Site icon Tech Tamilan

சாதித்த அமெரிக்கா | மனிதர்களுடன் ராக்கெட் அனுப்பி வரலாறு படைத்த ஸ்பேஸ்எக்ஸ் | elon musk | nasa

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபல்கான் 9 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டதை பார்க்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபல்கான் 9 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டதை பார்க்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபல்கான் 9 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டதை பார்க்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்

Congrats Elon

இது ஒரு புதிய சகாப்தம், மீண்டும் அமெரிக்க விண்வெளி வீரர்களை அமெரிக்க மண்ணில் தயாரான ராக்கெட் மூலமாக அமெரிக்க மண்ணில் இருந்து வெற்றிகரமாக அனுப்பி இருக்கிறோம் – நாசா நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் [NASA Administrator Jim Bridenstine]


https://youtu.be/21X5lGlDOfg

புளோரிடாவில் உள்ள கேப் கெனரவலில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பாப் பெக்கென்(49), டாக் ஹர்லி(53) என்ற இரண்டு விண்வெளி வீரர்களை சுமந்துகொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபல்கான் 9 ராக்கெட்[Falcon 9 rocket] விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அனைத்தும் திட்டமிட்டபடி நடந்துகொண்டிருக்கும் இந்த நிகழ்வில் விரைவில் இந்த இரு விண்வெளி வீரர்களும் பூமிக்கு மேலே சுழன்றுகொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை விரைவில் அடைவார்கள். 

உலகிலேயே சிறந்ததொரு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக அறியப்படுகிற நாசா, இந்த ராக்கெட் ஏவுதலை வெகு விமர்சியாக கொண்டாடுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் சாதாரண அமெரிக்க குடிமகன் வரைக்கும் இதனை பெருமையாக கருதுகிறார்கள். அப்படியென்ன இந்த ராக்கெட் ஏவுதலில் அத்தனை சிறப்பு? நிச்சயமாக இருக்கிறது. 

 

ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம்

கடந்த காலங்களில் த ஸ்பேஸ் ஷட்டில் [The Space Shuttle] தான் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரர்களை அழைத்துச்செல்லும் பணியினை மேற்கொண்டிருந்தது. ஆனால் 2011 ஆம் ஆண்டு அது ஓய்வு பெற்றதற்கு பின்பாக எந்தவொரு விண்கலத்திற்கும் மனிதர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச்செல்லும் தகுதி இருக்கிறது என சான்றிதழ் கிடைக்கவில்லை. ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மட்டும் தான் அத்தகைய சான்றிதழை வைத்திருந்தது. 

 

இதனால் அமெரிக்கா உட்பட எந்த நாடு தங்களுடைய விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பவேண்டி இருந்தாலும் கூட சோயூஸ் விண்கலத்தையே நம்பி இருக்கவேண்டிய தேவை இருந்தது. அமெரிக்கா தனது விண்வெளி வீரர்களை சோயூஸ் விண்கலம் மூலமாக அனுப்புவதற்கு அதிக கட்டணமும் செலுத்த வேண்டி இருந்தது. 

 

எலன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ்

எலன் மஸ்க் புதுமையை தேடிப்பிடிப்பதில் பேரார்வம் உடையவர். அவரைப்பற்றி நாம் நமது டெக் தமிழன் இணையதளத்தில் ஏற்கனவே கட்டுரை எழுதி இருந்தோம். நீங்கள் இங்கே கிளிக் செய்து படிக்கலாம். 

 

ஒவ்வொரு முறையும் சோயூஸ் விண்கலத்தை சார்ந்திருக்க வேண்டிய தேவை இருந்தபடியால் இந்த துறைக்குள் தனியாரை அனுமதித்தது அமெரிக்கா. எலன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இதில் முதல் நிறுவனமாக இணைந்துகொண்டது. நாசாவுடன் இணைந்து பல்வேறு சோதனைகளை மேற்கொள்ள ஆரம்பித்த எலன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தற்போது இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. 

