனுள்ள விசயங்களை செய்திடும் திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு கருவிகளில் இருந்து வரக்கூடிய தரவுகளை Machine Learning மற்றும் Artificial Intelligence மூலமாக ஆராய்ந்து அதற்கேற்ப வேலைகளை இது மேற்கொள்ளும். இதில் இருந்து வரக்கூடிய கட்டளைகளின் அடிப்படையில் ஸ்மார்ட் கருவிகள் செயல்படும். 

A graphical user interface : இதன் மூலமாக பயனாளர்கள் தங்களது கருவிகளை எளிதாக இணைக்க முடியும், நீக்க முடியும். மேலும், IoT ஐ இதன் மூலமாக எளிதாக நிர்வகிக்க முடியும்.

Examples of IoT devices

இப்போது IoT யின் பயன்பாடு பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. பலர் இதுதான் IoT என அறியாமலேயே அதனை பயன்படுத்தவும் ஆரம்பித்துவிட்டார்கள். இங்கே, IoT தொழில்நுட்பத்திற்கு சில உதாரணங்களை பார்க்கலாம். 

Connected Homes 

சில தினங்களுக்கு முன்னதாக நமது தமிழ்நாட்டில் உள்ள Connected Homes பற்றிய வீடியோ பார்த்தேன். அவர்கள் கதவின் லாக் முதற்கொண்டு, டிவி, லைட்ஸ் என அனைத்தையும் ஸ்மார்ட் கருவிகளாக மாற்றி அவற்றை இணைத்து இருந்தார்கள். இப்படி, வீட்டில் உள்ள ஒவ்வொரு கருவிகளிலும் சென்சார்களை பொருத்தி அதன் மூலமாக தரவுகளை பெற்று வாழ்க்கையை எளிதாக்கிக்கொள்ள முடியும். 

உதாரணத்திற்கு, 

நீங்கள் வீட்டில் இல்லாத போது டிவி, லைட்ஸ் எறிந்தால் அதனை தானாகவே OFF செய்திட முடியும். 

தண்ணீர் பைப்புகளில் leakage ஐ உணரும் சென்சார்களை வைத்துவிட்டால் தண்ணீர் எப்போதாவது வெளியேறினால் உங்களுக்கு தகவல் வந்துவிடும். 

வீட்டை விட்டு சென்றுவிடலாம் வீட்டில் உள்ள கருவிகளை உங்களால் இயக்க முடியும்.

Connected cars

இப்போது உள்ள கார்கள் பலவற்றில் சென்சார்கள் இருக்கின்றன. ஆனால், அதிகமாக அவை இன்டர்நெட் உடன் இணைந்து இருப்பது இல்லை. உங்கள் காரில் பழுது ஏற்படும் போது மெக்கானிக் தான் சென்சார் தகவல்களை பெற்று வேலை செய்கிறார். ஆனால், Connected cars இல் சென்சார் தகவல் அனைத்தும் இன்டர்நெட் உடன் இணைக்கப்பட்டு இருக்கும். ஆகவே, உங்களது காரில் பழுதை நீங்கள் அறிவதற்கு முன்னதாகவே அது அறிந்துகொண்டு உங்களுக்கு எச்சரிக்கை செய்யும். அதேபோல, நீங்கள் எப்போது சர்வீஸ் விட வேண்டும், என்னென்ன மாதிரியான தவறுகளை செய்கிறீர்கள் என இதன் மூலமாக அறிய முடியும். 

Smart buildings

இப்போதுள்ள பெரிய பெரிய கட்டிடங்களில் IoT applications பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலமாக அவர்களால் எளிதாக அங்கே நிர்வாகம் செய்திட முடிகிறது. உதாரணத்திற்கு, மின்சாரம், தண்ணீர் பயன்பாட்டை கண்டறிவது, செலவுகளை குறைக்க உதவுவது, சிறப்பாக நிர்வாகம் செய்திட உதவுவது என பல்வேறு விசயங்களில் இது பயன்படுகிறது. 

இப்படி IoT தொழில்நுட்பத்தின் பயன்பாடு என்பது அதிகமாகிக்கொண்டே போகிறது. 

What are the 4 types of IoT?

தற்போதைக்கு நான்கு IoT பிளாட்பார்ம் இருக்கின்றன. உங்களுக்கு எந்த மாதிரியான தேவை இருக்கிறது என்பதைப் பொறுத்து ஒன்றையோ அல்லது பலவற்றையோ நீங்கள் பயன்படுத்த முடியும். 

