Indeed Meaning In Tamil என பலரும் சர்ச் செய்கிறார்கள். Indeed என்பது நாம் பெரும்பாலும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தாத ஆங்கில வார்த்தைகளில் ஒன்று என்றாலும் கூட அதனை நாம் பயன்படுத்தும் போது நமது எழுத்துக்கள் சற்று உயர்வாக பார்க்கப்படும். அதற்கு சரியான தமிழ் விளக்கத்தை நீங்கள் தெரிந்துகொண்டால் அதனை பயன்படுத்துவது மிகவும் சுலபமாக இருக்கும்.

ஆங்கில அகராதியில் Indeed என்பதற்கு பின்வரும் விளக்கம் தான் கொடுக்கப்பட்டுள்ளது.
Word | Meaning |
Indeed | really or certainly, often used to emphasize something |
ஒரு கூற்று அல்லது பதிலுக்கு நீங்கள் அழுத்தம் தர நினைக்கும் வேளைகளில் Indeed என்கிற வார்த்தையை பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு, நீங்கள் உங்களது விடுமுறை தினங்களை மிகவும் சந்தோசமாக அனுபவித்தீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது நீங்கள் அலுவலகத்திற்கு சென்று உங்களது நண்பரிடம் ‘உங்களது விடுமுறை எப்படி போயிற்று? எங்களுக்கு மிகவும் அருமையாக போயிற்று’ என்று கூறும்போது ‘எங்களுக்கு மிகவும் அருமையாக போயிற்று’ என்பதை அழுத்தமாக கூறிட நீங்கள் Indeed என்ற வார்த்தையை பயன்படுத்தலாம்.
Have you had a good holiday?’ ‘We have indeed
indeed என்கிற ஆங்கில வார்த்தை பயன்படுத்தப்பட்டு இருக்கும் சில ஆங்கில உரையாடல்கள் உங்களுக்காக,
I am happy, indeed proud, to be associated with this company.
Thank you very much indeed.
அதேபோல, indeed என்கிற வார்த்தையை எதிர்பாராத மகிழ்ச்சி அல்லது நிகழ்வு, கோவம், நம்பிக்கை சார்ந்த விசயங்களை குறிப்பிடவும் பயன்படுத்தலாம்.
When will we get a pay rise? “When indeed?”
இந்த உரையாடலில், எங்களுக்கு எப்போது சம்பள உயர்வு கிடைக்கும் என முதலில் கேட்டுவிட்டு When indeed? என கேட்கும்போது ‘உண்மையிலேயே எப்போது கிடைக்கும்?’ என மீண்டும் அழுத்தமாக கேட்க indeed பயன்படுத்தப்பட்டுள்ளது.