செய்திகளை மிக வேகமாக பகிர்ந்துகொள்ள உதவும் சமூக வலைதளங்களில் முன்னனி வகிப்பது ட்விட்டர் . ஆனாலும் ட்விட்டர் ஆப்பினை பயன்படுத்துவதில் சில சங்கடங்கள் பயனாளர்களுக்கு இருந்துவந்தது . இணைய வேகம் குறைவான நேரங்களில் லோடிங் பிரச்சனை , குறைந்த மெமரி கொண்ட போன்களில் இன்ஸ்டால் செய்வதில் பிரச்சனை , அதிகமாக டேட்டா வீணாகுதல் போன்றவை இருந்துவந்தன .
இதற்கு மாற்றாக ட்விட்டர் புதிய ஆப் ஒன்றினை கடந்த ஆண்டு வெளியிட்டது அதுதான் “Twitter Lite”. தற்போது 41 க்கும் மேற்பட்ட நாடுகளில் இதனை பயன்படுத்திட முடியும்.
ட்விட்டரின் அதிகாரப்பூர்வ பிளாக்கில் Twitter Lite App இன் சிறப்பான செயல்பாடுகள் கூறப்பட்டுள்ளன.
Data Saver
இணைய வேகம் மிக குறைவாக இருக்கும்பட்சத்திலும் இந்த ஆப் சிறப்பாக இயங்கும் . மேலும் இதில் இருக்கக்கூடிய “Data Saver ” ஆப்சனை ON செய்வதன் மூலமாக உங்களது டேட்டா வீணாவதை குறைக்க முடியும் . இந்த ஆப்சனை ON செய்வதனால் ட்விட்டரில் வரக்கூடிய இமேஜ் , வீடியோ போன்றவை நீங்களாக லோட் கொடுக்கும்வரை லோட் ஆகாது . வெறும் content மட்டுமே லோட் ஆகும் .
2G or 3G it doesn’t matter
வெறும் 766KB மட்டுமே கொண்ட ஆப்பானது இணைய வேகம் குறைவான நேரத்திலும் கூட மிக சிறப்பாக இயங்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது .
இதனை தவிர Bookmarks, Push Notifications, Night Mode ஆப்சன்களும் இந்த ஆப்பில் இருக்கின்றன.
Twitter Lite Google Play app is now available in all of the following countries: Algeria, Argentina, Bangladesh, Belarus, Bolivia, Brazil, Chile, Colombia, Costa Rica, Dominican Republic, Ecuador, Egypt, El Salvador, Ghana, Guatemala, Honduras, India, Indonesia, Israel, Jordan, Kazakhstan, Kenya, Lebanon, Malaysia, Mexico, Morocco, Nepal, Nicaragua, Nigeria, Panama, Paraguay, Peru, Philippines, Romania, Serbia, South Africa, Tanzania, Thailand, Tunisia, Turkey, Uganda, Ukraine, Uruguay, Venezuela, Yemen, and Zimbabwe.
TECH TAMILAN