AI Doctor
இன்னும் சில வருடங்களில் நீங்கள் மருத்துவமனைக்கு சென்றால் முதலில் உங்களது ரிப்போர்ட்டை ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மருத்துவரிடம் கட்டிவிட்டு வாருங்கள் என சொல்கிற நிலை உண்டாகும். அது நன்மைக்கே.
ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், மெஷின் லேர்னிங், சூப்பர் கம்ப்யூட்டர் என தொழில்நுட்பம் வளர்த்துக்கொண்டு தான் இருக்கிறது. இவை ஒரு சில துறைகளில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் குறித்துதான் நாம் பெரும்பாலும் அறிந்துவைத்து இருக்கிறோம். உதாரணத்திற்கு, ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் மூலமாக தானியங்கி கார்கள் வரப்போகின்றன என்பது மட்டும் தான் நாம் அறிந்து வைத்திருக்கும் செய்தி. ஆனால் இதே தொழில்நுட்பங்கள் பிற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளிலும் மாற்றத்தை உண்டாக்கப்போகின்றன என்பதே நிதர்சனம். இந்த பதிவில் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மூலமாக மருத்துவத்துறையில் ஏற்படப்போகும் மாற்றம் குறித்து தான் பார்க்க இருக்கிறோம்.
MIT யில் விரிவுரையாளராக இருக்கக்கூடிய ரெஜினா பார்ஸிலே தனக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டதற்கு சிகிச்சை பெற்றவுடன் அவரது புது திட்டம் உயிர் பெற்றது. ஒரு மருத்துவருக்கு திறன் இருந்தால் அவருக்கு பல ஸ்கேனிங் செய்யப்பட்ட தரவுகளை நியாபகம் வைத்துக்கொள்ளக்கூடிய திறன் இருந்தால் ஆரம்ப கட்டங்களில் எடுக்கப்படும் ஸ்கேனிங்கை பார்த்தே மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதனை கண்டறிந்துவிட முடியும் என்பது ரெஜினாவின் நம்பிக்கை. அதுதான் உண்மையும் கூட. ஆனால் உலகில் எண்ணற்ற மார்பக புற்றுநோய் நோயாளிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எண்ணற்ற ஸ்கேனிங் செய்யப்படுகின்றன.
ஒரு மருத்துவரால் அவரது நோயாளியின் ஸ்கேனிங் தரவை பார்த்து நியாபகத்தில் வைத்துக்கொள்ள முடியும். புதியதாக ஒருவர் வந்தால் முந்தைய நோயாளிக்கு இருப்பது போன்று இருக்கிறதா என தன்னிடம் இருக்கும் சில நூறு தாரவுகளோடு ஒப்பிட்டு கணிக்க முடியும். ஆனால் தரவுகள் கூட கூடத்தான் கணிப்புகள் உண்மையாகும் இது தான் உண்மை. ஆனால் தொழில்நுட்பம் இல்லாமல் இது சாத்தியமில்லை. ஏற்கனவே ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் துறையில் நிபுணத்துவம் பெற்றிருந்த ரெஜினாவிற்கு இந்த யோசனை எழவே அது குறித்த திட்டங்கள் தயாராகின. கிட்டத்தட்ட 90,000 XRAY தரவுகள் உள்ளீடாக கொடுக்கப்பட்டு ஒருவருக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என்பதனை அறியக்கூடிய ஒரு புரோகிராம் உருவானது.
மனிதர்களை காட்டிலும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் புரோகிராம் மிகச்சிறிய மறுபாடுகளைக்கூட மிக துல்லியமாக கவனிக்கும் திறன் வாய்ந்தது, ஆகவே பலன் தரும் என்பது ரெஜினாவின் கருத்து.
எத்தனை மிகச்சிறந்த தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டாலும் அவற்றால் மனிதர்களுக்கு உதவியாக இருக்க முடியுமே அன்றி மனிதர்களின் பங்களிப்பை முற்றிலுமாக நீக்கி விடாது. மருத்துவத்துறையிலும் அதே நிலை தான். இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
உலகம் முழுமைக்கும் கேன்சர் நோயினால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிர் இழக்கிறார்கள். இதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது ஆரம்ப காலகட்டங்களிலேயே நோய் தாக்குதல் தெரியாமல் இருப்பதனால் தான். இப்படிப்பட்ட ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டால் மிகக்குறைந்த செலவினத்தில் மிகவும் துல்லியமாக ஆரம்ப காலகட்டங்களிலேயே மக்களால் நோய் பாதிப்பினை அறிந்துகொள்ள முடியும். புற்றுநோய் மட்டும் இதில் அடங்காது பிற நோய்களையும் அறிந்துகொள்ளும் அளவிற்க்கான தொழில்நுட்பங்கள் கூடிய விரைவில் வரப்போகிறது.
நீங்கள் மருத்துவமனைக்கு சென்றால் முதலில் சந்திப்பது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மருத்துவராக இருக்கலாம் அல்லது நீங்கள் வீட்டில் இருந்தபடியே கூட உங்களது XRAY ஐ ஸ்கேன் செய்தும் கூட நோய்க்கான அறிகுறி இருக்கிறதா என்பதனை தெரிந்துகொள்ள முடியும்.
Read More : What is AI & Machine Learning?
Click Here! Get Updates On WhatsApp
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.