உலகம் முழுமைக்கும் உள்ளவர்களுக்கு முகவரி சொல்லியாக இருப்பது கூகுள் மேப். யாரிடமும் வழி கேட்காமல் ஊர் பேர் தெரியாத இடத்திற்கும் சரியாக செல்ல முடிவதற்கு பேருதவியாக இருப்பது கூகுள் மேப். தற்போது கூகுள் மேப் இல் Speed Limit என்ற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி குறிப்பிட்ட சாலையில் செல்லும் போது அந்த சாலையில் அரசாங்கம் அனுமதித்துள்ள வேகம் எவ்வளவு என்பதை இனி கூகுள் மேப் இல் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
——————————————————————————————-
Advertisement:
——————————————————————————————–
Speed Limit Option in Google Map
ஜூலை 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ பே ஏரியாவிலும், பிரேசிலின் ரியோ டே ஜெனைரோ பகுதியிலும் மட்டும் இந்த ஸ்பீட் லிமிட் காட்டுகின்ற வசதி கொண்டுவரப்பட்டது. தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ், நியூயார்க் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ளவர்களுக்கும் இந்த வசதி காட்டியுள்ளது.
இந்த வசதியின் மூலமாக, சாலையில் பயணிக்கும் போது தவறுதலாக அதிக வேகத்தில் சென்று விபத்தில் சிக்கிக்கொள்வது, காவல்துறையிடம் சிக்கிக்கொள்வது தவிர்க்கப்படும்.
When Speed Limit Option released in India?
கூகுள் மேப் மிக துல்லியமாக வழித்தடங்களை காட்டுவதோடு மட்டுமல்லாமல் வாகன நெரிசல் விவரங்களையும் மிக துல்லியமாக காட்டுகிறது. இதன்மூலமாக மிகவும் எளிமையாக பயணம் செய்ய முடிகிறது. தற்போதைய கூகுள் மேப்பின் ஸ்பீட் லிமிட் வசதியும் நிச்சயமாக வாகன ஓட்டிகளுக்கு பேருதவியாக இருக்கும்.
ஆனால் வருத்தப்பட வேண்டிய செய்தி என்னவெனில், தற்போது அமெரிக்காவின் குறிப்பிட்ட சில மாகாணங்களில் மட்டுமே இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட உலகின் பிற பகுதிகளுக்கு இந்த வசதி எப்போது விரிவு படுத்தப்படும் என்பதை பற்றி கூகுள் நிறுவனம் அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.
விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்!
——————————————————————————————-
Advertisement:
——————————————————————————————–
TECH TAMILAN