Site icon Tech Tamilan

VLC பிளேயரில் பாதுகாப்பு குறைபாடு | நீக்குமாறு அறிவுரை

vlc player security vulnerability

vlc player security vulnerability

Security Vulnerability

மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாட்டினை கொண்டிருக்கிறது VLC Player. தற்காலிகமாக uninstall செய்வதுதான் சிறந்தது.

கணினி உலகினை பொறுத்தவரைக்கும் மிகச்சிறந்த வீடியோ மற்றும் ஆடியோ பிளேயர்களில் ஒன்று VLC. கிட்டத்தட்ட அனைத்து தளங்களிலும் செயல்படும் விதமாகவும் இலவசமாகவும் கிடைப்பதனால் மிகபெரிய அளவில் சென்று சேர்ந்தது VLC. தற்போது அதில் இருக்கின்ற பாதுகாப்பு குறைபாட்டினை  ஜெர்மன் நாட்டை சேர்ந்த இணைய பாதுகாப்பு ஏஜென்சி கண்டறிந்து கூறியிருக்கிறது. தற்காலிகமாக உங்களது கணினி மற்றும் மொபைலில் இருக்கக்கூடிய VLC Player ஐ நீக்குவது தான் அவர்கள் தரும் ஆலோசனை.

ஜெர்மன் நாட்டை சேர்ந்த German security agency CERT-Bund நிறுவனம் VLC Player இல் பாதுகாப்பு குறைபாடு (vulnerability ) இருப்பதாக கண்டறிந்து கூறியிருக்கிறது. அதன்படி நீங்கள் VLC Player ஐ இன்ஸ்டால் செய்திருக்கின்ற கணினி அல்லது மொபைலில் உங்களது அனுமதி இல்லாமலே வேறொரு புரோகிராமை ஹேக்கர்களால் இன்ஸ்டால் செய்திட முடியும். அதிலிருந்து உங்களது கணினியில் இருக்கக்கூடிய தகவல்களை அவர்களால் பார்க்கவும் எடுத்துக்கொள்ளவும் முடியும் என கண்டறிந்து இருக்கிறார்கள்.

யாரும் இதுவரை பாதிக்கப்படவில்லை

ஆனால் இந்த பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி இதுவரைக்கும் எந்த தகவல் திருட்டும் நடைபெறவில்லை என தெரியவந்திருக்கிறது. அதே சமயம், VLC Player ஐ வடிவமைத்த நிறுவனமான VideoLAN , இந்த பாதுகாப்பு குறைபாட்டை நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றும் தற்போது அதனை சரி செய்வதற்கான வேலையில் ஈடுபட்டுக்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் தற்போது VLC Player ஐ இன்ஸ்டால் செய்து வைத்திருப்பவர்கள் தற்காலிகமாக uninstall செய்துகொள்ளுமாறும் பாதுகாப்பு குறைபாடு சரி செய்யப்பட்டவுடன் மீண்டும் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம் எனவும் அறிவுறுத்துகிறார்கள் இணைய பாதுகாப்பு வல்லுநர்கள்.

Read this also :

கோடிக்கணக்கான பேரின் பாஸ்வேர்டு 123456 | ஆய்வில் அதிர்ச்சி

Click Here 

உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? எப்படி தெரிந்துகொள்வது?

Click Here 





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version