தமிழக இளைஞர்களுக்கு, தமிழக காவல்துறையில் உள்ள SI (Sub Inspector) பணியில் சேர வேண்டும் என்கிற ஆசை அதிகமாக இருக்கிறது. ஆனால், SI பணிக்கு என்ன படித்திருக்க வேண்டும், உடல் தகுதி என்ன இருக்க வேண்டும், எப்போது இந்தத் தேர்வு நடக்கும் என்பது போன்ற பல விசயங்கள் சரியாக தெரிவது இல்லை.
ஒருவேளை, அந்தத் தகவல்கள் அனைத்தும் தெரிந்து இருந்தால் நிச்சயமாக ஒவ்வொருவராலும் நிச்சயமாக SI பணியில் சேர முடியும். இந்தப்பதிவில், சப் இன்ஸ்பெக்டர் பணியில் சேர விரும்புகிறவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் இருக்கின்றன. இதுதவிர வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமெண்டில் பதிவிடுங்கள்.
சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தகுதி [SI Eligibility In Tamilnadu]
வயது :
வயது தகுதி | |
Category | Upper Age |
BC/BCM/MBC/DNC | 32 years |
SC/ST/SC(A)/Transgender | 35 years |
Destitute Widow | 37 years |
ESM/Ex-personnel of Central Para-military Forces/Serving personnel (Discharged from service within 3 years from the date of notification). Serving Military personnel who are going to retire within one year from the last date of receipt of online application. | 47 years |
Departmental candidates appearing for 20% departmental quota | 47 years |
கல்வித்தகுதி :
சப் இன்ஸ்பெக்டர் பணியில் சேருவதற்கு ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
உடற்தகுதி :
சப் இன்ஸ்பெக்டர் பணியில் சேருவதற்கு பின்வரும் உடற்தகுதியினை பெற்று இருப்பது மிக மிக அவசியம்.
உயரம் : OC, BC, BC(M), MBC/DNC பிரிவினரில் ஆண் (170 cm), பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் (159 cm) இருக்க வேண்டும். SC, SC (A), ST பிரிவினரில் ஆண் (167 cm), பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் (157 cm) இருக்க வேண்டும்.
மார்பு அளவீடுகள் : பொதுப்பிரிவினர் சாதாரண நிலையில் 81cm, மூச்சு உள்ளிழுக்கப்பட்ட நிலையில் விரிவாக்கம் 5 செ.மீ. இருக்க வேண்டும்.
இதுதவிர ஆண்கள், 1500 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்.பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 400 மீட்டர் தூரத்தை 2 நிமிடங்கள் 30 வினாடிகளில் ஓடி முடிக்க வேண்டும்.
இதில் தேர்வு செய்யப்படுகிறவர்கள் தான் உடற்திறன் போட்டிக்கு தேர்வாவார்கள்.
உடற்திறன் தேர்வு
(i) ஆண் விண்ணப்பதாரர்கள் :-
வ.எண் | நிகழ்வுகள் | பூஜ்ய நட்சத்திரம் (0 மதிப்பெண்) | ஒரு நட்சத்திரம் (2 மதிப்பெண்கள்) | இரு நட்சத்திரங்கள் (5 மதிப்பெண்கள்) | |
1 | கயிறு ஏறுதல் | 5.0 மீட்டருக்கு குறைவாக | 5.0 மீட்டர் | 6.0 மீட்டர் | |
2 | நீளம் தாண்டுதல் (அல்லது) உயரம் தாண்டுதல் | நீளம் தாண்டுதல் | 3.80 மீட்டருக்கு குறைவாக | 3.80 மீட்டர் | 4.50 மீட்டர் |
உயரம் தாண்டுதல் | 1.20 மீட்டருக்கு குறைவாக | 1.20 மீட்டர் | 1.40 மீட்டர் | ||
3 | 100 மீட்டர் ஓட்டம் (அல்லது) 400 மீட்டர் ஓட்டம் | 100 மீட்டர் ஓட்டம் | 15.00 வினாடிகளுக்கும் அதிகமாக | 15.00 வினாடிகள் | 13.50 வினாடிகள் |
400 மீட்டர் ஓட்டம் | 80.00 வினாடிகளுக்கும் அதிகமாக | 80.00 வினாடிகள் | 70.00 வினாடிகள் |
1. கயிறு ஏறுதல் மற்றும் நீளம் தாண்டுதல் / உயரம் தாண்டுதல் நிகழ்வுகளில் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படும்.
2. 100 மீட்டர் / 400 மீட்டர் ஓட்டம் ஆகிய நிகழ்வுகளில் ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும்.
