Cybersecurity என்பது கம்ப்யூட்டர், மொபைல், சர்வர்கள், எலக்ட்ரானிக் கருவிகள், தகவல்கள் இவை அனைத்தையும் சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் ஒரு செயல்முறை தான். இதனை information technology security அல்லது electronic information security என அழைக்கலாம்.
இன்றைய ஆன்லைன் உலகத்தில் சைபர் தாக்குதல் என்பது தவிர்க்கப்பட முடியாத ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக, கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் தங்களது தகவல்களை பாதுகாப்பதற்கு Cybersecurity Team ஐ வைத்திருப்பார்கள்.
அதிகரிக்கும் சைபர் தாக்குதல்கள்
ஒவ்வொரு ஆண்டும் சைபர் தாக்குதல்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நிறுவனங்கள், தங்களை பாதுகாத்துக்கொள்ள Cybersecurity நிபுணர்களை வேலைக்கு அமர்த்துகிறது. உதாரணத்திற்கு, 2023 இல் $188.3 பில்லியனாக இருந்த நிறுவனங்களின் செலவினம் 2026 ஆம் ஆண்டுவாக்கில் $260 பில்லியன் என உயரும் என கணிக்கப்படுகிறது.
The Different Types of Cybersecurity
Cybersecurity ஐ பின்வரும் வகைகளாக பிரிக்க முடியும்.
Network Security
Cloud Security
Endpoint Security
Mobile Security
IoT Security
Application Security
Network Security – கம்ப்யூட்டர் நெட்ஒர்க்கில் சைபர் தாக்குதல் நபர்கள் ஊடுருவுவதை தடுக்க செய்யப்படும் நடவெடிக்கைகள்.
Cloud Security – இப்போது நிறுவனங்கள் cloud computing ஐ அதிகமாக பயன்படுத்த ஆர்மபித்து உள்ளன. இதனால் அங்கே இருக்கும் தகவல்களை பாதுகாக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைளை எடுக்க வேண்டியது அவசியம்.
Endpoint Security – மொபைல், லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கருவிகளில் சைபர் தாக்குதல் ஆரம்பிக்கும் இடங்கள் தான் Endpoint என அழைக்கப்படுகிறது. இதனை பாதுகாப்பதன் மூலமாக சைபர் தாக்குதலை தவிர்க்க முடியும்.
Mobile Security – கார்ப்பரேட் நிறுவனங்களின் தகவல்களை பெறுவதற்கு அனுமதி கொண்ட மொபைல், டேப்லெட் உள்ளிட்ட கருவிகள் மூலமாக சைபர் தாக்குதல் நடைபெறாமல் இருக்க மேற்கொள்ளும் பாதுகாப்பு வழிமுறைகள்.
IoT Security – Internet of Things (IoT) இப்போது மிகவும் பிரபல்யமான ஓர் தொழில்நுட்பம். வீட்டில் உள்ள அனைத்து கருவிகளும் இதில் தான் இணைக்கப்பட்டு இருக்கும் என்பதனால் சைபர் தாக்குதலுக்கு அதிக வாய்ப்பு உண்டு. இதில் இருந்து பாதுகாக்கும் ஓர் நடவடிக்கை தான் IoT Security.
Application Security – இணையத்தோடு இணைக்கப்பட்டுள்ள ஆப்களை தாக்க முடியும். இதனை தடுக்க பல்வேறு நடவெடிக்கைகள் உள்ளன.
Types of cyber threats
இப்போதைய ஆன்லைன் யுகத்தில் பல்வேறு விதங்களில் சைபர் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. அதில் இருக்கும் சில முக்கியமான முறைகளை இங்கே பார்க்கலாம்.
Malware – Malware என்பது ஒரு மென்பொருள். குறிப்பிட்ட நபர்களின் கம்ப்யூட்டரை முடக்க பயன்படும் ஒரு மென்பொருள் தான் Malware. இப்படி செய்வதன் மூலமாக அவர்கள் பணம் பெறுவார்கள் அல்லது தங்களுக்கு வேண்டியதை செய்து கொள்வார்கள்.
Virus – தானாகவே செயல்படும் விதத்திலானவை தான் வைரஸ். இவை குறிப்பிட்ட கணினியில் இருக்கக்கூடிய பைல்களை தாக்கும்.
Trojans – இதுவும் ஒரு மோசமான மென்பொருள் தான். கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறவர்களை ஏமாற்றி இந்த Trojans ஐ கம்ப்யூட்டரில் ஏற்றி பாதிப்பை உண்டாக்குவார்கள்.
Spyware – இது ஒரு நபர் அவரது கணினியில் செய்திடும் நடவெடிக்கைகள் அனைத்தையும் கண்காணித்து சைபர் தாக்குதல் நடத்துகிறவருக்கு அனுப்பும்.
Ransomware – இது தாக்கும் கணினிகளில் உள்ள தகவல்கள் அனைத்தையும் முடக்கி, பணம் கேட்டு மிரட்டும் ஒரு வித தாக்குதல். [Read More : What is Ransomware In Tamil?]
Adware – வைரஸை பரப்புவதற்கு பயன்படுத்தப்படும் விளம்பர மென்பொருள்.
Botnets – கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறவரின் அனுமதி இன்றி சைபர் தாக்குதல் நடந்த கம்ப்யூட்டரில் அவர்களுக்கு தேவையான வேலையை செய்வது.
இப்படி பல்வேறு விதமான சைபர் தாக்குதல்கள் இருக்கின்றன.
Recent Cyber Attacks
Dridex malware
இது டிசம்பர் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு சைபர் தாக்குதல். இதில், அரசு நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் என பல அமைப்புகளின் கம்ப்யூட்டரை தாக்கினார்கள். இது, பாஸ்வேர்டை திருடுதல், வங்கி கணக்கு தகவல்களை திருடுதல், என பல்வேறு வேலைகளை செய்யும்.
Romance scams
2020 ஆம் ஆண்டு அமெரிக்க காவல்துறை இந்த சைபர் தாக்குதல் குறித்து அறிவுறுத்தியது. டேட்டிங் இணையதளங்கள் பயன்படுத்துவோர், ஆப்களை பயன்படுத்துவோர் தான் இதன் இலக்கு.
Cyber safety tips
உங்களது கம்ப்யூட்டரில் உள்ள ஆப்ரேட்டிங் இயங்குதளத்தை அப்டேட் செய்துகொண்டே இருக்க வேண்டும்.
anti-virus software ஐ பயன்படுத்துங்கள். அதனைக்கொண்டு அவ்வப்போது ஸ்கேன் செய்துவிடுங்கள்.
மிகவும் பாதுகாப்பான பாஸ்வேர்டை பயன்படுத்துங்கள். பிறர் எளிதில் கணிக்க முடியாதபடி இதனை செய்திடுங்கள்.
உங்களுக்கு தெரியாத நபர்களிடம் இருந்து வரக்கூடிய மின்னஞ்சலில் உள்ள attachment களை திறக்காதீர்கள்.
பொது இடங்களில் உள்ள WiFi களை பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள்.
Conclusion
சைபர் தாக்குதல் என்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே போகிறது. இதில் இருந்து நிறுவனங்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள பல்வேறு சைபர் பாதுகாப்பு நிபுணர்களை வேலைக்கு வைத்துள்ளார்கள். இதைத்தவிர Anti virus மென்பொருள்களும் கூட உதவுகின்றன.
இன்னும் பல்வேறு தொழில்நுட்பங்கள் பற்றி விரிவாக படிக்க இங்கே [Future Technologies Explained In Tamil] கிளிக் செய்திடுங்கள்.