உலகிலேயே ஒரு தனியார் நிறுவனம் விண்வெளி வீரர்களை சுமந்து செல்லும் ராக்கெட்டை விண்வெளியில் செலுத்தி இருப்பது இதுவே முதல்முறை. இதற்கு முன்பு அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற அரசு நிறுவனங்கள் தான் செய்தன. இந்த சாதனையை தற்போது ஸ்பேஸ்எக்ஸ் பிடித்துள்ளது.

 

Historic Test Flight of SpaceX Crew Dragon

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருக்கும் கென்னடி விண்வெளி வளாகத்தின் 39 ஏ என்ற இடத்தில் இருந்து  பாப் பெக்கென்(49), டாக் ஹர்லி(53) எனும் இரண்டு விண்வெளி வீரர்களை சுமந்துகொண்டு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபல்கான் 9 ராக்கெட் விண்ணில் பறந்தது. ராக்கெட் வெடித்தாலும் கூட விண்வெளி வீரர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடாமல் இருக்கும்படியான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 

 

19 மணி நேர பயணத்தைக்கொண்டது இந்த விண்வெளிப்பயணம். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலமாக இந்த விண்வெளிப்பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாசாவும் இந்த நிகழ்வை உன்னிப்பாக கவனித்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு உதவி செய்து வருகிறது. 8 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த நிகழ்வில் தவறு எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற அக்கறையினால் பார்த்து பார்த்து இந்த திட்டத்தை செய்து வருகிறார்கள். 

 

ஃபல்கான் 9 ராக்கெட்டின் முன்பக்கத்தில் இருக்கும் பகுதியில் தான் க்ரூ டிராகன் (Crew Dragon) பகுதி இருக்கும். மிகுந்த பாதுகாப்பு எச்சரிக்கையுடன் அமைக்கப்பட்ட இந்தப்பகுதியில் தான் விண்வெளி வீரர்கள் இருக்கிறார்கள். ஒருவேளை ராக்கெட் ஏவும் போது வெடித்தால் கூட விண்வெளி வீரர்களுக்கு எதுவும் ஆபத்து ஏற்படாமல் காக்கும் விதமாக உடனடியாக இந்தப்பகுதி தானே பிரிந்து சென்றுவிடும் அளவில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. 

 

இந்த வெற்றிகரமான பயணம் குறித்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் எலன் மஸ்க் பேசும்போது “எனது மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரது கனவும் தற்போது நிறைவேறி இருக்கிறது. இதற்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திலும் நாசாவிலும் உள்ளவர்கள் கடுமையாக உழைத்தார்கள். இந்த வெற்றிக்காக பலர் கடுமையாக உழைத்து இருக்கிறார்கள்” என்றார். 

 

கென்னடி விண்வெளி தளத்தில் இருந்து ராக்கெட் ஏவுதலை அமெரிக்க அதிபர் டிரம்ப் பார்த்தார். அதன்பிறகு பேசிய அவர் “இந்த நாள் நமக்கு வரலாற்று சிறப்பு மிக்க நாள். அமெரிக்க மக்கள், நாசா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த நிகழ்வைப் பார்த்தபோது உற்சாகமாக இருந்தது. ராக்கெட் பறக்கும்போது ஏற்பட்ட சத்தம், தீப்பிளம்பு பார்க்கவே மிரட்சியாக இருந்தது. இந்த பயணம் நாட்டுக்கு மிகப்பெரிய புத்துணர்ச்சியாக அமையும். நமது நாடு சிறப்பாக செயலாற்றி வருகிறது. கரோனாவால் நாம் பல துன்பங்களை அனுபவித்து வரும் நிலையில்இந்த பயணம் உற்சாகத்தை அளிக்கிறது” என்றார். 

 

அமெரிக்க மக்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடும் பாதிப்பை சந்தித்துக்கொண்டு இருக்கும் வேளையில் இந்த செய்தி அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 

எங்களது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து இணைந்திடுங்கள்



Get updates via whatsapp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version