(ii) பெண் மற்றும் திருநங்கை விண்ணப்பதாரர்கள்:
வ.எண் | நிகழ்வுகள் | பூஜ்ய நட்சத்திரம் (0 மதிப்பெண்) | ஒரு நட்சத்திரம் (2 மதிப்பெண்கள்) | இரு நட்சத்திரங்கள் (5 மதிப்பெண்கள்) | |
1 | நீளம் தாண்டுதல் | 3.0 மீட்டருக்கு குறைவாக | 3.00 மீட்டர் | 3.75 மீட்டர் | |
2 | குண்டு எறிதல் (அல்லது) கிரிக்கெட் பந்து எறிதல் | குண்டு எறிதல் | 4.25 மீட்டருக்கு குறைவாக | 4.25 மீட்டர் | 5.50 மீட்டர் |
கிரிக்கெட் பந்து எறிதல் | 17 மீட்டருக்கு குறைவாக | 17 மீட்டர் | 24 மீட்டர் | ||
3 | ஓட்டம் 100 மீட்டர் (அல்லது) 200 மீட்டர் | 100 மீட்டர் ஓட்டம் | 17.50 வினாடிகளுக்கும் அதிகமாக | 17.50 வினாடிகள் | 15.50 வினாடிகள் |
200 மீட்டர் ஓட்டம் | 38.00 வினாடிகளுக்கும் அதிகமாக | 38.00 வினாடிகள் | 33.00 வினாடிகள் |
i. நீளம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் / கிரிக்கெட் பந்து எறிதல் நிகழ்வுகளில் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படும்.
ii. 100 மீட்டர் ஓட்டம் / 200 மீட்டர் ஓட்டம் ஆகிய நிகழ்வுகளில் ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும்
iii.முன்னாள் இராணுவத்தினர் / இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள இராணுவவீரர்கள் / முன்னாள் மத்திய ஆயுத காவல் படையினர் (Ex-CAPF) / இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள மத்திய ஆயுத காவல்படையினர்.
வ.எண் | நிகழ்வுகள் | பூஜ்ய நட்சத்திரம் (0 மதிப்பெண்) | ஒரு நட்சத்திரம் (2 மதிப்பெண்கள்) | இரு நட்சத்திரங்கள் (5 மதிப்பெண்கள்) | |
1 | குண்டு எறிதல் (7.26 kg) | 5.0 மீட்டருக்கு குறைவாக | 5.0 மீட்டர் | 6.0 மீட்டர் | |
2 | நீளம் தாண்டுதல் (அல்லது) உயரம் தாண்டுதல் | நீளம் தாண்டுதல் | 3.25 மீட்டருக்கு குறைவாக | 3.25 மீட்டர் | 4.50 மீட்டர் |
உயரம் தாண்டுதல் | 0.90 மீட்டருக்கு குறைவாக | 0.90 மீட்டர் | 1.40 மீட்டர் | ||
3 | ஓட்டம் 100 மீட்டர் (அல்லது) 400 மீட்டர் | 100 மீட்டர் ஓட்டம் | 17.00 வினாடிகளுக்கும் அதிகமாக | 17.00 வினாடிகள் | 13.50 வினாடிகள் |
400 மீட்டர் ஓட்டம் | 85.00 வினாடிகளுக்கும் அதிகமாக | 85.00 வினாடிகள் | 70.00 வினாடிகள் |
i.குண்டு எறிதல் மற்றும் நீளம் தாண்டுதல் / உயரம் தாண்டுதல் நிகழ்வுகளில் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படும்.
ii. 100 மீட்டர் ஓட்டம் / 400 மீட்டர் ஓட்டம் ஆகிய நிகழ்வுகளில் ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும்.
இன்னும் விரிவாக தெரிந்துகொள்ள, தமிழக அரசின் இணையதளத்தில் படியுங்கள்.
SI பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ஆண்டுக்கு ஒருமுறை SI பணிக்கான எழுத்துத்தேர்வு நடைபெறும். இதற்கு https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் தான் விண்ணப்பிக்க வேண்டும். உதாரணத்திற்கு, 1000 SI பணிக்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது எனில் 5 மடங்கு அளவிலான நபர்களை எழுத்துத்தேர்வில் இருந்து தெரிவு செய்வார்கள். ஆகவே, 5000 பேர் அடுத்தகட்ட தேர்வுக்கு அனுப்பப்படுவார்கள். அங்கே தான், உடற்தகுதி உள்ளிட்ட மற்றவை அனைத்தும் நடக்கும்.
SI பணிக்கு தேர்வு செய்யப்படுகிறவர்களுக்கு 36,900 – 1,16,600 ருபாய் அளவில் சம்பளம் வழங்கப்படும்.