Site icon Tech Tamilan

Samsung Galaxy Fold Smartphone Cancelled | சாம்சங் கேலக்சி போல்டு ஸ்மார்ட்போன் நிறுத்தம்

SAMSUNG_GALAXY_FOLD

SAMSUNG_GALAXY_FOLD

SAMSUNG_GALAXY_FOLD

Galaxy Fold Smartphone Cancelled

உலகின் முதல் Fold Smartphone என்ற பெருமையோடு களமிறங்கிய Samsung Galaxy Fold Smartphone விற்பனைக்கு வருவது நிறுத்தப்பட்டுள்ளது என சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அடுத்ததாக எப்போது விற்பனைக்கு வரும் எனவும் கூறப்படவில்லை.

சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக Samsung Galaxy Fold Smartphone விற்பனையை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிய வருகிறது. ஸ்மார்ட் போன் நேரடியாக வாடிக்கையாளர்களை சென்று சேர்வதற்கு முன்னதாக Reviewers மற்றும் சோதனை செய்யும் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டது. அவர்களிடமிருந்து அதிகப்படியான குறைகள் வந்தபடியால் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை நிறுத்தி இருக்கிறது சாம்சங் நிறுவனம்.

 

Samsung Galaxy Fold Smartphone ஐ வாங்குவதற்கு Pre Order ஏற்கனவே துவங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் சாம்சங் நிறுவனம் முக்கிய அறிவிப்பினை அறிவித்துள்ளது. அதன்படி, தொழில்நுட்ப பிரச்சனைகளை அறிந்தும் சில வாடிக்கையாளர்கள் எங்களது Samsung Galaxy Fold Smartphone ஐ வாங்க விருப்பம் தெரிவித்து உள்ளனர். அவர்களுக்கு இந்த ஸ்மார்ட் போன் அனுப்பி வைக்கப்படும். மே 31 ஆம் தேதிக்குள் அப்படி விருப்பம் தெரிவிக்காதவர்களின் ஆர்டர் கேன்சல் தானாகவே கேன்சல் செய்யப்பட்டு விடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

என்ன பிரச்சனை? இந்த போனை பயன்படுத்தும் போது screen’s protective layer தனியாக பிரிந்து வருகிறது. அப்படி வருவதை நாம் முழுமையாக நீக்கிவிட்டால் திரை செயல்படாமல் போய்விடுகிறது என்பது தான் பிரதானமான குற்றசாட்டு. அந்த லேயரை நீக்காமல் இருந்தாலும் சிறுது சிறிதாக போன் திரை செயலிழக்க துவங்குகிறது.

 

உலகின் முதல் Fold Smartphone இப்படி சோதனையை சந்தித்திருப்பது டெக் உலகில் பலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சில தொழில்நுட்ப மாறுதல்களுக்கு பிறகு மீண்டும் Fold Smartphone வருமா அல்லது நிறுத்தப்பட்டது நிறுத்தப்பட்டதுதானா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version