IoT Connectivity Platforms

IoT Device Management Platforms

IoT Application Enablement Platforms

IoT Analytics Platforms

IoT Connectivity Platforms – நீங்கள் Wifi, Blutooth, Mobile Internet ஆகியவற்றை பயன்படுத்தி இணைத்து இருக்கின்ற ஸ்மார்ட் கருவிகளை நிர்வகிக்க இந்த பிளாட்பார்ம் உதவும். நீங்கள் எளிதாக பயன்படுத்தும் விதத்திலான user interface இதில் இருக்கும். சிறிய அளவில் பயன்பாடு கொண்டவர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும். 

IoT Device Management Platforms – இது மிகப்பெரிய நிறுவனங்களுக்கு ஏற்றது. இதில் இணைத்திருக்கும் பல கருவிகளை கண்காணிப்பது, அவற்றை பாதுகாப்பது, அப்டேட் உள்ளிட்ட வேலைகளை செய்வது போன்ற காரணங்களுக்காக இது பயன்படும். 

IoT Application Enablement Platforms – IoT யில் உள்ள கருவிகளில் இருந்து பெறப்படும் தகவல்களை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்காக அப்ளிகேஷன்களை உருவாக்கும் பிளாட்பார்ம் தான் இது. 

IoT Analytics Platforms : IoT யில் இணைந்து இருக்கும் கருவிகளில் இருந்து பெறப்படும் தகவல்களை ஆராய்ந்து அதில் இருந்து முடிவுகளை எடுக்கும் வேலையை இது செய்கிறது. உதாரணத்திற்கு, Google Analytics போன்று இது செயல்படும். 

What is the future of IoT?

IoT யின் எதிர்காலம் மிகப்பெரிய அளவில் இருக்கின்றது என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இதன் பயன்பாடு மக்களுக்கு பல்வேறு விதங்களில் உதவிரகரமாக இருக்கும் என்பதனால் இது பல்வேறு துறைகளில் பயன்படும். 

1. விவசாயம், போக்குவரத்து, ஸ்மார்ட் நகரங்கள் என பல்வேறு துறைகளில் IoT யின் பயன்பாடு எதிர்காலத்தில் அதிகமாக இருக்கும். 

2. 5ஜி போன்ற அதிவேக இன்டர்நெட் பயன்பாடு இப்போது வந்திருக்கும் சூழலில் அதிகமான கருவிகளை IoT யில் இணைக்க முடியும். இதன் காரணமாக, இந்தத் தொழில்நுட்பத்தை மிகப்பெரிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என பெரிய அளவில் கொண்டு சேர்க்க முடியும். 

3. AI மற்றும் மெஷின் லேர்னிங் மேலும் மேலும் வளர்த்துக்கொண்டு இருக்கிறது. தரவுகளில் இருந்து பயனுள்ள முடிவுகளை பெறுவதில் அதிக முன்னேற்றம் ஏற்பட்டுள்ள காரணத்தால் IoT இன்னும் விரிவடைய வாய்ப்பு உண்டு. 

4. Security and Privacy Concerns ஆகியவை இரண்டும் IoT க்கு எதிராக உள்ள மிகப்பெரிய சவால்கள். அனைத்து கருவிகளும் இன்டர்நெட் உடன் இணைக்கப்பட்டு இருக்கும் என்பதனால் ஹேக் பிரச்சனைகளும் இதில் உண்டு. இதற்கான சிறப்பான பாதுகாப்பு வேலைப்பாடுகளை IoT நிறுவனங்கள் செய்து வருகின்றன. 

Conclusion 

அதிவேக இன்டர்நெட், ஸ்மார்ட் கருவிகள் உருவாக்கம், விலை குறைவான தொழில்நுட்ப சாதனங்கள் இவை IoT தொழில்நுட்பத்தை மக்களிடம்  கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்காற்றி இருக்கின்றன. இப்போது நாம் IoT பயன்பாட்டின் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறோம். இன்னும் இதில் வரக்கூடிய மாற்றங்கள் மக்களிடத்தில் இந்தப்பயன்பாட்டை வெகு விரைவில் கொண்டு சேர்க்கும். 

Future Technologies In Tamil எனும் தலைப்பில் பல்வேறு தொழில்நுட்ப விசயங்கள் குறித்து நாம் தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம். அதில் IoT யும் ஒன்று.